ஆந்திராவில் திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தினை அறிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வாழ்த்துசென்னை | 28/11/2017


திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 'திருநங்கை' என்று பெயர் சூட்டிய தலைவர் கலைஞர் அவர்களின் சார்பாக, ஆந்திராவில் திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த இதுபோன்ற கொள்கைகளை வகுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்"என்று அதில் தெரிவித்துள்ளார்.


Share this News: