மான்யக் கோரிக்கை விவாதத்திற்கு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின் கோரிக்கைசென்னை | 18/04/2017


தமிழக அரசின் (2017-18)-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன பின்பும் இன்னும் துறைவாரியான மான்யக் கோரிக்கைகள் பற்றி விவாதிக்க சட்டமன்றக் கூட்டம் கூட்டப்படவில்லை. இதனை கண்டித்துள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், தற்போதைய அதிமுக ஆட்சியில் நிர்வாகம் மட்டுமல்ல; நிதி நிலை அறிக்கையும் முடங்கிக் கிடக்கிறது என சாடியுள்ளார். இப்படியொரு அரசு நீண்ட நாள் நீடிப்பது தமிழக நலனுக்கோ, மக்களுக்கோ நல்லதல்ல என்று கூறிய தளபதி, ஆளுநர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மான்யக் கோரிக்கை விவாதத்திற்கு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். 


Share this News: