
லஞ்ச ஒழிப்புத்துறையின் தவறுகளைச் சுட்டிக்க
பதிவு: 24 Oct 2018, 12:38:59 மணி
சென்னை, அக். 24- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி யின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினா மிகளின் நிறு வனங்களுக்கு அரசின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்ட விரோதமாக வழங்கப்பட்டு பல கோடி ரூபாய் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது குறித்து சிறப்புப் புலன் விசாரணைக்கு உத்தர விடக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் கழக அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது நேற்று விசாரணை நடை பெற்றது. அப்போது ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, லஞ்ச ஒழிப்புத் துறையின் தவறு களைச் சுட்டிக்காட்டி வாதிட்டார்.