Announcement - DetailPage - DMK
header_right
newimg
வெள்ள பாதிப்புகளை சரிபடுத்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கழகத் தலைவர் வலியுறுத்தல்

பதிவு: 24 Nov 2018, 11:27:11 மணி

டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தவித நிவாரணப் பணிகளும் அவர்கள் திருப்தி அடையக்கூடிய வகையில் இதுவரை நடைபெறவில்லை. நியாயமாக முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த டெல்டா மாவட்டத்திலேயே முகாமிட்டு இந்தப் பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும், முறைப்படுத்த வேண்டும்.

நான் நேற்றைய தினம் சொன்னதைப்போல டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாய சங்கப் பிரதிநிதிகள், பொது நலச்சங்கங்கள் அந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய அந்த மாவட்டங்களைச் சார்ந்து இருக்கக்கூடிய அரசியல் கட்சியினுடைய தலைவர்கள் அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து உடனடியாக அவர்களுடன் கலந்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தி இந்தப் பணிகளை இன்னும் எப்படி முறைப்படுத்துவது, வேகப்படுத்துவது என்பது பற்றி ஆராய வேண்டும் என்று நான் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வலியுறுத்துகிறேன்."