நீதிக்கட்சியின் தள கர்த்தர்களில் ஒருவரான சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மகன் மறைவிற்கு தளபதி மு.க.ஸ்டாலின் இரங்கல்சென்னை | 28/11/2017


திராவிட அரசியல் இயக்கத்தின் மூலாதார அமைப்பான நீதிக்கட்சியின் தள கர்த்தர்களில் ஒருவராக திகழ்ந்த சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மகனும், புகழ்பெற்ற கண் மருத்துவருமான இ.டி.செல்வம் 93ம் வயதில் இயற்கை எய்திய செய்தி கேட்டு வேதனையடைவதாக கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கருணாநிதி மீது நன்மதிப்பு கொண்ட கண் மருத்துவர் இ.டி.செல்வம் மருத்துவ துறையில் சிறந்து விளங்கி, பலருக்கும் கண்ணொளி வழங்கியவர். அரசு கண் மருத்துவமனையின் கண் காணிப்பாளராகவும், சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.   அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் மருத்துவப் பணியை தொடர்ந்து, மேற்கொண்டு அப்போலோ மருத்துவமனையில் கண் மருத்துவ துறைத் தலைவராக இருந்தவர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரின் புதல்வர் என்ற உணர்வு மாறாமல் அனைத்துத் தரப்பு மக்க ளுக்கும் சிகிச்சை அளித்த இ.டி.செல்வம் மறைவு மருத்துவ துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் துயருற்று வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மருத்துவ துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


Share this News: