மக்களின் பேராதரவுடன் மக்கள் விரோத அ.தி.மு.க ஆட்சியை அகற்றும் ஜனநாயகப் போர்க்களத்தை தி.மு.க. தலைமையேற்று வழிநடத்தும் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 12/06/2017


சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கோடிகளில் பணம் வாங்கியதன் ஆதாரத்தை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறுகையில், "ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துள்ள மக்கள் விரோத அ.தி.மு.க அரசு இனியும் நீடிப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும்." என்றார். மேலும், "ஆளுநர் முதல் குடியரசுத்தலைவர் வரை இந்திய அரசியல் அமைப்புக்குட்பட்ட அனைத்து உயர் பொறுப்புகளில் உள்ளோரிடமும் இதுகுறித்து முறையிடப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மன்றத்தில் இவர்களை அம்பலப்படுத்தி, மக்களின் பேராதரவுடன் இந்த ஆட்சியை அகற்றும் ஜனநாயகப் போர்க்களத்தை தி.மு.க. தலைமையேற்று வழிநடத்தும்." என்றும் அவர் தெரிவித்தார்.


Share this News: