கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் திருநாள் இடம்பெற வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 09/01/2017


தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பொங்கல் விடுமுறையை, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கட்டாய விடுமுறையிலிருந்து விருப்ப விடுமுறையாக மாற்றியுள்ளது. இதை, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்படும் பண்பாட்டுத் தாக்குதல் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 
அவர் கூறுகையில், “மத்திய அரசு உடனடியாக இந்த அறிவிப்பினைத் திரும்பப் பெறவேண்டும். கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் திருநாள் இடம்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். 


Share this News: