நம்பிக்கை வாக்கெடுப்பு பேரம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அராஜகமாக வெளியேற்றம்சென்னை | 14/06/2017


நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களுக்கு அதன் இரு அணிகளின் சார்பில் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது தொடர்பாக ‘டைம்ஸ் நவ்’ வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை முன்வைத்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சபாநாயகரிடம் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயகர் அவர்கள் திமுக உறுப்பினர்களை பேச அனுமதிக்காததோடு, எல்லோரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். பின்னர் இந்த அராஜக போக்கை கண்டித்து சட்டப்பேரவை வளாகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள். மீண்டும் சர்வாதிகாரத்தோடு இந்த ஆட்சி நடப்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என இந்த நிகழ்வு குறித்து தளபதி மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், "குதிரை பேரம் நடத்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள அதிமுக அரசு உடனடியாக கலைக்கப்பட்டு, குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்திட வேண்டும்" என அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.


Share this News: