ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கான ஊக்கத்தொகையை வழங்காத அதிமுக அரசுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்சென்னை | 18/05/2017


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக திமுக பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த, 'மாணவியருக்கு ஊக்கத்தொகை' வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கூட அதிமுக அரசு அந்த மாணவிகளுக்கு வழங்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் உடனடியாக டெல்லி சென்று, மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள 2500 கோடி ரூபாய்க்கும் மேலான, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நிதியை பெற வேண்டும் என்றும் தளபதி கேட்டுக்கொண்டார். அதோடு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்துள்ள அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியருக்கும் 3000 ரூபாய் வைப்புத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Share this News: