தனியார் மர வியாபாரிகளுடன் ‘சிண்டிகேட்’ அமைத்து குறைந்த விலைக்கு ‘சில்வர் ஓக்’ மரங்களை விற்க வனத்துறை அமைச்சர் முயற்சிக்க கூடாது : தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்சென்னை | 04/08/2017


தனியார் மர வியாபாரிகளுடன் ‘சிண்டிகேட்’ அமைத்து குறைந்த விலைக்கு ‘சில்வர் ஓக்’ மரங்களை விற்க வனத்துறை அமைச்சர் முயற்சிக்க கூடாது” என்று தளபதி மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக அண்ணாவால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘சில்வர் ஓக்’ மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு தமிழக அரசு திரைமறைவில் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், அதிகாரிகளும் இணைந்து இந்த திட்டத்தை வகுத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. தேயிலை உற்பத்தி, பச்சை தேயிலை அறுவடை எல்லாமே அதிமுக ஆட்சியில் குறைந்தது மட்டுமின்றி, பணியாளர்கள் எண்ணிக்கையும் குறைந்து இன்றைக்கு தேயிலை தோட்டக் கழகமே அதிமுக ஆட்சியில் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். இந்நிலையில் அங்குள்ள ‘சில்வர் ஓக்’ மரங்களையும் வெட்டி வீழ்த்துவது என்ற ‘குதிரை பேர’ அதிமுக அரசின் திட்டத்திற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


Share this News: