பெரும்பான்மையை இழந்துவிட்ட ‘குதிரை பேர’ அரசின் கொள்கை முடிவுகளுக்கும் – ஊழல்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயல் என தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம் சென்னை 06-09-2017 முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22 ஆம் தேதியிலிருந்து இந்த அமைச்சரவை பெரும்பான்மையை இழந்து விட்டது என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல் உலகத்திற்குத் தெரிய வந்துவிட்டது என்று கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், “அது உள்கட்சி பிரச்சினை”, என்று கூறி, இந்த அரசை நீடிக்க வைப்பதற்கு அரசியல் உள்நோக்கத்துடன் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாண்புமிகு ஆளுநர் அவர்களும் நீண்ட அமைதி காப்பது அரசியல் சட்ட விரோதம் மட்டுமல்ல, சட்டமன்ற ஜனநாயகத்திற்கே உலைவைக்கும் கேலிக்கூத்தாகும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேபோல, இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கோ அல்லது கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு உதவி செய்வதற்கோ, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயல் இப்படி மைனாரிட்டி நிலைக்குச் சுருங்கிவிட்ட ‘குதிரை பேர’ அதிமுக ஆட்சியாளர்களின் ஊழல் - கொள்ளை நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்திடக் கூடாதென்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.



சென்னை | 06/09/2017


முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22 ஆம் தேதியிலிருந்து இந்த அமைச்சரவை பெரும்பான்மையை இழந்து விட்டது என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல் உலகத்திற்குத் தெரிய வந்துவிட்டது என்று கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், “அது உள்கட்சி பிரச்சினை”, என்று கூறி, இந்த அரசை நீடிக்க வைப்பதற்கு அரசியல் உள்நோக்கத்துடன் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாண்புமிகு ஆளுநர் அவர்களும் நீண்ட அமைதி காப்பது அரசியல் சட்ட விரோதம் மட்டுமல்ல, சட்டமன்ற ஜனநாயகத்திற்கே உலைவைக்கும் கேலிக்கூத்தாகும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேபோல, இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கோ அல்லது கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு உதவி செய்வதற்கோ, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயல் இப்படி  மைனாரிட்டி நிலைக்குச் சுருங்கிவிட்ட ‘குதிரை பேர’ அதிமுக ஆட்சியாளர்களின் ஊழல் - கொள்ளை நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்திடக் கூடாதென்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.


Share this News: