மோசடி ஆட்சியை அப்புறப்படுத்தத் தயாராவோம் - கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முழக்கம்சென்னை | 05/09/2017


திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முரசொலி பவளவிழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, முரசொலி பவளவிழா காட்சியரங்கம், கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பவளவிழா வாழ்த்தரங்க நிகழ்வுகளை சிறப்ப்பாக நடத்திட காரணமாக அமைந்த அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். அரியலூர் பகுதியை சேர்ந்த மாணவி அனிதா, சமூகநீதிக்காக போராடிய திராவிட இயக்கம் பிறந்த இந்த மண்ணில் நாம் அனிதாவை நாமெல்லாம் பலிகொடுத்திருக்கிறோம். இவ்வளவு கட்சித் தலைவர்கள் இருக்கிறோம், கட்சிகள் இருக்கிறோம், இப்படி இருக்கும் ஒரு சூழ்நிலையில், கையாலாகாத ஒரு மாநில அரசு, சமூகநீதியை குலைக்கக்கூடிய ஒரு மத்திய அரசுடன் கைகோர்த்திருக்கும் காரணத்தால் நாம் அனிதாவை இழந்திருக்கிரோம். என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்றார். இன்றைக்கு மத்தியில் ஒரு மிருக பலத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் காரணத்தால், எப்படியாவது மத அடிப்படை வாதத்தை இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் பரப்பிட வேண்டும், குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவின் பிளவைப் பயன்படுத்தி, எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிட்டு, பிஜேபி ஆட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல நரேந்திர மோடி அவர்கள் பிரதமராவதற்கு முன்பு அறிவித்த எந்த அறிவிப்புகளை நிறைவேற்றவில்லையென் குற்றம் சாட்டினார். ஆகையால் மத்தியில் அமைந்திருக்கும் பிஜேபி ஆட்சியானது மோடி ஆட்சியல்ல, வெறும் மோசடி ஆட்சிதான். இந்தியாவில் நடக்கும் இந்த மோசடி ஆட்சியை அப்புறப்படுத்தத் தயாராவோம் என்றார்.


Share this News: