இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் – தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



சென்னை | 19/04/2017


குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால் தங்களது உரையையும் அறிக்கையையும் இந்தியில்தான் கொடுக்க வேண்டும் என்கிற நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விமானநிலைய அறிவிப்புகள், பத்திரிகை செய்திகள்-விளம்பரங்கள் எனப் பலவற்றிலும் இந்தியை பரவச் செய்யும் அம்சங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதுடன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்ளும் இந்தித் திணிப்பை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி கூறியுள்ளார்.


Share this News: