மாநில அரசு நிதியை சீரழித்தது போல், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சொத்துக்களையும் சூறையாடி, தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு ’குதிரை பேர’ அதிமுக அரசு தடைக்கல்லாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது - கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கைசென்னை | 12/11/2017


அரசு போக்குவரத்துக் கழகங்களின் கட்டடங்கள், பேருந்துகள், பணிமனைகள் உள்ளிட்டவற்றை 2453 கோடி ரூபாய்க்கு அடகு வைத்து ’குதிரை பேர’ அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏழை எளிய நடுத்தர மக்களின் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில்  இப்படி மோசமான நிர்வாகக் குளறுபடிகள் ’குதிரை பேர’ அதிமுக ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையளிப்பதாக கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்துக் கழகத்தின்  490 பேருந்துகள் 44.27 கோடி ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. அயனாவரம், மந்தைவெளி பணிமனைகள் 12 கோடி ரூபாய்க்கும், போக்குவரத்துக் கழகக்தின் ஒர்க்‌ஷாப், பேசின்பாலம், தி.நகர், திருவான்மியூர், அண்ணா நகர், அம்பத்தூர் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் எல்லாம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே, தமிழகத்தை 5 லட்சம் கோடிக்கு மேல் கடனில் மூழ்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ’குதிரை பேர’ அரசு, இப்போது அரசு போக்குவரத்துக் கழகங்களின் சொத்துக்களையும் அடகு வைத்து, அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியங்களை எல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகச் செலவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகத்தையே மீட்கமுடியாத படுகுழியில் தள்ளிவிட்டது.ஆகவே அடகு வைக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், பணிமனைகளை உடனடியாக மீட்டுப் புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Share this News: