Announcement - DetailPage - DMK
header_right
newimg
புதுச்சேரி முதல்வர் தாயார் மறைவுக்கு கழக தலைவர் இரங்கல்...

பதிவு: 24 Nov 2018, 11:21:22 மணி

மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் திரு நாராயணசாமி அவர்களின் தாயார் ஈஸ்வரி அம்மாள் அவர்கள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, தன்னை ஈன்றெடுத்த தாயாரை இழந்த வேதனையிலிருக்கும் புதுவை முதல்வர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.