தி.மு.க ஓர் அறிமுகம்
....

img

தி.மு.க. வரலாறு

திராவிட இனமக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், திராவிட முன்னேற்றக்கழகத்தை (தி.மு.க.) 1949 செப்டம்பர் 17-ல் அறிஞர்அண்ணா தொடங்கினார். தி.மு.கழகத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்தின், மறுமலர்ச்சி இயக்கத்தின் வரலாறாகும். தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்த ஓர் அரசியல் இயக்கம் நடத்திய பேராட்டங்களின் தொகுப்பாகும்.

தென்னக மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், சர்.பி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் 1916-இல் தொடங்கிய தென் இந்திய நல உரிமைச்சங்கம், திராவிட இயக்கத்தின் கருவாகும். இச்சங்கம் `ஜஸ்டிஸ் (நீதி)’ என்ற ஆங்கில பத்திரிக்கை நடத்தியதால், நீதிக்கட்சி (Justice Party) என அழைக்கப்பட்டது. பிராமணர் அல்லாதாரின்சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதே நீதிக்கட்சியின் நோக்கம்.

மேலும் படிக்க ...

சமீபத்திய செய்திகள்

மழைக்காலம் தொடங்கி விட்டதால், உயிரிழப்பு ஏது ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, கொளத்தூர் தொகுதியில் மின் உபகரணங்களில் உள்ள பழுதுகளை நீக்கும் பணியில் மின்சாரத்துறையினர் முழு வீச்சில் ஈடுபட வேண்டுமென இன்றைய சட்டப்பேரவை ...

மேலும் படிக்க »

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'மாட்டிறைச்சி தடைச் சட்டம்' நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினை சந்தித்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாட்டிறைச்சி மீதான தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ...

மேலும் படிக்க »

கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் பூங்கா அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா என இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதனைத்தொடர்ந்து, ...

மேலும் படிக்க »

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "எல்லா வளமும் ...

மேலும் படிக்க »

வேலூர் மாவட்டம் கங்குந்தியில் ஆந்திர அரசு மேற்கொண்டு வரும் உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணிகளை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். இது தரைமட்டப்பாலம் என்று தெரிவித்தாலும், ...

மேலும் படிக்க »

நிகழ்வுகள்

சட்டப்பேரவையின் வைரவிழா நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் 94வது
  • இடம்: ஒய்.எம்.சி.ஏ. மைதானம், இராயப்பேட்டை, சென்னை - 14
  • தேதி : 03/06/2017
  • நேரம்: 05 : 00 : PM

கட்சியில் சேர்வதற்கு

அனைத்து பிரிவைச் சேர்ந்த குடிமக்களது வாழ்வின் தரத்தையும் உயர்த்தும் பணியில் திராவிட முன்னேற்ற கழகம் ஈடுபட்டுள்ளது. உலக அளவில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மதிப்புகளை பாதுகாக்கும் பணியில் கழகம் தொடர்ந்து ஈடுபடும். தி.மு.க. எப்போதும் ஒத்த கருத்துடைய இளைஞர்கள் அதன் பணியை முன்னெடுத்து செல்ல காத்திருக்கிறது. மதச்சார்பின்மை, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றின் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டவராக இருப்பின் தி.மு.க. உங்களை முழு மனதுடன் வரவேற்கிறது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வழித்தடத்தில் நடந்து செல்வோருடன் நீங்களும் கைகோர்த்திட விரும்புகிறீர்களா? அப்படியென்றால், இப்போதே ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து, தி.மு.க-வின் ஆன்லைன் உறுப்பினராகுங்கள்.

எங்களுடன் இணையவும்

dmk

விவரங்களை உள்ளிடவும்

+ =

படத்தொகுப்பு
.....