எஞ்சியிருக்கும் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின் கோரிக்கைசென்னை | 15/05/2017


மெட்ரோ ரயில் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பது உலகறிந்த செய்தியாக இருக்க, ஜெயலலிதாதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் என்று திருமங்கலம்-நேரு பூங்கா சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் திட்டத் துவக்க விழாவில் முதல்வர் பேசியிருப்பதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேநேரம், எஞ்சியிருக்கின்ற மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொண்ட தளபதி, அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Share this News: