மழைநீர் வடிகால் கட்டும் பணியை கொளத்தூரில் தொடங்கி வைத்தார் தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 31/12/2016


கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.48.55 லட்சத்தை ஒதுக்கீடு செய்து, மழைநீர் வடிகால் கட்டும் பணியை கொளத்தூர் எம்.எல்.ஏ. தளபதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தளபதி, “வர்தா புயலால் விழுந்த மரங்களை முழுமையாக அகற்றவும், மாநகராட்சிக்கு சொந்தமான திடல்களில் போடப்பட்டு உள்ள மரங்களை அப்புறப்படுத்தி சுகாதார சீர்கேடு மேலும் பரவாமல் தடுக்கவும், தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயலாற்ற வேண்டும்” என்றார். 


Share this News: