உயிர் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர்களை நடுத்தெருவில் போராட விட்டிருக்கிறது குதிரைபேர அதிமுக அரசு: தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்சென்னை | 28/11/2017


உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை இப்படி நடுத்தெருவிற்கு வந்து போராட விட்டிருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும்  முதலமைச்சருக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நோயால் வாடும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையும், ஆறுதலும் அளித்திடும் செவிலியர்கள் 'குதிரை பேர' அதிமுக அரசின் அலட்சியத்தால் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்துக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 2015-ஆம் ஆண்டு மருத்துவத் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் நிரந்தரம் செய்யாமல், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் தன் மீதுள்ள வருமான வரித்துறை விசாரணைகளை சரிசெய்வதற்காக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் என்றால், பணியாளர் விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய மருத்துவத்துறை அதிகாரிகளும், சுகாதாரத்துறைச் செயலாளரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.   ஏற்கனவே பல்வேறு துறைகளில் நடைபெறும் நியமனங்களில் மிக மோசமான குளறுபடிகள் நடக்கின்றன. ஆகவே, அமைச்சர்களின் நியமன ஊழல்களுக்குத் துணைபோவது மட்டுமே தங்கள் கடமை என்று இருக்காமல், செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக அரசு துறைச்செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.


Share this News: