திமுக தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நாளைய தினம் வெளியானதும் திமுகவின் முடிவை அறிவிப்போம் என தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டிசென்னை | 19/09/2017


திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கழக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில், முதல் தீர்மானமாக  அரசுவிழாக்களை அரசியல் மேடையாக்கும் குதிரை பேர அரசுக்கும் தலைமைச்செயலாளர்-காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது தீர்மானமாக ஆளுநர் - முதல்வர் - சபாநாயகரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயாராக இருக்கிறது. இந்த ஆட்சியை அப்புறப்படுத்த மக்களும் தயாராக இருக்கிறார்கள் என்றும், இந்த ‘குதிரை பேர’ ஆட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் இந்த அரசுக்கு எதிராக வாக்களித்து, செயல்பட்டபோது நடவடிக்கை எடுக்காமல், இப்போது 18 பேர் மீது மட்டும் அரசியல் சட்ட விரோதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நாளைய தினம் வெளியானதும் திமுகவின் முடிவை அறிவிப்போம் என்றார்.


Share this News: