ஆட்சியைத் தக்கவைக்க எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்தும் - வழக்குகளில் இருந்து தப்பிக்க மத்திய அரசிடம் அதிமுக அரசு மண்டியிட்டுள்ளது தளபதி மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுசென்னை | 03/08/2017


கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டின் மூலமும், மக்களின் தேவைகளை சட்டமன்றத்தில் பலமுறை எடுத்துச் சொன்னதன் அடிப்படையில் நடைபெற்று வருகின்ற பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளிடத்தில் விரைந்து முடிக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால் இன்றைக்கு செயல்படாத அதிமுக ஆட்சியால் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் முடங்கிப் போயிருக்கின்றது. ஆட்சியைத் தக்கவைக்க எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்தும் - வழக்குகளில் இருந்து தப்பிக்க மத்திய அரசிடம் அதிமுக அரசு மண்டியிட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.


Share this News: