தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தளபதி மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதைசென்னை | 17/04/2017


தீரன் சின்னமலையின் 262-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடிய தீரன் சின்னமலை தமிழகத்திற்குள் மட்டும் அடைத்து விடக்கூடிய தலைவர் அன்றி, அவர் ஒரு தேசியத் தலைவர் என தளபதி கூறினார். மேலும், "தீரன் சின்னமலையின் 262-வது பிறந்த நாள் நடைபெறும் நேரத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுத்திருப்பது ஒரு சிறப்பு அம்சமாகவே நினைக்கிறேன். ஆனால், பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசிடமே தொடர்ந்து இருக்க வேண்டும்." என்றும் தளபதி தெரிவித்தார்.


Share this News: