கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட தாந்தோணியம்மன் கோயில் மற்றும் சிவன் கோயில் குளங்கள் தூர்வாரும் பணியை பார்வையிட்டார் தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 15/05/2017


கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அகரம் பகுதியில் அமைந்துள்ள தாந்தோணியம்மன் கோயில் குளம் மற்றும் சன்னதி தெருவில் உள்ள சிவன் கோயில் குளம் ஆகியவற்றை தூர்வாரும் பணிகளை கொளத்தூர் எம்.எல்.ஏ. தளபதி மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதி மக்கள் தளபதியை சந்தித்து, ஏரி;குளம் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும் திமுக-வுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். முன்னதாக, சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோதண்டராமர் கோயில் குளம் தூர்வாரும் பணி முழுமையாக தூர்வாரப்பட்டு, சீரமைக்கப்பட்டு இருப்பதை தளபதி மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.


Share this News: