Announcement - DetailPage - DMK
header_right
newimg
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்கிட மாநில அரசு வலியுறுத்த வேண்டும்

பதிவு: 26 Nov 2018, 12:17:31 மணி

கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் ”கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிவாரணத்திற்கு மாநில அரசு கேட்டிருக்கும் 15 ஆயிரம் கோடி ரூபாய் போதாது; உடனடியாக முதற்கட்ட நிவாரணத் தொகையை மத்திய அரசு அறிவிப்பதோடு, மக்களை காக்க நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்கிட மாநில அரசு வலியுறுத்த வேண்டும்” என்று கூறினார்.