தி.மு.க ஓர் அறிமுகம்
....

தி.மு.க. வரலாறு

திராவிட இனமக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், திராவிட முன்னேற்றக்கழகத்தை (தி.மு.க.) 1949 செப்டம்பர் 17-ல் அறிஞர்அண்ணா தொடங்கினார். தி.மு.கழகத்தின் வரலாறு என்பது தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்தின், மறுமலர்ச்சி இயக்கத்தின் வரலாறாகும். தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் பாதுகாத்து மேம்படுத்த ஓர் அரசியல் இயக்கம் நடத்திய பேராட்டங்களின் தொகுப்பாகும்.

தென்னக மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், சர்.பி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் 1916-இல் தொடங்கிய தென் இந்திய நல உரிமைச்சங்கம், திராவிட இயக்கத்தின் கருவாகும். இச்சங்கம் `ஜஸ்டிஸ் (நீதி)’ என்ற ஆங்கில பத்திரிக்கை நடத்தியதால், நீதிக்கட்சி (Justice Party) என அழைக்கப்பட்டது. பிராமணர் அல்லாதாரின்சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதே நீதிக்கட்சியின் நோக்கம்.

மேலும் படிக்க ...

சமீபத்திய செய்திகள்

திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் உயிரிழப்பு விவரங்களை மறைத்தது போல் இல்லாமல் ஓகி புயல் பாதிப்பு விவரங்களை மத்திய ...

மேலும் படிக்க »

தேர்தல் களத்தில் வெற்றி பெற்றால் மக்கள் தந்த விருதாகவும், தோல்வி அடைந்தால் ஜனநாயகப் போர்க்களத்தில் பெற்ற விழுப்புண்ணாகவும் கருதும் பக்குவத்தை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைவர் கலைஞர் வழங்கியிருப்பதாகவும், ஜனநாயகம் புதைக்கப்பட்டு, ...

மேலும் படிக்க »

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஆர்.நல்லகண்ணு அவர்களின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தியாராயநகரில் ...

மேலும் படிக்க »

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக 6000 ரூபாய் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ...

மேலும் படிக்க »

நிகழ்வுகள்

சட்டப்பேரவையின் வைரவிழா நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் 94வது
  • இடம்: ஒய்.எம்.சி.ஏ. மைதானம், இராயப்பேட்டை, சென்னை - 14
  • தேதி : 03/06/2017
  • நேரம்: 05 : 00 : PM

கட்சியில் சேர்வதற்கு

அனைத்து பிரிவைச் சேர்ந்த குடிமக்களது வாழ்வின் தரத்தையும் உயர்த்தும் பணியில் திராவிட முன்னேற்ற கழகம் ஈடுபட்டுள்ளது. உலக அளவில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் மதிப்புகளை பாதுகாக்கும் பணியில் கழகம் தொடர்ந்து ஈடுபடும். தி.மு.க. எப்போதும் ஒத்த கருத்துடைய இளைஞர்கள் அதன் பணியை முன்னெடுத்து செல்ல காத்திருக்கிறது. மதச்சார்பின்மை, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றின் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டவராக இருப்பின் தி.மு.க. உங்களை முழு மனதுடன் வரவேற்கிறது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வழித்தடத்தில் நடந்து செல்வோருடன் நீங்களும் கைகோர்த்திட விரும்புகிறீர்களா? அப்படியென்றால், இப்போதே ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து, தி.மு.க-வின் ஆன்லைன் உறுப்பினராகுங்கள்.

படத்தொகுப்பு
.....