திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை தளபதி மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்சென்னை | 17/05/2017


தமிழக முழுவதும் திமுக சார்பில் நடைபெற்று வரும் ஏரி-குளங்கள் தூர்வாரும் பணிகளின் ஒரு பகுதியாக, திருச்சியில் உள்ள தென்னூர் பெரிய நாச்சியம்மன் கோயில் குளத்தை தூர்வாரும் பணியை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கிட்டத்தட்ட 77 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கும் இந்த குளம் இன்றைக்கு திமுக-வின் சீரிய முயற்சியால் தூர் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தளபதி, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை அவர்களின் தொடர் போராட்டங்களின் காரணமாக வழங்கப்படவிருப்பதை வரவேற்றார். அதேநேரம், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கைகளில் இருக்கக்கூடிய மேலும் சில பிரச்சனைகளுக்கும் உடனடியாக மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்றும் தளபதி மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 
பின்னர், கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதிக்குட்பட்ட தோகமலை ஊராட்சி, நாகனூர் கிராமத்தில் உள்ள குளத்தை தூர்வாரும் பணியை பார்வையிட்ட தளபதி, கொசூர் ஊராட்சிக்குட்பட்ட நாதிப்பட்டி கிராமத்தில் பொக்லைன் இயந்திரத்தை இயக்கி வைத்து தூர்வாரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.


Share this News: