அதிமுக-வுக்குள் குழப்பம் ஏற்படுத்துவதை விடுத்து அமைச்சர்களின் ஊழலை வெளிக்கொண்டுவர மத்திய அரசு வகை செய்ய வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 20/04/2017


நெடுஞ்சாலைத் துறை ஊழல் புகழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், மணல் மாபியா சேகர் ரெட்டியின் கூட்டாளியான ஓ.பன்னீர்செல்வம் அணியும், தமிழக கருவூலத்தில் தாங்கள் விட்டுவைத்த மிச்ச சொச்சத்தையும் சுரண்டி எடுக்க, கைகோர்த்துக்கொண்டு சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "அதிமுக-வுக்குள் குழப்பம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் நலன் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் அதிமுக-வினர் தங்களுடைய ஊழல் ஆட்சியை தொடர்வதை மௌனமாக வேடிக்கை பார்ப்பதை விடுத்து, அதிமுக அமைச்சர்களின் ஊழலை வெளிக்கொண்டுவர வருமான வரித்துறையையும்; அமலாக்கத்துறையையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்." என்றார். 


Share this News: