தீரன் சின்னமலையின் உயரிய லட்சியங்களையும், கொள்கைகளையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டிசென்னை | 03/08/2017


சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்களின் 212வது நினைவுநாளை முன்னிட்டு  சென்னை, கிண்டியில் அமைந்துள்ள, தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு  தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னலமற்ற பொதுவாழ்வினை மேற்கொண்டு, பல்வேறு அரிய கருத்துகளை, கொள்கைளை எல்லாம் எடுத்துச் சொன்னது மட்டுமல்லாமல், தன்னுடைய வாழ்நாளில் அவற்றைத் தொடர்ந்து கடைபிடித்தவரான தீரன் சின்னமலை அவர்களின் லட்சியத்தையும், கொள்கைகளையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென்றார்.  அவருடைய லட்சியங்களில் மிகச்சிறந்த ஒன்றாக விளங்கிய, “அந்தந்த மாநிலங்களில் வசூலிக்கப்படக் கூடிய வரியை, அந்தந்த மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும், அந்தந்த மாநில மக்களுக்கும் பயன்படுத்த வேண்டும்”, என்ற கொள்கையை உயர்ந்த நோக்கத்தோடு அவர் எடுத்துக் காட்டியிருக்கிறார் என்றும் புகழாரம் சூட்டினார்.


Share this News: