அண்டை மாநிலங்களுடனான நீர் பிரச்சனைகளை களையும் நடவடிக்கை தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் 'நதி நீர் பாதுகாப்பு' கமிட்டி அமைக்க வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின் கோரிக்கை



சென்னை | 15/06/2017


பாலாற்றில் ஆந்திர மாநில அரசு மேற்கொண்டிருக்கும் தடுப்பணைப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள வழக்கில் உச்சநீதிமன்றத்தை உடனடியாக அணுகி தடையுத்தரவைப் பெற வேண்டும் எனவும் அதிமுக அரசை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அண்டை மாநிலங்களுடனான நீர் பிரச்சனைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தமிழக அரசு தனியாக ஒரு 'நதி நீர் பாதுகாப்பு' கமிட்டியை அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Share this News: