மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம்சென்னை | 06/09/2017


மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, சமூக ஆர்வலரும், பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கவுரி லங்கேஷ் அவர்களின் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன். வலதுசாரி அமைப்புகளால், இந்திய பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. கொலைகாரார்களை கைது செய்ய வேண்டும் என்றும், பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Share this News: