Announcement - DetailPage - DMK
header_right
மொழிப் போர் தியாகிகள் நாளில் தியாகிகளின் படத்திற்கு மரியாதை செலுத்திடுக! மாவட்டக் கழகச் செயலாளர்களுக்குக் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

பதிவு: 24 Jan 2022, 12:56:19 மணி

மொழிப் போர் தியாகிகள் நாளில் தியாகிகளின் படத்திற்கு மரியாதை செலுத்திடுக!
 
மாவட்டக் கழகச் செயலாளர்களுக்குக்
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
 
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக  சனவரி 25-ஆம் நாள் - மொழிப்போர் தியாகிகள் நாளில் எப்போதும்போல் வீரவணக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே, இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு அன்னைத் தமிழ்மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் படத்தினை மாவட்டக் கழக அலுவலகங்களில் மலர்களால் அலங்கரித்து வைத்து, கழக மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் - முன்னோடிகள் - நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்.