மாட்டிறைச்சி தடைச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர தளபதி மு.க.ஸ்டாலின் கோரிக்கைசென்னை | 20/06/2017


மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'மாட்டிறைச்சி தடைச் சட்டம்' நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினை சந்தித்து, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாட்டிறைச்சி மீதான தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், திமுக ஆட்சிகாலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உருவான புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் திறப்புவிழாவில் பங்கேற்கவிருந்த கழக சட்டமன்ற உறுப்பினர்களை காவல்துறை மூலம் அராஜகமாக கைது செய்த, அதிமுக அரசு மீது தளபதி அவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.


Share this News: