விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்சென்னை | 16/04/2017


சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்த அனைத்து கட்சி கூட்டம்  தி.மு.க. சார்பில் நடைபெற்றது. இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் கூறுகையில், "போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 25.4.2017 அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என்றும், அது குறித்து விளக்க அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் 22.4.2017 அன்று நடத்துவது என்றும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" என்றார்.


Share this News: