சட்டமன்றக் கூட்டத்தொடரை கூட்ட உத்தரவிட கோரி ஆளுநருக்கு தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை | 15/05/2017


தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு முதலமைச்சர் மற்றும் சபாநாயகருக்கு உத்தரவிட கோரி ஆளுநருக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி ஒப்புதல் அளிக்கவும், குடிநீர் பஞ்சம், நீட் தேர்வு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் போன்ற பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.  


Share this News: