ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புசென்னை | 19/06/2017


கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன் பூங்கா அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா என இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதனைத்தொடர்ந்து, நேரமில்லா நேரத்தில் (Zero Hour),  வருமான வரித்துறை ரெய்டு தொடர்பாக முதலமைச்சர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய தளபதி, வழக்கு விசாரணை நியாயமாக நடக்க வேண்டுமெனில் அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், ஜி.எஸ்.டி. மசோதாவை உடனே நிறைவேற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த மசோதாவை அதிமுக அரசு நிறைவேற்றியதைக் கண்டித்து, அவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


Share this News: