DMK DISTRICT WISE ELECTION MANIFESTO - 2021
சட்டப்பேரவைத் பொதுத்தேர்தல் - 2021
திராவிட முன்னேற்றக்
கழகத்தின்
தேர்தல்
அறிக்கையினைத்
தயாரிக்க
அமைக்கப்பட்ட
குழுவினர்
1. டி.ஆர்.பாலு,
எம்.பி.
- ஒருங்கிணைப்பாளர்
2. சுப்புலட்சுமி
ஜெகதீசன்
3. ஆ.ராசா,
எம்.பி.
4. அந்தியூர்
ப.செல்வராஜ்,
எம்.பி.
5. கனிமொழி,
எம்.பி.
6. திருச்சி
சிவா, எம்.பி.,
7. டி.கே.எஸ்.இளங்கோவன்,
எம்.பி.
8. பேராசிரியர்
அ.இராமசாமி
தி.மு.க. தேர்தல் அறிக்கை-2021
மாவட்டங்கள்
1. அரியலூர்
2. செங்கல்பட்டு
3. சென்னை
4. கோயம்புத்தூர்
5. கடலூர்
6. தருமபுரி
7. திண்டுக்கல்
8. ஈரோடு
9. கள்ளக்குறிச்சி
10. காஞ்சிபுரம்
11. கன்னியாகுமரி
12. கரூர்
13. கிருஷ்ணகிரி
14. மதுரை
15. மயிலாடுதுறை
16. நாகப்பட்டினம்
17. நாமக்கல்
18. நீலகிரி
19. பெரம்பலூர்
20. புதுக்கோட்டை
21. இராமநாதபுரம்
22. இராணிப்பேட்டை
23. சேலம்
24. சிவகங்கை
25. தென்காசி
26. தஞ்சாவூர்
27. தேனி
28. தூத்துக்குடி
29. திருச்சி
30. திருநெல்வேலி
31. திருப்பத்தூர்
32. திருப்பூர்
33. திருவள்ளூர்
34. திருவண்ணாமலை
35. திருவாரூர்
36. வேலூர்
37. விழுப்புரம்
38. விருதுநகர்
அரியலூர் மாவட்டம்
1.ஜெயங்கொண்டம்
அனல்மின் நிலையம்
மற்றும் முந்திரி
ஆராய்ச்சி நிலையம்
தொடங்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
2.அரியலூரில்
ஒருங்கிணைந்த
மாவட்ட நீதிமன்ற
வளாகம் கட்டப்படும்.
3.அரியலூர்,
செந்துறை அரசு
பொது மருத்துவமனைகள்
நவீனப்படுத்தப்படும்.
4.செந்துறை
ஒன்றியத்தில்
முந்தைய தி.மு.க. ஆட்சியில்
கொண்டு வரப்பட்ட
கூட்டுக் குடிநீர்
திட்டம் முழுமையாக
நிறைவேற்றப்படும்
5.நதியனூர்
கூட்டுக் குடிநீர்
திட்டம் மேலும்
விரிவுபடுத்தப்படும்.
6.செந்துறை
வட்டம் அயன்தத்தனூர்
அருகே ஆனைவாரி
நீர்ததக்கம் அமைக்கப்படும்.
7.செந்துறையில்
முந்திரி பழச்சாறு
தயாரிக்கும் தொழிற்சாலை
நிறுவப்படும்.
ஒழுங்குமுறை
விற்பனைக் கூடம்
கட்டப்படும்.
8.வெள்ளாறு,
கொண்டைக்காரன்
ஓடை, செங்கல்
ஓடை, கருவாட்டு
ஓடை, பொன்னாறு,
தலைப்பாறு ஆகியவற்றில்
தடுப்பணைகள் கட்டப்படும்.
9. கொள்ளிடம்
கூட்டுக் குடிநீர்
திட்டம் விரிவுபடுத்தப்பட்டு,
நிறைவேற்றப்பட்டு
ஜெயங்கொண்டம்
ஒன்றியத்தில்
உள்ள அனைத்துக்கிராமங்களுக்கும்
குடிநீர் வசதி
வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
10. கீழபழுவூர்
மற்றும் ஜெயங்கொண்டத்தில்
குளிர்பதனக் கிடங்குகள்
அமைக்கப்படும்.
11. திருமானூரில்
பெண்கள் அரசு
கலை அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
12. செந்துறையில்
அரசு பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும்.
13. அரியலூரில்
அதிக வசதிகளுடன்
புதிய பேருந்து
நிலையம் கட்டப்படும்.
14. அம்மாகுளம்
குறுக்குச்சாலை
அருகே அரியலூர்
சுற்றுச் சாலையில்
மேம்பாலம் கட்டப்படும்.
15. கொள்ளிடம்
ஆற்றின் குறுக்கே
திருமழப்பாடி,
திருமானூர்,
ஏலாக்குறிச்சி,
தூத்தூர்,
திருபுரந்தான்,
தென்கச்சி ஆகிய
இடங்களிலும்;
மருதையாற்றின்
குறுக்கே ஆரனூரிலும்
தடுப்பணைகள் கட்டப்படும்.
16. மொழிப்போர்
தியாகி சின்னசாமி
அவர்களுக்குக்
கீழபழுவூரில்
சிலை நிறுவப்படும்.
17.மருதையாற்றில்
பெருக்கெடுத்து
ஓடும் வெள்ள நீரை
வெங்கனூர் ஏரிக்குத்
திருப்பிவிட புதிய
கால்வாய் அமைக்கப்படும்.
18. அரியலூர்
வட்டம் விளாங்குடியில்
திருச்சி சிதம்பரம்
தேசிய
நெடுஞ்சாலையில்
மேம்பாலம் கட்டப்படும்.
19. உடையார்
பாளையத்தில் முந்திரிப்பருப்பு
தொழிற்சாலை அமைக்கப்படும்.
20.தா.பழூரில் பெண்களுக்கான
தொழிற்பயிற்சி
நிலையம் தொடங்கப்படும்.
21. சித்தேரி
மற்றும் ஓடப்பேரி
ஆறுகள் தூர்வாரப்படும்.
22.அரியலூர்
மாவட்டத்தில்
உள்ள சிமெண்ட்
தொழிற்சாலைகளில்
அந்த மாவட்ட மக்கள்
வேலைவாய்ப்புகள்
பெற நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
23. அரியலூரில்
சிமெண்ட் தொழில்
சார்ந்த தொழிற்பேட்டை
அமைக்கப்படும்.
24.அரியலூரில்
சுமை ஏற்றிச்
செல்லும் லாரிகள்
ஒழுங்குமுறை மையம்
மற்றும் லாரிகள்
நிறுத்துமிடம்
அமைக்கப்படும்.
25.ஆண்டிமடம்
மற்றும் திருமானூரில்
தீயணைப்பு நிலையங்கள்
அமைக்கப்படும்.
26.பளிங்காநத்தத்திலும்,
குவாகத்திலும்,
செந்துறை ஒன்றியம்
முள்ளுக்குறிச்சியிலும்
கால்நடை மருத்துவமனைகள்
தொடங்கப்படும்.
27.ஜெயங்கொண்டத்தில்
பாதாள சாக்கடை
திட்டம் கொண்டு
வரப்படும்.
28.ஜெயங்கொண்டத்தில்
காகிதத் தொழிற்சாலை
தொடங்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
29. மருதையாற்றின்
குறுக்கே தா.பழூரில் மேம்பாலம்
கட்டப்படும்.
30. செந்துறையில்
பருத்தி கொள்முதல்
நிலையம் தொடங்கப்படும்.
31. செந்துறை
வட்டம் சன்னாசி
நல்லூர் கூட்டாத்து
மூலையில் வெள்ளாற்றில்
தடுப்பணை அமைக்கப்படும்.
32.அரியலூர்
மாவட்டத்தில்
சிமெண்ட் ஆலைகளுக்கு
இயக்கப்படும்
கனரக வாகனங்களால்
ஏற்படும் தொடர்
விபத்துகளைத்
தடுக்க மாவட்டம்
முழுவதும் சாலைகள்
அகலப்படுத்தப்பட்டு,
சென்டர்மீடியன்
அமைக்கப்படும்.
33. அரியலூர்
நகரின் கிழக்குப்
பகுதியில் அமைந்துள்ள
அரை முழு சுற்றுவட்டப்
பாதையாக விரிவுபடுத்தப்படும்.
1.
செங்கல்பட்டு மாவட்டம்
1. மதுராந்தகத்தில்
அரசு கலை அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
2. வேடந்தாங்கல்
பறவைகள் சரணாலயத்தின்
நிலம் பாதுகாக்கப்படுவதுடன்
சர்வதேசப் பறவைகளும்
சுற்றுலா பயணிகளும்
வருகை புரிந்திடும்
வகையில் உள்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்த
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
3. செங்கல்பட்டில்
மகளிர் அரசு கலை
அறிவியல் கல்லூரி
தொடங்கப்படும்.
4. செங்கல்பட்டில்
அரசு மருத்துவமனை
பல்நோக்கு மருத்துவமனையாகத்
தரம் உயர்த்தப்படும்.
5.
பழவேலி - பாலாறு
குடிநீர் திட்டம்
செயல்படுத்தப்படும்.
6.
ஒரகடத்தில்
ரயில்வே மேம்பாலம்
கட்ட ஆவன செய்யப்படும்.
7.
தாம்பரம்
நகராட்சி மாநகராட்சியாகத்
தரம் உயர்த்தப்படும்.
8. சிங்கபெருமாள்கோவில்
பேரூராட்சி நகராட்சியாகத்
தரம் உயர்த்தப்படும்.
9.வண்டலூர்
மற்றும் ஊரப்பாக்கம்
இணைக்கப்பட்டு
நகராட்சியாக மாற்றப்படும்.
10.பாலாற்றிலிருந்து
மதுராந்தகத்திற்குக்
குடிநீர் வழங்க
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
11. மதுராந்தகத்தில்
தொழிற்பேட்டை
அமைக்கப்படும்.
12. மெட்ரோ
ரயில் சேவை மீனம்பாக்கத்திலிருந்து
வண்டலூர் வரை
நீட்டிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
13.பறக்கும்
ரயில் சேவை (MRTS)
வேளச்சேரியிலிருந்து
தாம்பரத்திற்கு
நீட்டிக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
14.
வேளச்சேரி - தாம்பரம்
முதன்மைச் சாலையில்
மேடவாக்கம் சந்திப்பிலும்;
வண்டலூர் சாலை
- ராஜீவ்காந்தி
சாலை சந்திப்பிலும்;
முகாம்சாலை
சந்திப்பிலும்
மேம்பாலங்கள்
கட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
15. கேளம்பாக்கம்
ஊராட்சியில் ராஜீவ்
காந்தி சாலையிலிருந்து
வண்டலூர் சாலை
வரையில் சுற்றுப்புறச்
சாலை அமைக்கப்படும்.
16. செங்கல்பட்டில்
அரசு பொறியியல்
கல்லூரி மற்றும்
கால்நடை மருத்துவக்
கல்லூரி தொடங்கப்படும்.
சென்னை மாவட்டம்
1.சென்னை
பெருநகரில் மழைக்
காலத்தில் வெள்ளமெனக்
தேங்கி நிற்கும்
தண்ணீரை வெளியேற்ற
போர்க்கால நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
2.அண்ணாநகர்,
தண்டையார்பேட்டை
அரசு மருத்துவமனைகள்
நவீனப்படுத்தப்படும்.
3. புளியந்தோப்பு
ஆட்டுத்தொட்டி
நவீனப்படுத்தப்படும்.
4.சென்னை
மக்களின் குடிநீர்
தேவைகள் நிறைவு
செய்யப்படும்.
5.கொளத்தூர்
தொகுதியில் வண்ண
மீன் பண்ணைகள்
வளர்ச்சிக்குத்
தேவையான வசதிகள்
செய்து தரப்படும்.
மேலும் வண்ண
மீன்கள் ஆராய்ச்சி
நிலையம் ஒன்றும்
அமைக்கப்படும்.
6.அம்பத்தூர்,
முகப்பேரில்
மின்தகன வசதிகள்
செய்து தரப்படும்.
7.சென்னையில்
சிதைந்து போன
குடிசைமாற்று
வாரிய வீடுகள்
மீண்டும் கட்டித்தரப்படும்.
8.சென்னையில்
உள்ள டோபிகானாக்கள்
நவீனப்படுத்தப்படும்.
9.கொடுங்கையூரில்
உள்ள குப்பைக்
கிடங்கு நகருக்கு
வெளியே அமைக்கப்படும்.
10.பெரம்பூர்
தொகுதியில் தாய்சேய்
நல மருத்துவமனை
கட்டப்படும்.
11.காட்டன்
கேப்டன் கால்வாய்,
கொடுங்கையூர்
கால்வாய், வியாசர்பாடி
கால்வாய் ஆகியவற்றில்
வெள்ளத்தடுப்புச்
சுவர் அமைக்கப்படும்.
12.இராயபுரம்,
வண்ணாரப்பேட்டை,
தண்டையார்பேட்டையில்
டோபிக்கானாக்கள்
அமைக்கப்படும்.
அங்குப் பணியாற்றுபவர்களுக்கு
அருகில் உள்ள
குடிசைமாற்று
வாரிய குடியிருப்புகளில்
வீடுகள் ஒதுக்கப்படும்.
13.காசிமேடு
அருகில் கடல்நீரைக்
குடிநீராக்கும்
திட்டம் நிறைவேற்றப்படும்.
14.நேதாஜி
நகர், கே.கே.நகர்களில்
ஆரம்ப சுகாதார
நிலையங்கள் தொடங்கப்படும்.
15. நேரு நகர்,
சத்தியா நகர்,
கொருக்குபேட்டை
, எழில் நகர்
முதலிய பகுதிகளில்
ஆரம்ப சுகாதார
நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
16.புதிய
வண்ணாரப்பேட்டை,
கொருக்குப்பேட்டையில்
உள்ள தாய்சேய்
நல விடுதி நவீனமாக்கப்படும்.
17.ஆர்.கே. நகர் தொகுதியில்
24-மணிநேரமும்
செயல்படக் கூடிய
அரசு மருத்துவமனை
கட்டப்படும்.
18.வடக்கு
பெரம்பூரில் தொழிற்பயிற்சி
நிலையம் தொடங்கப்படும்.
19.கொடுங்கையூர்
- யூனியன் கார்பைடு
குடியிருப்பில்
சமுதாயக் கூடம்
அமைக்கப்படும்.
20.கிழக்கு
ஆர்.கே. நகரில் எவர்சில்வர்
பாத்திரங்கள்
தயாரிப்பதற்கென்று
தனியாகத் தொழிற்பேட்டை
அமைக்கப்படும்.
21.குயில்தோட்டத்தில்
ஆரம்ப சுகாதார
நிலையம் அமைக்கப்படும்.
22.மாம்பலம்
புகைவண்டி நிலையத்தில்
இருந்து தியாகராய
நகர் பேருந்து
நிலையம் வரையில்
பறக்கும் மேம்பாலம்
அமைக்கப்படும்.
23.தியாகராய
நகர், கண்ணகி
நகர், செம்மஞ்சேரி,
வேளச்சேரி,
மூலக்கடை,
மாதவரம், மதுரவாயல்,
நொச்சிக்குப்பத்தில்
அரசு மருத்துவமனை
தொடங்கப்படும்.
24.சிங்காரவேலர்
நகரில் பேருந்து
நிலையம் அமைக்கப்படும்.
25.சென்னைப்
பெருநகரில் பாதாள
சாக்கடை வசதி
இல்லாத அனைத்துப்
பகுதிகளிலும்
பாதாள சாக்கடை
திட்டம் நிறைவேற்றப்படும்.
26.சென்னைப்
பெருநகரில் ரயில்வே
பாதைகள் குறுக்கிடும்
இடங்களிலும்,
போக்குவரத்து
நெரிசலைக் குறைக்கும்
வகையிலும், தேவையான இடங்கள்
அனைத்திலும் மேம்பாலங்கள்
கட்டப்படும்.
27.சென்னைப்
பெருநகரில் உயர்
மின்கோபுர மின்வழித்தடம்
புதைவட மின் வழித்தடமாக
மாற்றப்படும்.
28.சென்னைப்
பெருநகரில் தேவையான
இடங்களில் சமுதாயக்
கூடங்கள் கட்டப்படும்.
29.திருவொற்றியூரில்
தொழிற்பூங்கா
அமைக்கப்படும்.
30.சென்னைப்
பெருநகரில் தேவையான
இடங்களில் விளையாட்டுத்
திடல்கள் உடற்பயிற்சிக்
கூடங்கள், பூங்காக்கள்
அமைக்கப்படும்.
ஏற்கனவே உள்ளவை
தரம் உயர்த்தப்படும்.
31.சென்னைப்
பெருநகரில் மேலும்
பல இடங்களில்
நூலகங்கள் அமைக்கப்படும்.
32.சென்னைப்
பெருநகரில் சிற்றுந்து
(Mini bus) சேவை அதிகப்படுத்தப்படும்.
33.சென்னைப்
பெருநகரில் அனைத்துப்
பகுதிகளுக்கும்
பாதுகாக்கப்பட்ட
சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் வழங்க
ஏற்பாடுகள் செய்யப்படும்
34.சென்னைப்
பெருநகரில் உள்ள
அனைத்து ஏரிகளும்
தூர்வாரப்பட்டு,
கழிவுநீர் கலக்காமல்
தூய்மைப்படுத்தப்படும்.
35.சென்னைப்
பெருநகரில் ஆடு,
மாடு இறைச்சிக்
கூடங்கள் மேம்படுத்தப்படும்.
36.கொளத்தூரில்
அரசுப் பெண்கள்
கலை மற்றும் அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
37.கொளத்தூர்
நூறடி சாலையில்
தகவல் தொழில்நுட்பப்
பூங்கா அமைக்கப்படும்.
38.தாலுகா
தலைமை அலுவலகம்
கொளத்தூரில் அமைக்கப்படும்.
39.கொளத்தூர்
மையப் பகுதியை
இணைக்கும் வகையில்
மெட்ரோ ரயில்
வசதி விரிவுபடுத்தப்படும்.
40.கொளத்தூர்
தொகுதியில் உள்ள
குமரன் நகர்,
அயனாவரம்,
பெரியார் நகர்,
திரு.வி.க. நகர் பேருந்து
நிலையங்கள் கூடுதல்
பேருந்து வசதிகளுடன்
நவீனமாக்கப்படும்.
41கொளத்தூரில்
உழவர் சந்தை தொடங்கிவைக்கப்படும்.
42.கொளத்தூர்
நூறடி சாலையில்
அமைந்துள்ள குடிநீரேற்றும்
நிலையம் தரம்
உயர்த்தி மேம்படுத்தப்படும்.
43.திருவொற்றியூரில்
அரசு பொறியியல்
கல்லூரி தொடங்கப்படும்.
44.திருவொற்றியூர்
மேற்கு பகுதியில்
அரசு மேல்நிலைப்
பள்ளி தொடங்கப்படும்.
45.கோட்டூர்புரத்தில்
உள்ள அண்ணா நூலகம்
போல் வடசென்னையிலும்
ஒரு பெரிய நூலகம்
அமைக்கப்படும்.
46.செங்குன்றத்தில்
விபத்து மற்றும்
அவசர சிகிச்சைப்
பிரிவுக்கான மருத்துவமனை
அமைக்கப்படும்.
47.மாதவரத்தில்
பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும்.
48.நெற்குன்றத்தில்
கால்நடை மருத்துவமனை
அமைக்கப்படும்.
49.மாதவரம்
லட்சுமிபுரத்தில்
சமுதாயக் கூடம்
அமைக்கப்படும்.
50.தலைவர்
கலைஞர் ஆட்சிக்
காலத்தில் தொடங்கப்பட்டு
அ.தி.மு.க. ஆட நிறுத்தி
வைக்கப்பட்ட மதுரவாயல்
- துறைமுகம்
உயர்மட்ட சாலை
தி முழுமையாக
நிறைவேற்றப்பட
நடவடிக்கை எடுக்கப்படும்.
51.ரயில்வே
மூன்றாவது முனையம்
மூன்றாவது முனையம்
தண்டையார்பேட்டையில்
அமைக்கப்பட முயற்சிகள்
மேற்கொள்ளப்படும்.
52.மாதவரம்
சென்னை மாநகராட்சி
மண்டலம் 3-ல்
அரசு மகப்பேறு
மருத்துவமனை அமைக்கப்படும்.
53.மாத்தூர்
உயர்நிலைப் பள்ளி
மேல்நிலைப் பள்ளியாக
மேம்படுத்தப்படும்.
54.திருவொற்றியூரில்
சிறு மற்றும்
குறுந்தொழில்களுக்கான
தொழிற்பேட்டை
அமைக்கப்படும்.
55.மோரை ஊராட்சியில்
கால்நடை மருத்துவமனை
அமைக்கப்படும்.
56.சோழவரம்
முதல்நிலை ஊராட்சி
துணை சுகாதார
நிலையம் கிளை
நூலகக் கட்டடத்திற்கு
மாற்றப்படும்.
57.மீனவர்களின்
வாழ்வாதாரத்தைப்
பாதிக்கும் காட்டுப்பள்ளி
அதானி துறைமுகம்
விரிவாக்கும்
பணிகளைத் தடுத்து
நிறுத்த ஆவன செய்யப்படும்.
58.எண்ணூர்
முகத்துவாரத்தில்
உள்ள மணல்திட்டு
அகற்றப்பட்டு
ஆழப்படுத்தப்படும்.
59.கத்திவாக்கத்தில்
மகப்பேறு மருத்துவமனை
அமைக்கப்படும்.
60.எண்ணூர்
அரசு நடுநிலைப்
பள்ளி உயர்நிலைப்
பள்ளியாகத் தரம்
உயர்த்தப்படும்.
61.திருவொற்றியூர்
அரசு மருத்துவமனை
நவீனமாக்கப்படும்.
62.புழல்
ஒன்றியம் தீர்த்தகிரியம்பட்டில்
அரசுப் பள்ளி
தொடங்கப்படும்.
63.தீர்த்தகிரியம்பட்டில்
ஆரம்ப சுகாதார
நிலையம் அமைக்கப்படும்.
64.மாதவரம்
23-வது வார்டில்
பெண்கள் மேல்நிலைப்
பள்ளி அமைக்கப்படும்.
65.பாடியநல்லூர்
பாலாஜி நகரில்
ஈஸ்வரன் கோவில்
அருகிலுள்ள ஏரியில்
கழிவுநீர் கலப்பது
தடுத்து நிறுத்தப்படும்.
66.பு.எ.பாளையம்
மேட்டுப்பாளையம்
இடையே குசஸ்தலை
ஆற்றின் குறுக்கே
தடுப்பணை கட்டப்படும்.
67.எம்.ஜி.ஆர். நகர் மார்கெட்
கே.கே. சாலையில்
உள்ள குப்பைக்
கிடங்கு அகற்றப்படும்.
68.கே.கே. நகர் அரசு
புறநகர் மருத்துவமனை
நவீனப்படுத்தப்படும்.
69.மதுரவாயலில்
அரசு கலை அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
70.மதுரவாயல்
147-வது வட்டத்தில்
அரசு மருத்துவமனை
அமைக்கப்படும்
71.மதுரவாயல்
147-வது வட்டம்
கங்கை அம்மன்
கோயில் குளம்
ஆழப்படுத்தப்பட்டு,
சுற்றுச்சுவர்
அமைக்கப்படும்.
72.பள்ளிக்கரணை
சதுப்பு நிலப்பகுதி
பறவைகள் சரணாலயமாக
மேம்படுத்தப்படும்.
73.சோழிங்கநல்லூர்
மற்றும் அதைச்
சுற்றியுள்ள பகுதியிலிருந்து
மழைநீரானது ஒக்கியம்
மடுவுவரை செல்ல
மிகப்பெரிய அளவில்
மழைநீர் கால்வாய்
அமைக்கப்படும்.
74.மடிப்பாக்கம்
ஏரியில் படகுக்
குழாம் அமைக்கப்படும்.
75.பள்ளிக்கரணை
மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து
துரைப்பாக்கம்
200 அடி சாலை வழியாக
பக்கிங்காம் கால்வாய்
செல்ல பெரிய அளவில்
மழைநீர் கால்வாய்
அமைக்கப்படும்.
76.மேடவாக்கம்
பகுதியிலிருந்து
மழைநீரானது பக்கிங்காம்
கால்வாய் வரை
செல்ல பெரிய அளவில்
கால்வாய் அமைக்கப்படும்.
77.கோயம்பேடு
வணிக வளாகத்தில்
சுமைதூக்கும்
தொழிலாளர்களுக்கு
ஓய்வறை மற்றும்
முதலுதவி சிகிச்சை
மையம் அமைத்துத்தரப்படும்
78.சென்னை
மாநகராட்சி எல்லைக்குள்
செயல்படும் சுங்கச்
சாவடிகளை அகற்ற
முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
79.வேளச்சேரி
ஏரி தூய்மைப்படுத்தப்பட்டு
படகு சவாரி செல்ல
ஏற்பாடுகள் செய்யப்படும்.
80.சென்னையில்
குடிநீர்ப் பஞ்சம்
ஏற்படாமல் தடுக்க
செங்கல்பட்டு
மாவட்டத்தில்
புதிதாக ஏரி ஒன்று
உருவாக்கப்பட
ஆவன செய்யப்படும்.
81.கண்ணகி
நகரில் பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும்.
82.வேளச்சேரி
ராம் நகர் ஆறாவது
பிரதான சாலை
13-வது மெயின்
தரைப்பாலம் உயர்த்தி
அமைக்கப்படும்.
83.சின்னத்திரை
நடிகர்களுக்கு
வீட்டு மனைகள்
வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும்.
84.சோழிங்கநல்லூரில்
அரசு மருத்துவமனை
அமைக்கப்படும்
85.சோழிங்நல்லூர்
தொகுதி நன்மங்கலம்
எரி தூமைப்படுத்தப்பட்டு
படகுகள் விடப்படும்.
86.கோவிலம்பாக்கம்
ஊராட்சி இருநூறு
அடி ரேடியல் சாலையில்
ஈச்சங்காடு முதல்
நாராயணபுரம் ஏரி
வரையில் சாலை
மின்விளக்கு அமைக்கப்படும்
87.வடநெம்மிலி
கடல்நீரைக் குடிநீராக்கும்
திட்டம் புனித
தோமையர் மலை தெற்கு
ஒன்றியத்திற்கு
விரிவுபடுத்தப்படும்.
88.வேளச்சேரி
தண்டீசுவரம் நகரில்
உள்ள திடல் விளையாட்டுத்
திடலாக மாற்றப்படும்.
89.OMR சாலையில்
அரசு பொது மருத்துவமனை
அமைக்கப்படும்.
90.ஈக்காட்டுத்தாங்கலில்
சிட்கோ தொழிற்பேட்டை
அமைக்கப்படும்.
91.நெற்குன்றம்
- மீனாட்சி அம்மன்
நகர், பெரியார்
நகரில் குடியிருப்போர்
பிரச்சனை சம்பந்தமாக
உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
92.ஐ.ஐ.டி. கிருஷ்ணா
விடுதி வாயில்
தீண்டாமைச் சுவரை
அகற்ற உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
93.எவர்சில்வர்
பாத்திரங்கள்
உற்பத்தி செய்பவர்களுக்கு
என்று தனியாக
தொழிற்பேட்டை
அமைத்துத் தரப்படும்.
94.அம்பத்தூர்
டி.ஐ. சைக்கிள்
தொழிற்சாலை அருகில்
உள்ள ரயில்வே
மேம்பாலம் விரிவுபடுத்தப்பட
ஆவன செய்யப்படும்.
95.காய்கறிகளுக்குக்
கோயம்பேட்டில்
பெரிய சந்தை அமைக்கப்பட்டதைப்
போல் மீன்கள்
விற்பனைக்கும்
பெரிய சந்தை அமைக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
96.சிந்தாதிரிப்பேட்டையில்
மே தின விளையாட்டு
மையம் மீண்டும்
அமைக்கப்படும்.
97.தியாகராய
நகர் கிரியப்பா
சாலையில் தாய்சேய்
நல மருத்துவமனை
அமைக்கப்படும்.
98.சென்னையில்
உள்ள குடிசைப்
பகுதிகளில் அடுக்குமாடி
குடியிருப்புகள்
கட்டப்படும்.
99.ஜாம்பஜார்
மார்கெட்டைச்
சீர்படுத்திப்
பல அடுக்குக்
#2965;ாய்கறி மற்றும்
மீன் மார்கெட்
கட்டப்படும்.
100.அண்ணாசதுக்கம்
மணற்பரப்பு சிறுகடை
வியாபாரிகள் பிரச்சனைகளைத்
தீர்க்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
101.மக்கிஸ்
கார்டன் பேகம்
சாகிம் தெருவில்
மருத்துவமனை மீண்டும்
நடவடிக்கை எடுக்கப்படும்.
102.சென்னையில்
போக்குவரத்து
நெரிசலைத் தவிர்க்க
சாலையோரம் உள்ள
கடைகளுக்கு மாற்றாக
அரசு வணிக வளாகங்கள்
கட்டித் தரப்படும்.
103.சென்னைக்கு
அருகே அமைய உள்ள
துணைக்கோள் நகரில்
ஆட்டோ நகர் அமைக்கப்படும்.
104.அமைந்தகரை
கலக்டரேட் காலனியில்
குடியிருப்போர்
நலச் சங்கத்திற்கு
ஒதுக்கப்பட்ட
கட்டடத்தை மீண்டும்
அவர்களுக்கே ஒப்படைத்து,
காலனியில் குறைபாடுகள்
நீக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
105.செனாய்
நகரில் தமிழறிஞர்
டாக்டர் மு. வரதராசனார்
அவர்களுக்கு மணி
மண்டபம் கட்டப்படும்.
106.நெல்சன்
மாணிக்கம் சாலையில்
போக்குவரத்து
நெரிசலைக் குறைக்கத்
தேவையான இடங்களில்
அடையாள விளக்குகள்
(Signal Lights) அமைக்கப்படும்.
107.மாதவரம்,
புழல், செங்குன்றம்,
திருவொற்றியூர்,
மணலி, சோழவரம்,
வில்லிவாக்கம்
ஆகிய பகுதிகளில்
இசுலாமியர்களுக்கும்,
கிறித்தவர்களுக்கும்
அடக்க ஸ்தலம்
அமைத்திட தனித்தனியே
இடம் ஒதுக்கீடு
செய்யப்படும்.
108.செங்குன்றம்
அரிசி வியாபாரத்திற்கு
வரும் நூற்றுக்கணக்கான
வாகனங்களை நிறுத்துவதற்கு
இடவசதிக்காக நடவடிக்கை
எடுக்கப்படும்.
109.செங்குன்றம்
பகுதியில் உள்ள
மெக்கானிக் ஷெட்டுகளுக்குத்
தனியாக நிலம்
ஒதுக்கித் தரப்படும்.
110.மாதவரம்
ரவுண்டானா முதல்
சோழவரம் டோல்கேட்
வரை உயர்மட்ட
மேம்பாலம் அமைத்துத்
தரப்படும்.
111.சோழவரத்தில்
உள்ள பாடியநல்லூர்,
நல்லூர் அலமாதி
சோழவரம், வில்லிவாக்கம்
ஒன்றியத்தில்
மோரை வெள்ளாநூர்,
பம்மதுகுளம்,
பாலவேடு ஊராட்சிகளில்
20,000க்கும் மேல்
மக்கள் வசிப்பதால்
அவை பேரூராட்சிகளாகத்தரம்
உயர்த்தப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டம்
1. ஆனைமலை
நல்லாறுநீர்த்தேக்கத்திட்டம்
நிறைவேற்றப்படும்.
2. வால்பாறையில்
பெய்யும் மழைநீர்
கேரளாவுக்குச்
செல்லாமல் தடுக்கப்பட்டு எடமலை
நீர்த்தேக்கத்
திட்டம் நிறைவேற்றப்படும்; அதன் மூலம்
ஒரு லட்சம் ஏக்கர்
நிலம் நீர்ப்பாசன
வசதி பெற வழிவகுக்கப்படும்.
3. திருப்பூர் - ஈரோட்டில் நீர்ப்பாசன
வசதிகளைப் பெருக்குவதற்காக
மேல் அமராவதிநீர்த்தேக்கத்திட்டம்
நிறைவேற்றப்படும்.
4. பொள்ளாச்சி
மற்றும் நீலாம்பூர்
மேட்டுப்பாளையத்தில்
புறவழிச் சாலைகள்
அமைக்கப்படும்.
5. பொள்ளாச்சி - கோயம்புத்தார்;
பொள்ளாச்சி
- பழனி நான்கு
வழிச்சாலை அமைக்க
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
6. பம்பு
செட்டு சோதனை
ஆய்வகம் கோயம்புத்தூரில்
அமைக்கப்படும்.
7. பொள்ளாச்சியில்
தொழிற்பயிற்சி
நிலையம் மற்றும்
செவிலியர் பயிற்சிப்
பள்ளி தொடங்கப்படும்.
8. பவானி - நொய்யல் ஆறு
- அமராவதி - உப்பாறு இணைப்புத்
திட்டம் செயல்படுத்தப்பட
நடவடிக்கை எடுக்கப்படும்.
9. காந்திபுரம் - உக்கடம் சந்திப்பு
மேம்பாலம் கட்டப்படும்.
10. ஒண்டிப்புதூர்
முதல் சுங்கச்சாவடி
வரையிலும் மற்றும்
சூலூரிலும் பறக்கும்
மேம்பாலம் கட்டப்படும்.
11. கோவை
குற்றாலத்தில்
சுற்றுலா வசதிகள்
மேம்படுத்தப்படும்.
12.மேட்டுப்பாளையத்தில்
வாழை ஆராய்ச்சி
மையம் அமைக்கப்படும்.
13. கிணத்துக்கடவு, ஆலந்துறை, தொண்டாமுத்தூரில்
குளிர்பதனக் கிடங்குகள்
அமைக்கப்படும்.
14.வாகன நிறுத்தும்
இடம், 2500 சதுர
அடிக்கு உட்பட
கட்டடங்களுக்கான
வரைபட அனுமதி
(Plan Approval) கோயம்புத்தூரிலேயே
வழங்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
15.பாலக்கோடு
ரயில்வே மண்டலத்துடன்
இணைக்கப்பட்டுள்ள
பொள்ளாச்சி ரயில்வே
நிலையம் சேலம்
ரயில்வே மண்டலத்துடன்
இணைக்கப்படுவதற்கு
முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
16.கோயம்புத்தூரில் நிலத்தடி நீரைப் பெருக்குவதற்காகப் பவானி ஆற்றிலிருந்து உபரிநீர் சின்னவேடம்பட்டி ஏரிக்குக் கொண்டு வரப்படும்.
17.விஞ்ஞானிஜி.டி.நாயுடுவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்.
18.கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். கோயம்புத்தூர் மாநகராட்சியே மக்களுக்குக் குடிநீர் வழங்கும்.
19. கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் காந்திபுரம், உக்கடம், பீளமேடு, அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர், ஹோப் கல்லூரி, கோவை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும்.
20. கோயம்புத்தூரில் டைடல் பார்க் இரண்டாம் நிலைத்திட்டம் தொடங்கப்படும்.
21.கோயம்புத்தூரில் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும்.
22.பல் மருத்துவக் கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்குத் தனித்தனியாகக் கட்டடங்களும் பிற வசதிகளும் செய்து தரப்படும்.
23.கோயம்புத்தூர்வ.உ.சி. பூங்காவில் வ.உ.சி.க்கு சிலை வைக்கப்படும்.
24.கோயம்புத்தூரில் ஒருங்கிணைந்த அனைத்து வசதிகளுடன் கூடிய ஆயத்த ஆடை ஜவுளிபூங்கா அமைக்கப்படும்.
25.கோயம்புத்தூர், பொள்ளாச்சியில் சுற்றுச் சாலை அமைக்கப்படும்.
26. தேசிய ஜவுளி ஆலை மீண்டும் லாபகரமாகச் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
27. கோவை குற்றாலம், நரசிபுரம் ஊராட்சி - வைதேகி அருவி ஆகியன சுற்றுலா மையங்கள் ஆக்கப்படும்.
28. தொண்டாமுத்தூர், ஆனைமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும். சூலூரில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும்
29. சிங்காநல்லூர் மற்றும் ஆனைமலையில் அரசு மருத்துவமனைகள் கட்டப்படும்
30. நாற்பது கிராமங்கள் பயனடையத்தக்க வகையில் PAP கால்வாயிலிருந்து கொத்தவாடி ஏரிக்குத் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும்
31. பொள்ளாச்சியில்
கயிறு திரிப்பு
பயிற்சி மையம்
அமைக்கப்படும்
32. சூலூரில்
அரசு கலை அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
33. சூலூர்
அணை, ராஜ வாய்க்கால்
அணை ஆகியவற்றின்
உயரங்கள் அதிகப்படுத்தப்பட்டு
அதிகளவில் நீர்த்தேக்க
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
34. ஆனைமலையில்
கால்நடை மருத்துவமனை
தொடங்கப்படும்.
35. நொய்யல்
ஆறு, அமராவதி
ஆறு,
பவானி
ஆறு ஆகியன இணைக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
36. வால்பாறையில்
புதிய பேருந்து
நிலையம் அமைக்கப்படும்.
37. கோயம்புத்தூர்
மாவட்டத்தின்
அனைத்து ஊர்களிலும்
உள்ள குப்பைக்
கிடங்குகள் ஊருக்கு
வெளியே தள்ளி
அமைக்கப்படும்.
38.தமிழகத்தில்
ஒவ்வொரு ஆண்டும்
சர்வதேச ஜவுளிப்
பொருள்கள் கண்காட்சி
நடத்தப்படும்.
39. 2010 ஆம்
ஆண்டு கழக ஆட்சியில்
நிதி ஒதுக்கப்பட்டு
அரசாணை பிறப்பிக்கப்பட்ட
சிங்காநல்லூர்
S.I.H.S காலனி, நீலிக்கோணாம்
பாளையம், பீளமேடு
தண்ணீர் பந்தல்,
ரயில்வே உயர்மட்ட
மேம்பாலங்கள்
கடந்த 10 ஆண்டுகளாக
முடங்கிக் கிடக்கிறது.
கழக ஆட்சி அமைந்தவுடன்
அந்த மேம்பாலங்கள்
கட்டி பொதுமக்களின்
பயன்பாட்டிற்குக்
கொண்டு வரப்படும்.
40. 2009 ஆம்
ஆண்டு கோவை மாநகராட்சி
சிங்காநல்லூர்
தொகுதி மற்றும்
பல பகுதிகளில்
பாதாள சாக்கடை
திட்டத்தை செயல்படுத்த
ரூ. 377 கோடி நிதி
ஒதுக்கிப் பணிகள்
தொடங்கப்பட்டன.
இந்த ஆட்சியில்
பணிகள் சரிவர
நடைபெறாமல் கடந்த
10 ஆண்டுகளாக
முடங்கிக் கிடக்கிறது.
கழக ஆட்சி அமைந்தவுடன்
விரைவுபடுத்திச்
செயல்பாட்டுக்குக்
கொண்டுவரப்படும்.
41. சிங்காநல்லூர்
- வெள்ளலூர்
(கிணத்துக்கடவு
சட்டமன்றத் தொகுதி)
நொய்யல் ஆறு
உயர்மட்ட மேம்பாலம்
கட்டப்படும்.
42. சிங்காநல்லூர்
உழவர் சந்தை அருகில்
தமிழ்நாட்டு வீட்டு
வசதி வாரிய அடுக்குமாடி
குடியிருப்பில்
சிதிலமடைந்துள்ள
960 வீடுகள் புதுப்பிக்கத்து
நடவடிக்கை எடுக்கப்படும்.
43. கோயம்புத்தூரில்
சர்வதேச ஜவுளிப்
பொருட்கள் கண்காட்சி
நடத்தப்படும்.
44. மேட்டுப்பாளையம்
காரமடை புறவழிச்
சாலை அமைக்கப்படும்.
45. மேட்டுப்பாளையம்
அரசு மருத்துவமனை
நவீனப்படுத்தப்படும்.
46. தொண்டாமுத்தூரில்
குளிர்பதனக் கிடங்கு
அமைக்கப்படும்
47. மேட்டுப்பாளையத்தில்
உள்ள அனைத்துக்
குடிநீர் திட்டங்களும்
விழாமரத்தூருக்கு
மாற்றி அமைத்து
சாக்கடை நீர்
இல்லாமல் குடிநீர்
வழங்கப்படும்.
கடலூர் மாவட்டம்
1.கடலூர்
நகராட்சி மாநகராட்சியாகத்
தரம்
உயர்த்தப்படும்.
2.கடலூர்,
பெண்ணாடம் மற்றும்
திட்டக்கĬ#3009;டியில்
புறவழிச் சாலைகள்
அமைக்கப்படும்.
3. திட்டக்குடி,
பெண்ணாடம் ஆகியவை
நகராட்சிகளாகத்
தரம்
உயர்த்தப்படும்
4. திட்டக்குடி
மற்றும் பெண்ணாடத்தில்
பாதாள சாக்கடைத்
திட்டம்
நிறைவேற்றப்படும்.
5.வெல்லிங்டன்
ஏரிக்கரை உயர்த்தப்பட்டு
வலுப்படுத்தப்பட்டு
நீர்ப்பாசன வசதிகள்
அதிகரித்து நிரந்தரத்
தீர்வு காண நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
6.பக்கம்பாடி
அணையின் கரைகள்
உயர்த்தப்பட்டு
மங்கலூர் ஒன்றியத்தில்
60 கிராமங்களுக்கு
நீர்ப்பாசன வசதி
அதிகப்படுத்தப்படும்.
7. பரங்கிப்பேட்டை
ஒன்றியம் - கிள்ளையில்
சின்னவாய்க்கால்
முகத்துவாரம்
அடைக்கப்படாமல்
தடுப்பதற்குத்
தேவையான நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
8.வெள்ளாற்றின்
குறுக்கே கல்லப்பாடி
முதல் காவனூர்
வரை மேம்பாலம்
கட்டப்படும்.
9.திருமுட்டத்தில்
உள்ள ஆரம்ப சுகாதார
நிலையம் அரசு
மருத்துவமனையாகத்
தரம் உயர்த்தப்படும்.
10.வீராணம்
ஏரி சுற்றுலா
தலமாக ஆக்கப்படும்.
11.விருத்தாசலத்தில்
புதிய பேருந்து
முனையம் ஏற்படுத்தப்படுவதோடு,
விருத்தாசலத்திற்கு
புறவழிச்சாலை
வசதிகள் செய்து
தரப்படும்.
12.கடலூர்
துறைமுகம் விரிவுபடுத்தப்படும்.
13.கடலூர்
சிப்காட் தொழிற்பேட்டையில்
வேதியியல் தொழிற்சாலைகளிலிருந்து
வெளியேறும் கழிவுப்
பொருள்களைச் சுத்திகரிக்கத்
தேவையான சுத்திகாப்பு
ஆலைகள் நிறுவப்படும்.
14. புவனகிரி
புதிய பேருந்து
நிலையம் மேம்படுத்தப்படும்.
15. கடலூரில்
உள்ள கொண்டங்கி
ஏரி தூர்வாரப்படும்.
16. புவனகிரியில்
நறுமணத் தொழிற்சாலை
அமைக்கப்படும்.
17. விருத்தாசலத்தில்,
பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும்.
18. சிதம்பரம்,
கடலார். பண்ருட்டி மற்றும்
குறிஞ்சிப்பாடியில்
"குளிர்பதனக்
கிடங்குகள் அமைக்கப்படும்.
19.நெய்வேலி
நிலக்கரிச் சுரங்கத்திற்கு
நிலங்களை அளித்த
மக்களுக்கு அந்த
நிறுவனத்திலேயே
நிரந்தரமான வேலைவாய்ப்புகள்
வழங்குவதற்கு
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
20.சிதம்பரம்,
மங்களூரில்
கால்நடை மருத்துவமனைகள்
தொடங்கப்படும்.
21.சிதம்பரம்
அரசு மருத்துவமனை
பல்நோக்கு மருத்துவமனையாகத்
தரம் உயர்த்தப்படும்.
22. பரங்கிப்பேட்டை
- அண்ணன் கோவிலில்
மீன்பிடித் துறைமுகம்
அமைக்கப்படும்.
23. சுதந்திரப்
போராட்ட வீராங்கனை
அஞ்சலை அம்மாளுக்குக்
கடலூரில் சிலை
நிறுவப்படும்.
24. கடலூரில்
போக்குவரத்து
நெரிசல் அதிகமான
காரணத்தால் ஏற்கனவே
உள்ள அண்ணா மேம்பாலம்
போதாத நிலையில்
மற்றொரு மேம்பாலம்
கட்டப்படும்.
25. கடலூரில்
அரசு பொறியியல்
கல்லூரி தொடங்கப்படும்.
26. கடலூரில்
கைத்தறிப் பூங்கா
அமைக்கப்படும்.
27. குறிஞ்சிப்பாடி
- சொத்திக்குப்பம்
பரவனாற்றில் படகு
அணைப்புப் பாலம்
கட்டப்படும்.
28.கடலூரில்
காகிதத் தொழிற்சாலை
அமைக்கப்படும்.
29. குறிஞ்சிப்பாடியில்
முந்திரி தொழிற்சாலை
அமைக்கப்படும்.
30.கான்சாகிப்
கால்வாயில் கழிவுநீர்
கலப்பதைத் தடுக்க
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
31.விருத்தாசலத்தில்
சூரியகாந்தி எண்ணெய்
தயாரிக்கும் தொமிற்சாலை
மீண்டும் செயல்பட
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
32. விருத்தாசலத்தில்
மகளிர் அரசு கலை
அறிவியல் கல்லூரி
தொடங்கப்படும்
33.பண்ருட்டியில்
மரவள்ளிக் கிழங்கு
தொழிற்சாலை தொடங்கப்படும்.
34. திருமுட்டம்
மற்றும் குறிஞ்சிப்பாடியில்
புதிய பேருந்து
நிலையம் கட்டப்படும்.
35. கடலூர்
அரசு மருத்துவமனையில்
புற்றுநோய் சிகிச்சைப்
பிரிவு தொடங்கப்படும்.
36. கடலூரில்
தகவல் தொழிட்நுட்பப்
பூங்கா அமைக்கப்படும்.
37. நெய்வேலி
நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து
வெளியேறும் உபரிநீர்
வடலூருக்குத்
திருப்பி விடப்படும்.
38. கடலூரில்
மீன்வளக் கல்லூரி
தொடங்கப்படும்.
39.அண்ணாமலை
பல்கலைக்கழகத்தில்
சட்டக் கல்லூரி
தொடங்கப்படும்.
40. சிதம்பரம்
கச்சேரி சாலையில்
நவீன வசதிகளுடன்
கூடிய நூலகம்
அமைக்கப்படும்.
41.சிதம்பரத்தில்
வக்காரமாரி கூட்டுக்குடிநீர்
திட்டம் நிறைவேற்றப்படும்.
42. சிதம்பரத்தில்
அதிக பேருந்துகள்
மற்றும் நவீன
வசதிகளுடன் கூடிய
புதிய பேருந்து
நிலையம் அமைக்கப்படும்.
43. நெய்வேலி
நிலக்கரிச் சுரங்கத்தில்
வெளியேறும் உபரி
நீரைப் பயன்படுத்தி
வடலூர் மற்றும்
குறிஞ்சிப்பாடிக்குக்
குடிநீர் வழங்க
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
44. கொள்ளிடம்
கூட்டுக் குடிநீர்
திட்டம் திட்டக்குடிக்கு
விரிவுபடுத்த
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
45.பண்ருட்டியில்
பலாப்பழச்சாறு
தொழிற்சாலை தொடங்க
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
46.விருத்தாசலத்தில்
பீங்கான் தொழிற்சாலை
மீண்டும் செயல்பட
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
47. நெய்வேலி
நிலக்கரி நிறுவனத்தின்
பங்குகளைத் தனியாருக்கு
விற்பனை செய்வதற்கு
மத்திய அரசு எடுக்கும்
முயற்சிகளை தி.மு.க. கடுமையாக
எதிர்ப்பதோடு,
அதைத் தடுப்பதற்கான
அனைத்து முயற்சிகளையும்
மேற்கொள்ளும்.
48. நெய்வேலி
நிலக்கரிச் சுரங்கத்தில்
உயிரிழந்த தொழிலாளர்களின்
வாரிசுகளுக்கு
வேலை வழங்கும்
திட்டம் மீண்டும்
தொடங்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
49. பண்ருட்டியில்
முந்திரி பதப்படுத்தும்
தொழிற்பயிற்சி
மையம் தொடங்கப்படும்.
50. கடலூரில்
தி.மு.க.
அரசால் அடிக்கல்
நாட்டப்பட்டு,
பின்னர் அ.தி.மு.க. அரசால்
முடக்கப்பட்ட
மருத்துவக் கல்லூரி
பணிகள் மீண்டும்
தொடங்கி முடிக்கப்பட்டு
கடலூரில் அரசு
மருத்துவக் கல்லூரி
ஆரம்பிக்கப்படும்.
51. கோத்தேரி
ஊராட்சியில் நறுமண
தொழிற்சாலை அமைக்கப்படும்.
52. நெய்வேலியில்
பல்நோக்கு மருத்துவமனை
அமைக்கப்படும்.
53.பண்ருட்டி,
குறிஞ்சிப்பாடியில்
குளிர்பதனக் கிடங்கு
அமைக்கப்படும்.
54.கொண்டூர்
ஊராட்சியில் கொள்ளிடம்
கூட்டுக் குடிநீர்
திட்டம் செயல்படுத்தப்படும்.
55. கடலூரில்
தகவல் தொழிட்நுட்பப்
பூங்கா மற்றும்
ஜவுளிப் பூங்கா
அமைக்கப்படும்.
56. நெல்லிகுப்பம்
சர்க்கரை ஆலையில்
கழிவுநீர் சுத்திகரிப்பு
ஆலை
அமைக்கப்படும்.
57. நெய்வேலி
நிலக்கரி சுரங்கத்திலிருந்து
வெளியேறும் உபரிநீர்
அருகிலுள்ள கிராமங்களின்
நீர்ப்பாசன வசதிகளைப்
பெருக்கத் திருப்பி
விடப்படும்.
58. நெய்வேலி
நிலக்கரிச் சுரங்கத்திற்கு
நிலங்கள் அளித்தவர்களுக்கு
வழங்கப்பட்ட இழப்பீடு
மற்றும் அவர்களுக்கு
வேலை வாய்ப்புகள்
ஆகியவற்றைப் பற்றி
ஆராய்ந்து பரிந்துரைகள்
செய்வதற்காக ஒரு
குழு நியமிக்கப்படும்.
தருமபுரி மாவட்டம்
1.தும்பல அள்ளி
அணையிலிருந்து
எண்ணேகால்புதூர்
வந்து சேரும்
வெளிக்கால்வாய்
திட்டம் நிறைவேற்றப்படும்.
2. மொரப்பூரில்
பால் குளிரூட்டும்
நிலையம் மீண்டும்
செயல்பட நடவடிக்கை
எடுக்கப்படும்.
3. தருமபுரியிலிருந்து
அரூர் வழியாக
மொரப்பூருக்கு
நான்கு வழிச்
சாலைகள் போடப்படும்.
4.ஓகேனக்கல்
நீர் மின் உற்பத்தித்
திட்டம் செயல்படுத்த
எடுக்கப்படும்.
5.பெண்ணாகரம்,
அரூர் அரசு
மருத்துவமனைகள்
நவீனப்படுத்தப்பட்டு
தரம் உயர்த்தப்படும்.
6.பாலக்கோட்டில்
மகளிர் அரசு கலை
அறிவியல் கல்லூரி
தொடங்கப்படும்.
7. பாலக்கோட்டில்
பாதாள சாக்கடை
திட்டம் நிறைவேற்றப்படும்.
8. பாப்பாரப்பட்டியில்
அரசு கூட்டுறவு
சங்கங்கள் மீண்டும்
செயல்பட நடவடிக்கை
எடுக்கப்படும்.
9.பஞ்சப்பள்ளி
குடிநீர் திட்டம்
தருமபுரி நகராட்சி
மக்கள் பயனடையும்
வகையில் மீண்டும்
செயல்பட நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
10. பெண்ணாகரத்தில்
காவிரி ஆற்றின்
குறுக்கே பாலம்
கட்டப்படும்.
11.தருமபுரி,
பெண்ணாகரம்,
பாலக்கோடு,
பாப்பிரெட்டிபட்டி,
கம்பைநல்லூர்
ஆகிய ஊர்களில்
குளிர்பதனக் கிடங்குகள்
அமைக்கப்படும்.
12.அலியாளம்
அணையிலிருந்து
உபரிநீர் தருமபுரி
மாவட்டத்தில்
உள்ள ஏரிகளில்
நிரப்பப்பட நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
13.பாலக்கோட்டில்
தக்காளிக்கூழ்
மற்றும் பவுடர்
தயாரிக்கும் தொழிற்சாலை
அமைக்கப்படும்.
14.கூட்டுறவு
சர்க்கரை ஆலையில்
மின் உற்பத்தி
செய்ய நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
15.ஒகேனக்கல்
கூட்டுக் குடிநீர்
திட்டம் மூலம்
தருமபுரி மாவட்டத்தில்
உள்ள அனைத்துக்
கிராமங்களுக்குக்
குடிநீர் கிடைத்திட
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
16. தற்போது
செயல்படாமல் இருக்கும்
செனகல் நீர்ப்பாசனத்
திட்டம் மீண்டும்
செயல்பட நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
17.தருமபுரியில்
சிப்காட் இரண்டாம்
தொழிற்பேட்டையும்,
பெண்ணாகரம்
அரூரில் தொழிற்பேட்டையும்
அமைக்க ஆவன செய்யப்படும்.
18.மாரண்டஅள்ளி
ஆற்றிலிருந்து
சந்திராபுரம்
வழியாக தாசன்
ஏரிக்குத் தண்ணீர்
கொண்டுவர புதிய
கால்வாய் அமைக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
19.தருமபுரியில்
மரவள்ளிக்கிழங்கு
கொள்முதல் நிலையமும் நவீன மரவள்ளிக்கிழங்கு
தொழிற்சாலையும்
அமைக்கப்படும்.
20. குருபர
அள்ளியில் கால்நடை
மருத்துவமனை தொடங்கப்படும்.
21. தருமபுரியில்
சுற்றுச்சாலை
அமைக்கப்படும்.
22.தருமபுரி
மாவட்டத்தில்
உள்ள அனைத்து
மலைக் கிராமங்களுக்கும்
சாலை மற்றும்
போக்குவரத்து
வசதிகள் செய்து
தரப்படும்.
23.மூக்காரெட்டிப்பட்டி
- கவுண்டன்பட்டியில்
சாலையின் குறுக்கே
மேம்பாலம் கட்டப்படும்.
24. தீர்த்தகிரிசுவரர்
கோயில் சுற்றுலா
தலமாக அறிவிக்க
ஆவன செய்யப்படும்.
25. வேப்பாடி
ஆற்றில் S.பாளையம்
அருகில் ஓர் அணை
கட்டப்படும்.
பொதியன் பள்ளத்தாக்கு
அணை திட்டம் மீண்டும்
செயல்படுத்தப்படும்.
26. காவிரி
ஆற்றின் குறுக்கே
பண்ணவாடியிலிருந்து
நாகமலைக்கு மேம்பாலம்
கட்டப்படும்.
27. பெண்ணாகரம்
பேருந்து நிலையம்
நவீனமயமாக்கப்பட்டு
தரம் உயர்த்தப்படும்.
28. பாப்பாரப்பட்டியில்
வேளாண்மைப் பயிற்சி
பள்ளி வேளாண்மைக்
கல்லூரியாக உயர்த்தப்படும்.
29. மாரண்ட
அள்ளியில் தென்னை
ஆராய்ச்சி
மையம் அமைக்கப்படும்.
30.ஜகநாதன்கோம்பை
அணையில் இருந்து
உபரிநீர், பாளையம்புத்தூர்
நாயக்கன் ஏரி
மூலம், சுற்றியுள்ள
கிராமங்களுக்குக்
கொண்டு செல்லப்பட
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
31.தென்பெண்ணை
ஆற்றின் குறுக்கே
கருக்கம்பட்டி
பகுதியில் தடுப்பணை
கட்டப்படும்.
32. தருமபுரியில்
மாம்பழக்கூழ்
தயாரிக்கும் தொழிற்சாலை
தொடங்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
33. தருமபுரி
வத்தல் மலையில்
உற்பத்தியாகி
தென்பெண்ணை ஆற்றில்
கலக்கும் சனத்குமார்
நதியில் உள்ள
ஆக்கிரமிப்புகளை
அகற்றி புனரமைப்பு
செய்யப்படும்.
34. பாலக்கோடு
எண்ணேகால் புதூர்
கால்வாய் திட்டம்,
தூள் செட்டி
ஏரி திட்டப்பணிகள்
விரைந்து செயல்படுத்தப்படும்.
35.ஓகேனக்கல்
காவிரி ஆற்றில்
உபரி நீரைத் தருமபுரி
மாவட்டத்தில்
உள்ள ஏரி, குளங்களில்
நிரப்பி விவசாயப்
பாசன வசதிகளை
மேம்படுத்த நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
36.தருமபுரி
நகராட்சி பேருந்து
நிலையம் தற்போது
உள்ள இடத்திலேயே
விரிவுபடுத்தப்பட்டு
நவீனமயமாக்கப்படும்.
37. படித்த
இளைஞருக்கு வேலை
வாய்ப்பு கிடைத்திடும்
வகையில் கடந்த
2010 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு
தலைவர் கலைஞர்
அவர்களால் ஒதுக்கப்பட்ட
சுமார் 900 ஏக்கர்
பரப்பளவில் நல்லம்பள்ளி
வட்டம், நெக்குந்தியில்
இராணுவ ஆராய்ச்சி
மையத் திட்டம்
(DRDA Project) விரைந்து
செயல்படுத்தப்பட
மை அரசு வலியுறுத்தப்படும்.
38. பெண்ணாகரம்
- ஏரியூர் பகுதியில்
அரசு கலை அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
39. பாப்பாரப்பட்டி
பகுதியில் பஞ்சப்பள்ளி
சின்னாற்றுக்
கால்வாய்த் திட்டம்
முழுமையாக முடிக்கப்பட்டு
பாசன வசதிகள்
மேம்படுத்தப்படும்.
40. ஜெர்த்தலாவ்
ஏரியிலிருந்து
கால்வாய் அமைத்து
காட்டம்பட்டி
முதல் புலிகரை
வரை உள்ள ஏரிகளில்
நீர் நிரப்பிபாசன
வசதிகள் செய்து
தரப்படும்.
41.ஒகனேக்கல்
சுற்றுலா தளம்
சர்வதேச அளவில்
தரம் உயர்த்தப்படும்.
42. ஏரிமலை,
கோட்டூர் மலை
மற்றும் அலக்கட்டி
போன்ற மலைக்
கிராமங்களுக்கு
சாலை வசதி
செய்து
தரப்படும்.
43. வத்தல்மலை சுற்றுலா
தலமாக
மாற்றப்படும்.
44. நாகவதி
அணை கால்வாய்
குறுக்கே கழனிக்
காட்டூர் பகுதியில்
மேம்பாலம் கட்டப்படும்.
திண்டுக்கல் மாவட்டம்
1.ஒட்டன்சத்திரம்,
ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை,
தொப்பம்பட்டி
ஆகிய இடங்களில்
அரசு கலை அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
2.லட்சுமணப்பட்டியில்
குடகனாற்றின்
குறுக்கே அணை
கட்டி வேடசந்தூர்
பகுதியில் நீர்ப்பாசன
வசதிகளை பெருக்க
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
3.ஒட்டன்சத்திரம்
- பழனி இடையே
ஆயக்குடி, தாழையூத்து,
சத்தரப்பட்டி
ஆகிய ஊர்களில்
ரயில்வே மேம்பாலங்கள்
கட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
4.குடகனாற்றின்
குறுக்கே ஓர்
அணை கட்டி வேடசந்தூர்,
வடமதுரை, குஜிலாம்பாறை
ஆகிய ஊர்களில்
நீர்ப்பாசன வசதியைப்
பெருக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
5.வேடசந்தூர்
தொகுதியில் பால்
கொள்முதல் நிலையங்கள்
தொடங்கப்படும்.
பாலசமுத்திரத்தில்
பால் பதப்படுத்தும்
மையம் அமைக்கப்படும்.
6.பழனி
தொகுதியில் பச்சையாற்றில்
ஓர் அணை கட்டி
பழனி மற்றும்
தொப்பம்பட்டி
ஒன்றியங்களில்
நீர்ப்பாசன வசதிகளைப்
பெருக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
7.குண்டாறு
கூட்டுக் குடிநீர்
திட்டம் கொடைக்கானலுக்கு
விரிவுபடுத்த
முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
8.வடமதுரை
புறவழிச் சாலையில்
மேம்பாலம் கட்டப்படும்.
9.வடமதுரை
மற்றும் அய்யலூரில்
பாதாள சாக்கடை
திட்டம் நிறைவேற்றப்படும்.
10.சின்னாளப்பட்டியில்
ஜவுளிப்பூங்காவும்,
சாயக் கழிவுநீர்
சுத்திகரிப்பு
நிலையமும் அமைக்கப்படும்.
11.திண்டுக்கல்,
ஒட்டன்சத்திரம்,
ஆயக்குடி,
வத்தலக்குண்டு,
குஜிலியம்பாறை
ஆகிய ஊர்களில்
குளிர்பதனக் கிடங்குகள்
அமைக்கப்படும்.
12.காவிரி
குடிநீர் திட்டம்
ரெட்டியார்சத்திரம்,
ஒட்டன்சத்திரம்,
தொப்பம்பட்டி,
வேடசந்தூர்,
நத்தம் ஆகிய
ஊர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
13. வேடசந்தூர்
பகுதிக்கு மாயனூர்
அணையிலிருந்து
காவிரி நீரைக்
கொண்டுவர நடவடிக்கை
எடுக்கப்படும்.
14. சாணார்பட்டியில்
அரசு பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும்.
15.பழனி
மேற்கு ஒன்றியத்தில்
பச்சையாறு அணை
திட்டம் நிறைவேற்றப்படும்.
16.கொடைக்கானல்,ஒட்டன்சத்திரம்,
பழனி, வேடசந்தூர்,
நிலக்கோட்டை,
பண்ணைக்காடு
ஆகிய ஊர்களில்
உள்ள அரசு மருத்துவமனைகள்
நவீனப்படுத்தப்பட்டு
தரம் உயர்த்தப்படும்.
17. திண்டுக்கல்
மற்றும் வடமதுரையில்
புதிய பேருந்து
நிலையங்கள்
அமைக்கப்படும்.
18. வடமதுரை.
வத்தலகுண்டு,
ஒட்டன்சத்திரம்
ஆகிய ஊர்களில்
குப்பைக் கிடங்குகள்
ஊருக்கு வெளியே
மாற்றப்படும்.
19.காவிரி
கூட்டுக் குடிநீர்
திட்டம் அய்யலூர்
ஒன்றியத்திற்கு
விரிவுபடுத்தப்படும்.
20.அய்யலூரில்
தக்காளி பதப்படுத்தும்
தொழிற்சாலை அமைக்கப்படும்.
21. ஆக்குடியில்
பழச்சாறு தயாரிக்கும்
தொழிற்சாலை அமைக்கப்படும்.
22. திண்டுக்கல்
நகரில் புறவழிச்
சாலை அமைக்கப்படும்.
23. ஆயக்குடியில்
கால்நடை மருத்துவமனை
அமைக்கப்படும்.
24. பாலசமுத்திரம்
மற்றும் சித்தையன்
கோட்டையில் நிரந்தர
நெல் கொள்முதல்
மையங்கள் அமைக்கப்படும்.
25. நிலக்கோட்டையில்
நறுமணத் தொழிற்சாலையும்,
முருங்கை மாவு
தொழிற்சாலையும்
அமைக்கப்படும்.
26. பழனியில் சித்த
மருத்துவக் கல்லூரி
தொடங்கப்படும்.
27.ஆயக்குடியில்
கொய்யா பதப்படுத்தும்
தொழிற்சாலை அமைக்கப்படும்.
28. தமிழ்நாட்டின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும்
பழனிக்குப் பாத
யாத்திரையாக வரும்
பக்தர்கள் இலவசமாகத்
தங்கும் வசதிக்காக
நெடுஞ்சாலைகளில்
சமுதாயக் கூடங்கள்
அமைக்கப்படும்.
29. திண்டுகல்லில்
தோல் பூங்கா அமைக்கப்படும்.
30.நிலக்கோட்டை,
குஜிலியம்பாறையில்
தொழிற்பயிற்சி
நிலையங்கள் அமைக்கப்படும்.
31. பரம்பிக்குளம்
ஆழியாரிலிருந்து
புதிய கூட்டுக்
குடிநீர் திட்டம்
ஒட்டன்சத்திரம்
தொகுதியில் நடைமுறைப்படுத்த
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
32. ஒட்டன்சத்திரம்
வட்டம் - இடைக்கோட்டை,
பழனி வட்டம்
- தாழையூத்து,
வேடசந்தூர்
வட்டம் வடமதுரை,
வேடசந்தூரில்
தொழிற்பேட்டைகள்
அமைக்கப்படும்.
33. பழனியிலிருந்து
கொடைக்கானலுக்கு
ரோப்கார் வசதி
செய்து தரப்படும்.
34.அமராவதி,
பச்சையாறு,
குதிரையாறு,
பாலாறு, பொருந்தலாறு,
வரதமா நதி நல்லதங்காள்,
நங்காஞ்சியாறு,
குடகனாறு,
சந்தானவர்த்தி
ஆகிய ஆறு இணைப்புத்
திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு
உபரி நீர் பழனி,
ஒட்டன்சத்திரம்
ஆத்தார், திண்டுக்கல்,
வேடசந்தூர்,
நத்தம் ஆகிய
பகுதிகளில் நீர்ப்பாசனம்
நம் மற்றும் குடிநீர்
வசதிகள் பெருக்க
உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
35.ஒட்டன்சத்திரம்
வட்டம் கொத்தையம்
என்ற இடத்தில்
பழனி தண்டாயுதபாணி
கோவிலுக்குச்
சொந்தமான 300 ஏக்கர் நிலத்தில்
ஒரு பல்கலைக்கழகம்
தொடங்கப்படும்.
36.சுதந்திரப்போராட்ட
வீரர் கோபால்சாமி
நாயக்கர் நினைவை
போற்றும் வகையில்
சிறப்பு அஞ்சல்தலை
வெளியிடமுயற்சிகள்
மேற்கொள்ளப்படும்.
37.குஜிலியம்பாறையில்
அரசு கால்நடை
மருத்துவக் கல்லூரி
தொடங்கப்படும்.
38. ஒட்டனசத்திரம்
அரசு மருத்துவமனை
அனைத்து வசதிகளும்
கொண்ட மருத்துவமனையாக
தரம் உயர்த்தப்படும்.
39.ஒட்டன்சத்திரம்
தொப்பம்பட்டி
ஒன்றியத்தைப்
பிரித்து கள்ளிமந்தையத்தைத்
தலைமையிடமாகக்
கொண்டு புதிய
ஊராட்சி ஒன்றியம்
அமைக்கப்படும்.
40. ஒட்டன்சத்திரம்
பழனி வட்டத்தைப்
பிரித்து கள்ளிமந்தையததைத்
தலைமையிடமாகக்
கொண்டு புதிய
வட்டம் உருவாக்கப்படும்.
41. ஒட்டன்சத்திரத்தில்
உள்ள பரப்பலாறு
அணையைத் தூர்வாரித்
தரப்படும்.
42.தொப்பம்பட்டி
ஒன்றியத்தில்
உள்ள கலிக்கநாயக்கன்பட்டி
குளத்திலிருந்து
அரண்மனை குளத்திற்கு
வாய்க்கால் வெட்டி
நீர் கொண்டு வரப்படும்.
43. பாலாறு
- பொருந்தலாறு
இடது புற பிரதான
கால்வாயிலிருந்து
மாரப்பகவுடன்வலசு
என்ற இடத்தில்
பிரித்து, போது
பட்டி கொழமங்கொண்டான்
ராஜாம்பட்டி,
மேல்கரைப்பட்டி,
கோட்டதுறை வழியாக
புதிய கால்வாய்
வெட்டித் தரப்படும்.
44. மஞ்சநாயக்க்கன்பட்டி,
காளிப்பட்டி
குளத்திற்கு புதிய
வாய்க்கால் வெட்டித்
தரப்படும்.
45. கிராமப்பட்டினம்
புதூர் பெரிய
துரையில் ஒரு
தடுப்பணை கட்டித்
தரப்படும்.
46. பாலாறு
- பொருந்தலாறு
இடதுபுற வாய்க்கால்
மற்றும் பரப்பலாறு
அணையிலிருந்து
வெளியேறும் நீர்
தலைக்குத்திலிருந்து
ஜவ்வாதுபட்டி
பெரியகுளம் செல்கின்ற
வரை அனைத்து வாய்க்காலுக்கும்
சிமெண்ட் சிலாப்
ஏற்படுத்தித்
தரப்படும்.
47.ஒட்டன்சத்திரம்
தொகுதியில் கால்நடை
மருந்தகம் இல்லாத
ஊராட்சிகளில்
கால்நடைகளின்
எண்ணிகையைப் பொறுத்து
கால்நடை மருந்தகம்
உருவாக்கித் தரப்படும்.
48. ஒட்டன்சத்திரம்
நகராட்சியில்
பாதாள சாக்கடை
திட்டம் கொண்டு
வரப்படும்.
49. கொப்பம்பட்டி
ஊராட்சி ஒன்றியத்தில்
நெசவுத் தொழிலில்
ஈடுபட்டுள்ள சுமார்
5000 நெசவாளர்களுக்கு
அவர்கள் உற்பத்தி
செய்கின்ற சேலை,
வேட்டிகளை அரசே
கொள்முதல் செய்கின்ற
வகையில் நரிக்கல்பட்டியில்
ஜவுளிப் பூங்கா
அமைத்துத்தரப்படும்.
50.ஒட்டன்சத்திரம்
- அவினாசி சாலையில்,
1.தாழையூத்து
– கள்ளிமந்தையம்
சாலையில் கள்ளிமந்தையம்,
2) மஞ்சநாயக்கன்பட்டி
-கள்ளிமந்தையம்
சாலையில், 3) வேலம்பட்டி
- கூத்தம்பூண்டி
சாலையில் கள்ளிமந்தை
நால்ரோட்டில்
மேம்பாலம் கட்டித்தரப்படும்.
51.திண்டுக்கல்,
திருப்பூர்,
கரூர் உட்பட
தமிழகத்தில்
9 மாவட்டங்களில்
சுமார் 5000 ஏக்கரில்
விளைகின்ற செங்காந்தள்
மலரின் விதையை
(GLORISA SUPERPA) இடைத்தரகர்கள்
இல்லாமல் அரசே
கொள்முதல் செய்து
விவசாயிகளுக்குக்
கட்டுப்படியான
விலை கிடைப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்படும்.
52. ஒட்டன்சத்திரம்
நகராட்சி, கீரனூர் பேரூராட்சியில்
வீடு இல்லாத ஏழை
மக்களுக்குத்
தமிழ்நாடு குடிசைப்
பகுதி மாற்று
வாரியத்தின் மூலமாக
அடுக்குமாடி வீடுகள்
கட்டித்தரப்படும்.
53. ஒட்டன்சத்திரம்
தொகுதியில் மேற்குத்
தொடர்ச்சி மலையில்
உள்ள வடகாடு ஊராட்சிக்கு
அங்குள்ள பரப்பலாறு
அணையின் அருகில்
ஒரு சமுதாயக்
கிணறு வெட்டப்பட்டு
அந்த ஊராட்சி
முழுவதும் குடிநீர்
வசதி செய்து தரப்படும்.
54.ஒட்டன்சத்திரம்
தொகுதியில் உள்ள
தலைக்குத்து மற்றும்
நங்காஞ்சியாறு
ஆகிய பகுதிகளில்
சுற்றுலா தலம்
அமைத்துத் தரப்படும்.
55.ஒட்டன்சத்திரம்
தொகுதியில் அரசு
பொறியியல் மற்றும்
தொழில்நுட்பக்
கல்லூரி அமைத்துத்
தரப்படும்.
56.ஒட்டன்சத்திரம்
தொகுதியில் அதிகமாக
விளையும் தக்காளி
மற்றும் முருங்கைப்
பயிர்களிலிருந்து
முருங்கைப் பொடி,
தக்காளிச் சாறு
தொழிற்சாலை ஏற்படுத்தப்படும்.
57. திண்டுக்கல்
- பழனி சாலை,
ஆத்தூர் சட்டமன்றத்
தொகுதியில் விபத்து
சிகிச்சைப் பிரிவுடன்
கூடிய 24-மணிநேர
நவீன மருத்துவமனை
அமைக்கப்படும்.
58. கந்தசாமிபுரம்
முதல் வேட்டுவன்
குளம், செங்குளம்,
ஆலங்குளம்,
மாட்டுக்காரன்
குளம், சாமியார்பட்டி
ஆண்டியன் குளம்,
அவில்தார் குளம்
ஆகிய குளங்களுக்கு
வரும் வாய்க்கால்களைச்
சிமெண்ட் வாய்க்காலாக
மாற்றப்படும்.
59. ஆத்தூர்
தொகுதியில் அரசு
வேளாண்மைக் கல்லூரி,
கலை மற்றும்
அறிவியல் கல்லூரி,
பாலிடெக்னிக்
கல்லூரி ஆகியவை
ஏற்படுத்தப்படும்.
60.சிப்காட்
தொழிற்பேட்டை
ஏற்படுத்தி வேலையில்லா
இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்புகள்
உருவாக்கப்படும்.
61. சின்னாளப்பட்டியில்
சாயப் பட்டறை,
ஜவுளிப் பூங்கா,
மின் மயானம்
ஏற்படுத்தப்படும்.
62.மருதாநதி
அணையிலிருந்து
சித்தரேவு வரும்
வடக்கு வாய்க்கால்
சிமெண்ட் வாய்க்காலாக
மாற்றப்படும்.
63.மருதா
நதியிலிருந்து
தேவரப்பன்பட்டி
வரை வரும் தெற்கு வாய்க்கால்
சிமெண்ட் வாய்க்காலாக
மாற்றப்படும்.
64.குடகனாற்று
நீரை தாமரைக்குளம்,
பிரம்மாசமுத்திரம்
குளம், கோட்டூர்
ஆவரம்பட்டி குளம்
வரை சிமெண்ட்
அமைத்து தண்ணீர்
கொண்டு வர நடவடிக்கை
எடுக்கப்படும்.
65.மாங்கரை
ஆற்றிலிருந்து
தெத்துப்பட்டி
வாய்க்கால்,
சிறுநாயக்கன்பட்டி
வாய்க்கால்,
மாங்கரை வாய்க்கால்
ஆகியவை சிமெண்ட்
வாய்க்காலாக மாற்றப்படும்.
66.மாங்கரை
குளத்திற்கு வரும்
வாய்க்காலிலிருந்து
பெருமாள் கோவில்
குளம், அய்யம்பட்டி
குளம், புதுக்குளம்,
பழைய குளம்,
அய்யர் குளம்,
ஆயர் குளம்,
கோனார் குளம்,
மந்தை குளம்,
அப்பனம்பட்டி
பொதியப்பன் குளம்
ஆகியவற்றுக்குத்
தனியே சிமெண்ட்
வாய்க்கால் அமைத்துத்
தண்ணீர் கொண்டுவர
முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
67.தருமத்துப்பட்டி
அணையிலிருந்து
கதிரையன்குளம்
வரை வாய்க்கால்,
சிமெண்ட் வாய்க்காலாக
மாற்றப்படும்.
68. கதிரையன்குளம்
முதல் கந்தசĬ#3006;மிபுரம்
வரை உள்ள வாய்க்கால்
சிமெண்ட் வாய்க்காலாக
மாற்றப்படும்.
69. சங்கன்
குளம் வாய்க்காலை
சிமெண்ட் வாய்க்காலாக
மாற்றி சிக்கனகவுண்டன்
குளம், மந்தை
குளம், குடும்பிநாயக்கன்
குளம், குட்டத்துப்பட்டி
குளம் ஆகிய குளங்களுக்கு
வரும் வாய்க்கால்களைச்
சிமெண்ட் வாய்க்கால்களாக
மாற்றப்படும்.
70. கந்தசாமிபுரம்
முதல் வேட்டுவன்
குளம், செங்குளம்,
ஆலங்குளம்,
மாட்டுக்காரன்
குளம், சாமியார்பட்டி
ஆண்டியன் குளம்,
அவில்தார் குளம்
ஆகிய குளங்களுக்கு
வரும் வாய்க்கால்கள்
சிமெண்ட் வாய்க்கால்களாக
மாற்றப்படும்.
14.ஈரோடு மாவட்டம்
1.ஈரோடு,
பெருந்துறையில்
கழிவுநீர் சுத்திகரிப்பு
நிலையம் அமைக்கப்படும்
2. மேட்டூர்
அணையிலிருந்து
வாய்க்கால் மூலம்
உபரிநீரைக் கொண்டு
ஆப்பக்கூடல் பகுதியில்
உள்ள ஏரிகளை நிரப்பி
நீர்ப்பாசன வசதிகளை
மேம்படுத்திட
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
3.தோல்
மற்றும் சாயத்
தொழிற்சாலைகளிலிருந்து
கழிவுநீர்
காளிங்கராயன்
கால்வாயில் கலக்காமல்
இருக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
4.தாளவாடியில்
மூலிகைப் பண்ணை
அமைக்கப்படும்.
5.குரங்கன்பள்ளம்
விவசாய நிலங்கள்
மற்றும் 'தாராபுரம்
கட்டில்' நீக்கப்பட்ட
நிலங்கள் கீழ்பவானி
நீர்ப்பாசனத்
திட்டத்தின் கீழ்
கொண்டுவர ஆவன
செய்யப்படும்.
6.ஈரோடு,
ஊத்துக்குளி,
நல்லாம்பட்டி, தாளவாடியில்
குளிர்பதனக்
கிடங்கு
அமைக்கப்படும்.
7. அந்தியூரில்
காவிரி கூட்டுக்
குடிநீர் திட்டம்
செயல்படுத்தப்படும்.
8. பவானியில்
புறவழிச்சாலை
அமைக்கப்படும்.
9. மணியாச்சி,
வரட்டுப்பள்ளம்,
வழுக்குப்பாறை
ஆறுகளை
இணைத்து
அந்தியூர்,
அம்மாபேட்டை
ஒன்றியங்களில்
நீர்ப்பாசன வசதிகள்
பெருக்கப்படும்.
10.வேதப்பாறை
நீர்த்தேக்கத்
திட்டம் செயல்படுத்தப்படும்.
11.அந்தியூர்
அருகே பட்லூரில்
புதிய அணை கட்ட
ஆவன செய்யப்படும்.
12. அந்தியூர்,
பெருந்துறை,
புஞ்சை புளியம்பட்டியில்
தொழிற்பயிற்சி
நிலையங்கள் அமைக்கப்படும்.
13.தளவாடி,
சத்தியமங்கலம்(கடம்பூர்), அந்தியூர்
(பர்கூர்) ஆகியன மலைப்பிரதேசங்களாக
அறிவிக்கப்பட்டு
அங்குப்
பணியாற்றும்
ஆசிரியர்
மற்றும்
அரசு ஊழியர்களுக்கு
மலைப்பணி படிகள் (Hill Allowance) வழங்கப்படும்.
14.பெருந்துறை,
கோபிசெட்டிபாளையம்
அரசு மருத்துவமனைகள்
நவீனப்படுத்தப்படும். ஈரோடு
அரசு மருத்துவமனை
தரம் உயாத்தப்பட்டு
புற்றுநோய் சிகிச்சைப்
பிரிவு தொடங்கப்படும்.
15.அம்மாபேட்டை,
குருவாரெட்டியூர்,
குறிச்சி, ஒலகடம்,
மொடக்குறிச்சி,
உக்கரம்,
எல்லப்பாளையத்தில்
உள்ள ஆரம்ப சுகாதார
நிலையங்கள் மருத்துவமனைகளாகத்
தரம் உயர்த்தப்படும்.
16. ஈரோடில்
அரசு சட்டக் கல்லூரி
தொடங்கப்படும்.
17. வெள்ளோடு
பறவைகள் சரணாலயத்திற்கு
நீர் நிரப்ப நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
18. ஈரோட்டில்
உணவுப்பூங்கா
அமைக்கப்படும்.
19. ஈரோட்டில்
அரசு வேளாண்மைக்
கல்லூரி தொடங்கப்படும்.
20. மொடக்குறிச்சியில்
தொழிற்பேட்டை
அமைக்கப்படும்.
21. மொடக்குறிச்சியில்
பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும்.
22. அந்தியூரில்
அரசு கலைக் கல்லூரி
தொடங்கப்படும்.
23. பாண்டியாறு
- புன்னம்புழா
திட்டம் நிறைவேற்றப்படும்.
24. நம்பியூரில்
ESI மருத்துவமனை
தொடங்க ஆவன செய்யப்படும்.
25. ஈரோட்டில்
தோல் பதப்படுத்தும்
பயிற்சிமையம்
அமைக்கப்படும்.
26. ஈரோட்டில்
மஞ்சள் ஏற்றுமதி
மையம் தரம் உயர்த்தப்படும்.
27.ஈரோட்டில்
இந்திய ஜவுளி
தொழில்நுட்ப அறிவியல்
பல்கலைக்கழகம்
தொடங்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
28. அந்தியூர்,
பவானி பகுதிகளில்
விவசாய நிலங்களுக்கு
நீர்ப்பாசன
வசதிகளைப்
பெருக்குவதற்காகத்
தோணிமடுவு பாசனத்
திட்டம் நிறைவேற்றப்பட
ஆவன செய்யப்படும்.
29. சத்தியமங்கலத்தில்
நறுமணத் தொழிற்சாலை
அமைக்கப்படும்.
30. சுதந்திரப்
போராட்ட வீரரும்
தீரன் சின்னமலை
அவர்களின் தளபதிகளில்
ஒருவருமான பொல்லான்
அவர்களுக்கு ஓடாநிலை
அருகே ஜெயராமபுரத்திலும்,
வல்வில் ஓரிக்குக்
கொல்லிமலையிலும்
நினைவு மண்டபங்கள்
கட்டப்படும்.
31. பெருந்துறையில்
சிப்காட் தொழிற்பேட்டை
அமைப்பதற்கு நிலம்
வழங்கிய உரிமையாளர்களுக்கு
உரிய இழப்பீடு
கிடைத்திட நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
32. புங்கம்பாடியில்
கால்நடை மருத்துவமனை
தொடங்கப்படும்.
33. ஈரோடு
நகரில் தற்போது
ஏற்பட்டுள்ள போக்குவரத்து
நெரிசலையும் எதிர்காலத்தில்
ஏற்படப் போகும்
போக்குவரத்து
நெரிசலையும் கருத்தில்
கொண்டு காளைமாடு
சிலையிலிருந்து
பேருந்து நிலையம்
செல்ல நால்ரோடு
அரசு மருத்துவமனை
வழியாகவும்;
பன்னீர்செல்வம்
பூங்கா மணிக்கூண்டு
வழியாகவும் மேம்பாலங்கள்
அமைக்கப்படும்.
34.உள்ளாட்சிகளில்
தனியாக வசூலிக்கப்படும்
குப்பைவரி நீக்கப்படும்.
35.விசைத்தறித்
தொழிலில் ஏற்பட்டுள்ள
தேக்க நிலையைச்
சரிசெய்ய மத்திய
அரசுடன் பேசி
தக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
1.மேட்டூர்
கூட்டுக் குடிநீர்
திட்டம் சின்னசேலம்
மற்றும் கள்ளக்குறிச்சிக்கு
விரிவுபடுத்தப்படும்.
2. கள்ளக்குறிச்சியில்
புறவழிச்சாலை
அமைக்கப்படும்.
3.கள்ளக்குறிச்சியில்
புதிய பேருந்து
நிலையம்
அமைக்கப்படும்.
4.கள்ளக்குறிச்சியில்
தொழிற்பேட்டை
அமைக்கப்படும்.
5. கள்ளக்குறிச்சியில்
அரசு பொறியியல்
கல்லூரி தொடங்கப்படும்.
6.முஸ்குந்தா
ஆறு அணை திட்டம்
நிறைவேற்ற ஆய்வு
மேற்கொள்ளப்படும்.
7.சின்னசேலம்
மற்றும் ரிஷிவந்தியத்தில்
ஒழுங்குமுறை விற்பனைக்
கூடங்கள் அமைக்கப்படும்.
8. ரிஷிவந்தியத்தில்
நெல் கொள்முதல்
நிலையம் அமைக்கப்படும்.
9.கள்ளக்குறிச்சி
கூட்டுறவு சர்க்கரை
(யூனிட் - II) ஆலையில் இரண்டாம்
நிலை பணிகள் மீண்டும்
தொடங்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
10.கோமுகி
ஆற்றில் கச்சராபாளையம்
மற்றும் கள்ளக்குறிச்சி
சாலையில் மேம்பாலம்
கட்டப்படும்.
11.மரவள்ளி
கிழங்கிற்குக்
குறைந்தபட்ச ஆதார
விலை நிர்ணயிக்கப்படும்.
சங்கராபுரத்தில்
மரவள்ளிக் கிழங்கு
தொழிற்சாலை அமைக்கப்படும்.
12. சின்னசேலம்-
கல்லாந்தம்
மலையில் சிறிய
அணை கட்டப்படும்.
13.கள்ளக்குறிச்சியில்
அரசு கலை அறிவியல்
கல்லூரியும்,
சங்கராபுரத்தில்
மகளிர் அரசு கலை
அறிவியல் கல்லூரியும்
தொடங்கப்படும்.
14.கள்ளக்குறிச்சி
மாவட்டத்தில்
கூட்டுக் குடிநீர்
திட்டத்தின் மூன்றாம்
கட்டப் பணிகள்
நிறைவேற்றப்படும்.
15. சங்கராபுரம்
அரசு மருத்துவமனை
நவீனப்படுத்தப்படும்.
16.கள்ளக்குறிச்சி
- திருவண்ணாமலை
சாலை நான்கு வழிச்சாலையாக
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
17 கள்ளக்குறிச்சிக்கும்
- திருவண்ணாமலைக்கும்
இடையே ரயில் போக்குவரத்து
ஏற்படுத்த முயற்சிகள்
மேற்கொள்ளப்படும்.
18. கல்வராயன்மலை
சுற்றுலா தலமாக
ஆக்கப்படும்.
19. கள்ளக்குறிச்சி
- உளுந்தூர்பேட்டையில்
பாதாள சாக்கடை
திட்டம்
நடைமுறைப்படுத்தப்படும்.
20. திருக்கோவிலூர்
காந்தி காய்கறி
மார்கெட் நகருக்கு
வெளியே மாற்றப்படும்.
21. வெள்ளிமலையில்
கடுக்காய் தொழிற்சாலை
அமைக்கப்படும்.
22.கள்ளக்குறிச்சியில்
ஒருங்கிணைந்த
நீதிமன்ற வளாகம்
கட்டப்படும்.
23.கள்ளக்குறிச்சி
மற்றும் சங்கராபுரத்தில்
புறவழிச் சாலைகள்
அமைக்கப்படும்.
24. ரிஷிவந்தியம்
பகுதியில் உள்ள
சாத்தனூர் வலதுபுறக்
கால்வாய், மேலப்பழங்கூர்
வழியாக பிரிவுடையம்பட்டு
வரையிலும் விரியூரிலிருந்து
மையலூர் வழியாக
மரூர் வரை நீட்டிக்கப்படும்.
25.திருக்கோவிலூர்
ஒன்றியம் ஜி.அரியுர் பகுதியில்
அரசு பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும்.
26.கள்ளக்குறிச்சி
நகராட்சியில்
பாதாள சாக்கடை
திட்டம் நிறைவேற்றப்படும்.
27. ரிஷிவந்தியம்
தனி தாலுக்காவாக
அமைக்கப்படும்.
28.மணலூர்பேட்டை
- தென்பெண்ணை
ஆற்றில் தடுப்பணை
அமைக்கப்படும்.
29. மணலூர்பேட்டை
ஆரம்ப சுகாதார
நிலையம் மருத்துவமனையாக
உயர்த்தப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம்
1. திருப்பெரும்புதூரில்
தொழிற்பயிற்சி
நிலையம் அமைக்கப்படும்.
2. வண்டலூரில்
துணை நகரம் அமைக்கப்படும்.
3. வேளச்சேரியில்
இருந்து மாமல்லபுரத்திற்குப்
பறக்கும் விரைவு
ரயில் திட்டம்
விரிவுபடுத்தப்பட்டுச்
செயல்படுத்தப்படும்.
4.வண்டலூர்
- வாலாஜாபேட்டை
ரயில் இணைப்புத்
திட்டம் செயல்படுத்தப்படும்.
5. குன்றத்தூர்,
மாங்காடு,
திருநீர்மலை
ஆகிய ஊர்களில்
சென்னைப் பெருநகர்
குடிநீர் திட்டம்
செயல்படுத்தப்படும்.
6. நெம்மேலி
கடல்நீரைக் குடிநீராக்கும்
திட்டப் பயன்கள்
ஆலந்தூர் மற்றும்
பல்லாவரம் பகுதிகளுக்கு
விரிவுபடுத்தப்படும்.
7. காஞ்சிபுரத்தில்
அண்ணா நூற்றாண்டு
பட்டுப் பூங்கா
மீண்டும் செயல்பட
நடவடிக்கை
எடுக்கப்படும்.
8. காஞ்சிபுரத்திலும்,
செய்யூரிலும்
சிப்காட் தொழிற்பேட்டைகள்
அமைக்கப்படும்.
9. செய்யூர்
- ஆலம்பறை கோட்டைவீடு
சுற்றுலா மையம்
ஆக்கப்படும்.
10.உத்திரமேரூர்,
குன்றத்தூர்,
மாமல்லபுரம்,
திருக்கழுக்குன்றம்,
திருப்போரூர்,
கீழம்பாக்கம்
அரசு மருத்துவமனைகள்
நவீனமயமாக்கப்டும்.
11. உத்திரமேரூர்,
மதுராந்தகம்,
பெருங்களத்தூர்,
பீர்க்கன்கரணை,
மாடம்பாக்கம்,
சிட்லபாக்கம்,
குன்றத்தூர்,
மாங்காடு,
கூடுவாஞ்சேரி,
நந்திவரம்,
திருநீர்மலை,
முடிச்சூர்,
பொழிச்சலூர்
ஆகிய ஊர்களில்
பாதாள சாக்கடை
திட்டம் நிறைவேற்றப்படும்.
12. குன்றத்தூரில்
சுற்றுச் சாலை
அமைக்கப்படும்.
13.திருப்பெரும்புதூரில்
இராமானுஜருக்கு
நினைவு மண்டபம்
கட்டப்படும்.
14. திருப்பெரும்புதூரில்
குளிர்பதனக் கிடங்கு
வசதிகள் அமைத்துத்
தரப்படும்.
15. உத்திரமேரூரிலும்,
காஞ்சிபுரத்திலும்
நகரங்களின் வெளியே
புதிய பேருந்து
நிலையங்கள் அமைக்கப்படும்.
16. காஞ்சிபுரத்தில்
அரசு மருத்துவக்
கல்லூரியும் அரசுச்
சட்டக் கல்லூரியும்
தொடங்கப்படும்.
17. வாலாஜாபாத்தில்
மீன் சந்தை அமைக்கப்படும்.
18. தேசிய
நெடுஞ்சாலையில்
காஞ்சிபுரம் காரப்பேட்டையில்
விபத்து சிகிச்சைப்
பிரிவுடன் அரசு
மருத்துவமனை கட்டப்படும்.
19. காஞ்சிபுரம்
அரசு மருத்துவமனை
பல்நோக்கு மருத்துவமனையாகத்
தரம் உயர்த்தப்படும்.
20. அனகாபுத்தூரில்
பெண்கள் மேல்நிலைப்
பள்ளி தொடங்கப்படும்.
21. திருக்கழுக்குன்றத்தில்
பால் கொள்முதல்
மையம் அமைக்கப்படும்.
22. மெட்ரோ
ரயில் சேவை பழைய
மாமல்லபுரம் சாலை
வழியாக மாமல்லபுரத்திற்கு
விரிவுபடுத்தப்படும்.
23. சென்னை
- திருச்சி தேசிய
நெடுஞ்சாலை,
கிழக்குக் கடற்கரைச்
சாலை, பழைய
மாமல்லபுரம் சாலை
ஆகியவற்றில் தேவையான
இடங்களில் மேம்பாலங்கள்
கட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
24. கீழாம்பி,
திருமுக்கூடல்
ஆகிய ஊர்களில்
நெல் கொள்முதல்
மையங்கள் அமைக்கப்படும்.
25.பாலாறு
குடிநீர் திட்டம்
மறைமலை நகரின்
அனைத்துப் பகுதிகளுக்கும்
விரிவுபடுத்தப்படும்.
26. முட்டுக்காடு
சுற்றுலா மையம்
தரம் உயர்த்தப்படும்.
27. காஞ்சிபுரத்தில்
காகித ஆலை தொடங்கப்படும்.
28. காஞ்சிபுரத்தில்
புறவழிச் சாலை
அமைக்கப்படும்.
29. காஞ்சிபுரம்
கூட்டுறவு நூற்பாலையைத்
திறக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
30.வேடந்தாங்கல்
பறவைகள் சரணாலயம்
மேம்படுத்தப்பட்டு
சர்வதேசச் சுற்றுலா
மையம் ஆக்கப்படும்.
மேலும் பறவைகள்
ஆராய்ச்சி மையம்
ஒன்றும் அங்கு
அமைக்கப்படும்.
31.நெம்மேலியில்
மீன்களைச் சேகரித்துப்
பாதுகாப்பதற்காகக்
குளிர்பதனக் கிடங்கு
அமைக்கப்படும்.
32. செம்பரம்பாக்கம்
ஏரியிலிருந்து
மாங்காடு நகருக்குக்
குடிநீர் வழங்க
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
33. ஆலந்தூர்
தொகுதியில் உள்ள
10 ஊராட்சிகளில்
உள்ள பூங்காவுக்கு
ஒதுக்கப்பட்ட
இடங்களில் அழகிய
பூங்காக்கள் அமைக்கப்படும்.
34. மழைக்
காலத்தில் போரூர்
ஏரியில் இருந்து
வெளியேறும் வெள்ள
நீர், ஆலந்தூர்
தொகுதியில் உள்ள
அய்யப்பன்தாங்கல்,
பரணிபுத்தூர்,
மௌலிவாக்கம்
ஆகிய பகுதிகளில்
நீர் தேங்காமல்
மணப்பாக்கம் கால்வாய்
வழியாக வெளியேற
நடவடிக்கை எடுக்கப்படும்.
35.ஆலந்தூர்
தொகுதிக்கு உட்பட்ட
கோவூர் ஊராட்சியில்
உள்ள புகழ்பெற்ற
அருள்மிகு சுந்தராம்பிகை
உடனுறை சுந்தரேசுவரர்
திருக்கோயிலில்
சிதிலம் அடைந்துள்ள
தேருக்குப் பதில்
அறநிலையத் துறையின்
சார்பில் சீரமைத்துப்
புதிய தேர் அமைக்கப்படும்.
36.மணப்பாக்கம்
சுடுகாட்டுக்கு
இராணுவத் துறையிடம்
இருந்து நிலத்தைப்
பெற்றுச் சுற்றுசுவர்
அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
37. ஆலந்தூர்
தொகுதியில் உள்ள
10 ஊராட்சிகளுக்குக்
கூட்டுக் குடிநீர்
திட்டம் உருவாக்கி,
குடிநீர் பிரச்சனைகள்
தீர்க்கப்படும்.
38. அய்யப்பன்தாங்கல்
போக்குவரத்துப்
பணிமனையில் தரைத்தளம்
அமைத்து இருக்கைகளுடன்
கூடிய நவீன பேருந்து
நிலையம் அமைத்துத்
தரப்படும்.
39.ஆலந்தூர்
தொகுதியில் போக்குவரத்துக்கு
இடையூறாக உள்ள
கெருகம்பாக்கம்
- மணப்பாக்கம்
சாலையையும்,
கோவூர் பரணிப்புத்தூர்
சாலையையும் அகலப்படுத்தி
போக்குவரத்து
நெரிசலைக் குறைக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
40.ஆலந்தூரில்
கிறித்தவர்களுக்கும்
இசுலாமியர்களுக்கும்
இறந்தவர்கள் அடக்கம்
செய்ய இடம் ஒதுக்கீடு
செய்யப்படும்.
41. கைத்தறி
நெசவாளர்களுக்கு
மழைக் காலங்களில்
தறிக்குழிகளில்
தண்ணீர் வந்துவிட்டால்
தொழில் செய்ய
முடியாமல் சிரமப்படும்
நிலையைப் போக்கிட
மழைக்கால நிவாரண
உதவித்தொகை வழங்கப்படும்.
42.ஆலந்தூர்
தொகுதி நந்தம்பாக்கத்தில்
மத்திய அரசின்
ஐனுஞடு-க்குச்
சொந்தமான நிலத்தில்
அரசு கலை அறிவியல்
கல்லூரி நிறுவ
நடவடிக்கை எடுக்கப்படும்.
43. கோடைக்
காலத்தில் குடிநீர்
தட்டுப்பாட்டைப்
போக்கிட ஆலந்தூர்
தொகுதி திரிசூலம்,
தலக்கணாஞ்சேரி
பகுதியில் உள்ள
கல்குவாரி பள்ளத்தில்
தேங்கியுள்ள நீரைச்
சுத்திகரித்துப்
பொது மக்களுக்கு
வழங்கிட நடவடிக்கை
எடுக்கப்படும்.
44. ஆலந்தூர்
தொகுதி மாதவபுரத்தில்
மழைக் காலத்தில்
தேங்கும் தண்ணீரை
வெளியேற்ற கத்திபாரா
பாலம் அருகே ழுளுகூ
சாலையி#2994;் இரண்டு
சிறு பாலங்கள்
அமைத்து மழை நீரை
வெளியேற்ற நடவடிக்கை
எடுக்கப்படும்.
45.ஆலந்தூர்
தொகுதி பழவந்தாங்கல்
தில்லை கங்கா
நகரில் மேம்பாலம்
அமைக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம்
1. விளவங்கோடு
- நெய்யாறு இடதுகரை
கால்வாய் தூர்வாரப்படும்;
மேலும் கேரளா
அரசிடம் பேச்சுவார்த்தைகள்
நடத்தி தண்ணீர்
கொண்டுவர நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
2. நாகர்கோவிலில்
சுற்றுச் சாலை
அமைக்கப்படும்.
3.கன்னியாகுமரியில்
அய்யாவைகுண்ட
சாமி ஆராய்ச்சி
மையம் அமைக்கப்படும்.
4.கன்னியாகுமரியிலிருந்து
நீரோடி வரை உள்ள
கடற்கரைக் கிராமங்களை
இணைக்கும் வகையில்
மேற்குக் கடற்கரைச்
சாலை சீரமைத்து
மேம்படுத்தப்படும்.
அதற்கு வசதியாக,
தேங்காய்பட்டினம்
மற்றும் ராஜாக்க
மங்கலத்தில் பாலங்கள்
அமைக்கப்படும்.
5.கன்னியாகுமரியில்
உள்ள அரசு ரப்பர்
கழகத்தின் பணிகளை
ஆய்வு செய்து
அவை சிறப்பாக
நடைபெறுவதற்கான
பரிந்ந்துரைகளைத்
தருவதற்காக ஒரு
குழு நியமிக்கப்பட்டு
மேல் நடவடிக்கை
எடுக்கப்படும்.
6. நாகர்கோவில்
செட்டிக்குளத்தில்
உள்ள அரசுப் பேருந்து
பணிமனை சீரமைக்கப்படும்.
7. கோட்டாறில்
குளிர்பதனக் கிடங்கு
அமைக்கப்படும்.
8.கன்னியாகுமரி
மாவட்டத்தில்
உள்ள AVM கால்வாய்
தூர்வாரப்பட்டு
நீர்வழிப்பாதை
சீர்படுத்தப்படும்.
9. குளச்சல்
மீன்பிடித் துறைமுகம்
விரிவுபடுத்தப்படும்.
10. வடக்கு
தாமரைக் குளத்தில்
பழையாற்றின் குறுக்கே
தடுப்பணை கட்டப்படும்.
11.கன்னியாகுமரி
மாவட்டத்தில்
தகவல் தொழிட்நுட்பப்
பூங்கா அமைக்கப்படும்.
12. கன்னியாகுமரி
மாவட்டத்தில்
சிறப்புப் பொருளாதார
மண்டலம் அமைக்கப்படும்.
13.பேச்சிப்பாறையில்
உள்ள அரசுத் தோட்டக்கலை
ஆராய்ச்சி மையம்
தோட்டக்கலை கல்லூரியாகத்
தரம் உயர்த்தப்படும்.
14.கல்குளம்
வட்டம் வாணியக்குடியில்
மீன்பிடித் துறைமுகம்
அமைக்கப்படும்.
15.குளச்சல்,
கணபதிபுரம்
மற்றும் குலசேகரம்
அரசு மருத்துவமனைகள்
நவீனப்படுத்தப்படும்.
16.தேங்காய்ப்பட்டினம்
துறைமுகம் ஆழப்படுத்தி
விரிவாக்கம் செய்யப்படும்.
17.தோவாளையில்
நிரந்தர நெல்
கொள்முதல் நிலையம்
அமைக்கப்படும்.
18.தோவாளையில்
நறுமணத் தொழிற்சாலை
தொடங்கப்படும்.
19. நாகர்கோவிலில்
தொழிற்பேட்டை
தொடங்கப்படும்.
20. நாகர்கோவில்
- கூடங்குளம்
அணு மின் உற்பத்தி
நிலையத்தை இணைக்கும்
சாலையில் தோவாளை
கால்வாய்க்குக்
கீழே உள்ள கூண்டுப்
பாலம் இருவழிப்
பாலமாக மாற்றப்படும்.
21.இராஜாக்கா
மங்கலம் பகுதியில்
புதிய பேருந்து
நிலையம் கட்டப்படும்.
22.இராஜாக்கா
மங்கலம் தேங்காய்
கொள்முதல் நிலையம்
அமைக்கப்படும்.
23.நாகர்கோவில்
அரசு மருத்துவமனை
புற்றுநோய் பிரிவு
தொடங்கப்படும்.
24.கன்னியாகுமரி
மாவட்டத்தில்
கிடைக்கும் இயற்கை
ரப்பரை வைத்து
ரப்பர் உதிரி
பாகங்கள் மற்றும்
ரப்பர் பொருள்கள்
தயாரிக்கும் தொழிற்சாலைகள்
ஏற்படுத்தவும்,
ரப்பர் சார்ந்த
தொழில்களை மேம்படுத்த
ரப்பர் பூங்கா
அமைக்கவும் நடவடிக்கை
எடுக்கப்படும்.
25. ரப்பருக்குக்
குறைந்தபட்ச ஆதார
விலை நிர்ணயிக்கப்படும்.
26. குமரி
மாவட்டத்தில்
விளையும் ரப்பர்,
நறுமணப் பொருள்கள்,
வாழை போன்றவற்றைக்
கொண்டு மதிப்புக்
கூட்டு பொருள்கள்,
உற்பத்தி செய்யும்
தொழில்கள் தொடங்க
கோரிய திறன் பயிற்சிக்கு
மானியம் மற்றும்
வங்கிக் கடனுதவி
இளைஞர்களுக்கு
வழங்கப்படும்.
27.குமரி
மாவட்டத்தில்
உள்ள இயற்கை எழில்
வாய்ந்த சுற்றுலா
தலங்களை மேம்படுத்திச்
சர்வதேச தரம்
வாய்ந்த ஒருங்கிணைந்த
சூழியல் சுற்றுலா
மையம் ஏற்படுத்தப்படும்.
28.தனியார்
காடுகள் சட்ட
விதிகளில் கழக
ஆட்சியின்போது
கொண்டு வரப்பட்ட
சட்டத் திருத்தங்கள்
செயல்படுவதில்
தற்போது உள்ள
நடைமுறைச் சிக்கல்கள்
நிர்வாக ரீதியாகச்
சரி செய்யப்படும்.
கரூர் மாவட்டம்
1.கரூரில்
சாயக்கழிவுகளைச்
சுத்திகரிப்பதற்காகக்
கழிவுநீர் சுத்திகரிப்பு
ஆலை அமைக்கப்படும்.
2.கரூர்,
வேலாயுதம் பாளையத்தில்
குளிர்பதனக் கிடங்கு
அமைக்கப்படும்.
3.கரூரில்
புதிய பேருந்து
முனையம் அமைக்கப்படும்.
4. அரவக்குறிச்சியில்
அரசு மருத்துவமனை
நவீனப்படுத்தப்படும்.
5.அமராவதி நீர்ப்பாசனத்
திட்டம் செயல்படுத்தப்படும்.
6.இயற்கை
வேளாண் விஞ்ஞானி
நம்மாழ்வார் பெயரில்
கரூரில் அரசு
இயற்கை வேளாண்மைக்
கல்லூரி அமைக்க
ஆவன செய்யப்படும்.
7.கரூரில்
சுற்றுவட்டச்
சாலை அமைக்கப்படும்.
8.கரூரில்
சாயப் பட்டறைப்
பூங்கா அமைக்கப்படும்.
9.கரூரில்
நவீன தொழில்நுட்ப
வசதியுடன் கூடிய
பஸ் பாடி பூங்கா
அமைக்கப்படும்.
10.கரூரில்
ஜவுளி துறை சார்ந்த
கண்காட்சி நடத்த
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
11.கரூரில்
பணிபுரியும் பெண்கள்
தங்குவதற்கு என்று
விடுதிகள் கட்டப்படும்.
12.கரூரில்
முருங்கை பவுடர்
உற்பத்தி தொழிற்சாலை
அமைக்கப்படும்.
13.கரூரில்
வெற்றிலை மற்றும்
வாழை ஆராய்ச்சி
மையம் அமைக்கப்படும்.
14.குளித்தலை
தாலுகா 350 ஏக்கர்
பரப்பளவு நல்லூர்
ஏரிக்குக் காவிரி
நீர் கொண்டு செல்ல
நடவடிக்கை எடுக்கப்படும்.
15.உள்ளூர்
கட்டுமானப் பணிகளுக்காக
அமராவதி மற்றும்
காவிரி ஆற்றில்
மாட்டு வண்டி
உரிமையாளர்கள்
மணல் அள்ள முறைப்படி
அனுமதி வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
16.கரூர்
மாவட்டத்தில்
நகராட்சிகளில்
உயர்த்தப்பட்ட
சொத்து வரி, குடிநீர் வரி
குப்பை வரி முறைப்படுத்தப்படும்.
17.கரூர்
நகராட்சி மாநகராட்சி
ஆக்கப்படும்.
18.கரூர்
மாவட்டத்தில்
அரசு கால்நடை
மருத்துவக் கல்லூரி
அமைக்கப்படும்.
19.அரவக்குறிச்சியில்
அரசு கலை அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
20.பள்ளப்பட்டி
பேரூராட்சிப்
பகுதிக்குத் தனியாகக்
காவிரி கூட்டுக்
குடிநீர் திட்டம்
அமைக்கப்படும்.
21.கரூர்
நகராட்சிக்கு
உட்பட்ட காமராசர்
மார்கெட்டில்
புதிய மார்கெட்
வளாகம் கட்டித்
தரப்படும்.
22.திருகாம்புலியூரில்
உள்ள லட்சுமி
நாராயணசாமி கோயிலுக்குக்
குடமுழுக்கு விழா
நடத்தப்படும்.
23.தாந்தோணி
பகுதிகளில் பாதாள
சாக்கடை திட்டம்
கொண்டு வரப்படும்.
24.புகலூர்,
பள்ளப்பட்டி
பேரூராட்சிகள்
நகராட்சிகளாக
உயர்த்தப்படும்.
25.புகழிமலை
திருக்கோயிலுக்குச்
சென்று வர அடிவாரத்திலிருந்து
கோயில் வரை வாகனப்
போக்குவரத்துக்குச்
சாலை அமைக்கப்படும்.
26.காகித
ஆலை மற்றும் சிமென்ட்
ஆலைகளுக்கு நிலம்
வழங்கிய குடும்ப
வாரிசுகளுக்கு
வேலை வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
27.காகித
ஆலை ஒப்பந்தத்
தொழிலாளர்களை
நிரந்தரத் தொழிலாளர்களாக
மாற்ற நடவடிக்கை
எடுக்கப்படும்.
28. க.பரமத்தி ஒன்றியத்தில்
உள்ள தரிசு நிலங்களை
மேம்படுத்தும்
வகையில் நதி நீரேற்றுப்
பாசன சங்கங்கள்
அமைக்கப்பட்டுக்
காவிரியிலிருந்து
தண்ணீர் கொண்டு
வந்து விவசாயம்
செய்திட நடவடிக்கை
எடுக்கப்படும்.
29.நொய்யல்
ஆத்துப்பாளையம்
அணையைச் சீரமைத்துச்
சுற்றுலா தலமாக
மேம்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும்.
30.வேட்டமங்கலம்
ஊராட்சியில் கழைக்
கூத்தாடிகளுக்கு
நிலம் வழங்கி
வீடுகள் கட்டித்
தரப்படும்.
31.பள்ளப்பட்டி
அரசு மருத்துவமனை
நவீன மயமாக்கப்படும்.
32.பழைய
ஜெயங்கொண்ட சோழபுரம்,
கிருஷ்ணராயபுரம்
பேரூராட்சிகளுக்குக்
காவிரி கூட்டுக்
குடிநீர் திட்டம்
விரிவுபடுத்தப்படும்.
33.கடவூர்
ஒன்றியப் பகுதிகளுக்குக்
காவிரி கூட்டுக்
குடிநீர் திட்டம்
விரிவுபடுத்தப்படும்.
34.குளித்தலை
அய்யன்மலை ரோப்கார்
திட்டம் செயல்படுத்த
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
35.குளித்தலையில்
புதிய பேருந்து
நிலையம் அமைக்கப்படும்.
36. குளித்தலையில்
பாதாள சாக்கடை
திட்டம் கொண்டு
வரப்படும்.
37.குளித்தலை
- மணப்பாறை சாலையில்
ரயில்வே மேம்பாலம்
அமைக்கப்படும்.
38. குளித்தலையில்
திருக்கடம்பந்துறையை
பூங்காவுடன் கூடிய
சுற்றுலா தலமாக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
39. தொகைமலைப்
பகுதிக்குக் காவிரி
கூட்டுக் குடிநீர்
திட்டம் விரிவுபடுத்தப்படும்.
கிருஷ்ணகிரி
மாவட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
1. கிருஷ்ணகிரி,
தேன்கனிக்கோட்டை,
ராயக்கோட்டையில்
குளிர்பதனக் கிடங்கு
அமைக்கப்படும்.
2. ஓசூரில்
நுளுஐ மருத்துவமனை
தரம் உயர்த்தப்படும்.
3. ஒகேனக்கல்
கூட்டுக் குடிநீர்
திட்டத்தின் கீழ்
அனைத்துக் கிராமங்களுக்கும்
குடிநீர் வழங்க
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
4. ஓசூரில் உள்வட்டச்
சாலை அமைக்கப்படும்.
5. ஓசூர்,
தேன்கனிக்கோட்டை,
ஊத்தங்கரையில்
அரசு மருத்துவமனைகள்
நவீனப்படுத்தப்படும்.
6. போச்சம்பள்ளி
- சூர்யகாந்தி
எண்ணெய் தயாரிப்புத்
தொழிற்சாலை அமைக்க
ஆவன செய்யப்படும்.
7. போச்சம்பள்ளியில்
கனிமப் பொருள்
ஏற்றுமதி மையம்,
பூக்கள் ஏற்றுமதி
மையம் தொடங்க
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
8. கிருஷ்ணகிரியில்
ஒருங்கிணைக்கப்பட்ட
நீதிமன்ற வளாகம்
கட்டப்படும்.
9. ஓசூர்
நகரில் தண்ணீர்
தேவையைப் பூர்த்தி
செய்வதற்காகக்
கெலவரப்பள்ளி
அணையிலிருந்து
ராமநாயக்கன் ஏரிக்குத்
தண்ணீர் கொண்டுவர
ஆவன செய்யப்படும்.
10. தென்பெண்ணை
ஆற்றிலிருந்து
உபரிநீர், நாகமங்கலம்
லட்சுமி நாராயண
ராயலு ஏரிக்குக்
கொண்டு வரப்பட்டு
நீர்ப்பாசன வசதிகளைப்
பெருக்க ஆவன செய்யப்படும்.
11.ஓசூர்
தகவல் தொழிட்நுட்பப்
பூங்கா மீண்டும்
செயல்பட நடவடிக்கை
எடுக்கப்படும்.
12. ஓசூரில்
ஆண் பணியாளர்களுக்கும்,
பெண் பணியாளர்களுக்கும்
தங்குவதற்குத்
தனித்தனியே விடுதிகள்
கட்டப்படும்.
13.பகலூர்,
அஞ்செட்டி,
மத்திகிரியில்
பேருந்து நிலையம்
அமைக்கப்படும்.
14. பர்கூரில்
அரசு கலை அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
15. தென்பெண்ணை
ஆற்றில் கழிவுநீர்
கலப்பதைத் தடுப்பதற்காகக்
கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில்
கொடியாலத்தில்
சுத்திகரிப்பு
ஆலை அமைக்க ஆவன
செய்யப்படும்.
16. கெலவரப்பள்ளி
அணையிலிருந்து
தண்ணீர் கொண்டு
வரப்பட்டு சூலகிரி
ஏரி நிரப்படும்.
17.போச்சம்பள்ளி
- மருதேரியில்
ஆரம்ப சுகாதார
நிலையம் அமைக்கப்படும்.
18. மாத்தூரில்
பனை வாரியம் மீண்டும்
செயல்பட நடவடிக்கை
எடுக்கப்படும்.
19. பர்கூரில்
ஜவுளிப் பூங்கா
அமைக்கப்படும்.
20. பழைய
தோட்டத்தில் கால்நடை
மருத்துவமனை அமைக்கப்படும்.
21. பர்கூர்
மக்களுக்குக்
குடிநீர் வழங்குவதற்காக
கிருஷ்ணகிரி பெரிய
ஏரியிலிருந்து
தண்ணீர் கொண்டுவரப்பட்டு
சிந்தாகம்பள்ளி
ஏரி நிரப்பப்படும்.
22. தென்பெண்ணை
ஆற்றின் குறுக்கே
கட்டப்பட்டுள்ள
ஆலியாலம் அணை
150 அடியாக உயர்த்தப்படவும்
மின் உற்பத்தி
தொடங்கவும் ஆய்வு
செய்திட நடவடிக்கை
எடுக்கப்படும்.
23. கிருஷ்ணகிரியில்
நறுமணத் தொழிற்சாலை
அமைக்கப்படும்.
24. கிருஷ்ணகிரியில்
அரசு வேளாண்மைக்
கல்லூரி தொடங்கப்படும்.
25.ஓசூரில்
கூடுதல் SIPCOT தொழிற்பேட்டை
மேலும் விரிவுபடுத்தப்படும்.
26. ஓசூர்
- பெங்களூர்
இடையே மெட்ரோ
ரயில் தொடங்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
27.கிருஷ்ணகிரியில்
உயிரி பூங்கா(க்ஷiடி-ஞயசம) தொடங்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
28. KRP அணையில்
இருந்து உபரிநீரைப்
பாம்பாறுக்குத்
திருப்பிவிட நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
29. கிருஷ்ணகிரியில்
மாம்பழக் கூழ்
தொழிற்சாலை அமைக்கப்படும்.
மதுரை மாவட்டம்
1. மதுரை
நகரின் மையப்பகுதியில்
உள்ள வெங்காய
மண்டி, பழ மார்க்கெட்
ஆகியன நகருக்கு
வெளியே அமைக்கப்படும்.
2. மதுரையில்
சுற்றுப் புறவழிச்சாலை
அமைக்கப்படும்.
3. மதுரை
நகரில் பெரியார்
பேருந்து நிலையம்,
காளவாசல் பகுதி
மற்றும் கோரிப்பாளையத்தில்
தேவர் சிலை அருகில்
மேம்பாலங்கள்
கட்டப்படும்.
4. பூக்களைச்
சேமித்துப் பாதுகாப்பாக
வைப்பதற்காக மதுரையில்
குளிர்பதனக் கிடங்கு
அமைக்கப்படும்.
5. மதுரை
சந்தைப்பேட்டையில்
ஆழ்துளைக் கிணறுடன்
கூடிய வண்ணாந்துறை
அமைக்கப்படும்.
6. பெரியார்
நீர்ப்பாசனத்
திட்டம் கொட்டாம்பட்டிவரை
நீட்டிக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
7. சேடப்பட்டி
- டேராபாறை திட்டம்
நிறைவேற்றப்படும்.
8. மதுரை
மாநகராட்சியில்
புதிதாக இணைக்கப்பட்டுள்ள
பதினோரு வட்டங்கள்,
திருமங்கலம்
மற்றும் உசிலம்பட்டியில்
பாதாள சாக்கடை
திட்டம் செயல்படுத்தப்படும்.
9. உசிலம்பட்டியில்
பெண்களுக்கு என்று
தனியாக மேல்நிலைப்
பள்ளி தொடங்கப்படும்.
10. உசிலம்பட்டியில்
மதுரை - தேனி
நெடுஞ்சாலையில்
மேம்பாலம் காட்டப்படும்.
11. சிறுமலை
வடபட்டி வட்டத்தில்
உள்ள 35 கிராமங்களின்
நீர்ப்பாசன வசதிகளைப்
பெருக்குவதற்காக
முல்லை பெரியாறு
கால்வாயிலிருந்து
சாத்தையாறு அணைக்கு
நீர் கொண்டுவர
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
12. வாடிப்பட்டியில்
உற்பத்தி செய்யப்படும்
பட்டுப்புழுக்களை
காதி வாரியத்தின்
மூலம் கொள்முதல்
செய்ய நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
13. மதுரை
காமராசர் பல்கலைக்கழகத்தின்
அருகில் உள்ள
தகவல் தொழிட்நுட்பப்
பூங்கா மீண்டும்
செயல்பட நடவடிக்கை
எடுக்கப்படும்.
14. மதுரை
பாண்டியராஜபுரம்
மற்றும் அலங்காநல்லூர்
கூட்டுறவு சர்க்கரை
ஆலைகள் மீண்டும்
செயல்பட நடவடிக்கை
எடுக்கப்படும்
15. 1920 ஏப்ரல்
3-ஆம் நாள் பெருங்காமநல்லூர்
கிராமத்தில் காவலர்களால்
சுட்டுக் கொல்லப்பட்ட
விடுதலைப் போராட்ட
வீரர்களுக்கு
நினைவு மண்டபம்
கட்டப்படும்.
16. சோழவந்தானில்
நெல் கொள்முதல்
மையம் அமைக்கப்படும்.
17. சோழவந்தான்,
உசிலம்பட்டி,
உத்தப்ப நாயக்கனூர்
ஆகியவற்றில் பழங்கள்,
காய்கறிகள்,
பூக்கள் ஆகியன
வைப்பதற்காகக்
குளிர்பதனக் கிடங்கு
அமைக்கப்படும்.
18. சோழவந்தானில்
உள்ள அரசு மருத்துவமனை
தரம் உயர்த்தப்பட்டு
24மணி நேரமும்
செயல்பட நடவடிக்கை
எடுக்கப்படும்.
19. மதுரை
நகரின் குடிநீர்
தேவைகளை நிறைவு
செய்யும் வகையில்
மாடக்குளம் கண்மாயில்
நிரந்தர நீர்த்தேக்கம்
அமைக்கப்படும்.
20. உசிலம்பட்டியில்
தொழிற்பேட்டை
அமைக்கப்படும்.
உசிலம்பட்டியில்
புறவழிச்சாலை
அமைக்கப்படும்.
22. மதுரையில்
ஜவுளி பூங்கா
அமைக்கப்படும்.
23. மதுரை
கிழக்கு தொகுதியில்
உள்ள வண்டியூர்
கண்மாய் கரைப்
பகுதியில் ஒரு
பொழுதுபோக்கு
பூங்கா அமைக்க
ஏற்பாடு செய்யப்படும்.
24. நாகனாகுளம்
கண்மாய் தூர்வாரப்பட்டு
அதன் கரையில்
நடைபயிற்சி மேற்கொள்வதற்காகப்
பூங்கா அமைக்கப்பட்டு
கண்மாயில் படகுகள்
விட ஏற்பாடுகள்
செய்யப்படும்.
25. செல்லூரில்
உள்ள கண்மாய்க்
கரையில் பூங்காவும்
நடைப் பயிற்சியாளர்களுக்கு
நடைபாதையும் அமைக்கப்படும்.
26. மதுரை
நகர் சுப்பிரமணியபுரத்தில்
ரயில்வே பாதையின்
கீழ் சுரங்கப்
பாதை அமைக்கப்படும்.
27. மதுரை
திருமங்கலத்தில்
உள்ள அரசு ஓமியோபதி
மருத்துவக் கல்லூரி
தரம் உயர்த்தப்பட்டு
உயர் ஆராய்ச்சி
மையம் தொடங்கப்படும்.
28. சோழவந்தான்
அருகே வைகை ஆற்றிலும்
உசிலம்பட்டியின்
அசுமா ஆற்றிலும்
தடுப்பணைகள் கட்டப்படும்.
29. அலங்காநல்லூரில்
தொழிற்பயிற்சி
நிலையம் அமைக்கப்படும்.
30. திருப்பரங்குன்றத்தில்
மேம்பாலம் அருகே
சுரங்கப்பாதை
அமைக்கப்படும்.
31.திருமங்கலம்,
ஐராவதநல்லூர்
மற்றும் உசிலம்பட்டியில்
நவீன வசதிகளுடன்
கூடிய புதிய பேருந்து
நிலையம் அமைக்கப்படும்.
32. உசிலம்பட்டி
மற்றும் திருப்பரங்குன்றத்தில்
நறுமணத் தொழிற்சாலை
அமைக்கப்படும்.
33. சுற்றுச்சூழல்
மாசுபடுவதிலிருந்து
பாதுகாக்கப்படுவதற்காகக்
கழிவுநீர் சுத்திகரிப்பு
நிலையங்கள் அமைக்கப்பட்டு
மதுரை மாநகராட்சிப்
பகுதிக்குள் ஓடும்
வாய்க்கால்கள்
அனைத்தும் தூய்மைப்படுத்தப்படும்.
34. கள்ளிக்குடி
வட்டத்தில் நீர்ப்பாசன
வசதிகள் பெருக்குவதற்காக
வைகை ஆற்றுடன்
கமண்டல நதியை
இணைக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
35. கூகல்லுப்பட்டியில்
அரசு பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும்.
36. ஐராவதநல்லூரில்
ஆரம்ப சுகாதார
நிலையம் அமைக்கப்படும்.
37. அனுப்பானடியில்
அனைத்து வீடுகளுக்கும்
சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் வழங்க
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
38. வைகை
கூட்டுக் குடிநீர்
திட்டம் திருமங்கலம்
ஒன்றியத்திற்கு
நீட்டிக்கப்படும்.
39.தோப்பூரில்
AIIMS ஆளு மருத்துவமனை
தொடங்க விரைந்து
நடவடிக்கைகள்
எடுக்க வேண்டுமென்று
மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.
40.எழுமலையில்
உள்ள ஆரம்ப சுகாதார
நிலையம் மருத்துவமனையாகத்
தரம் உயர்த்தப்படும்.
41. ஒத்தக்கடையில்
அரசு கலை அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
42. சென்னையில்
அமைந்துள்ள அண்ணா
நூற்றாண்டு நூலகம்
போல கலைஞர் நூலகம்
மதுரையில் அமைக்கப்படும்.
43.நெசவாளர்கள்
மழைக் காலங்களில்
பாவுத் தொழில்
செய்ய முடியாமல்
போகும் போது அந்தக்
காலங்களுக்கு
மானியமாக உதவித்
தொகை வழங்கப்படும்.
44.திருமங்கலம்
- உசிலம்பட்டி
நகராட்சியில்
பாதாள சாக்கடை
திட்டம் நிறைவேற்றப்படும்.
மயிலாடுதுறை மாவட்டம்
1.தலைஞாயிறு
சர்க்கரை ஆலை, கே.ஆர். ராமசாமி
கூட்டுறவு சர்க்கரை
ஆலை ஆகியன மீண்டும்
செயல்பட நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
2.மயிலாடுதுறை
அரசு மருத்துவமனை
பல்நோக்கு மருத்துவமனையாகத்
தரம் உயர்த்தப்படும்.
3. மயிலாடுதுறையில்
சட்டக் கல்லூரி
தொடங்கப்படும்.
4.மயிலாடுதுறை
பேருந்து நிலையம்
விரிவுபடுத்தப்பட்டு
நவீனப்படுத்தப்படும்.
5. மயிலாடுதுறையில்
குளிர்பதனக் கிடங்கு
அமைக்கப்படும்.
6. சீர்காழியில்
பாதாள சாக்கடை
திட்டம் செயல்படுத்தப்படும்.
7. மயிலாடுதுறைக்கும்
தரங்கம்பாடிக்கும்
இடையே புகைவண்டி
வசதிகள் செய்ய
முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
8. மயிலாடுதுறையில்
அரசு மருத்துவக்
கல்லூரி தொடங்கப்படும். 9. மயிலாடுதுறையில்
சுற்றுச் சாலை
அமைக்கப்படும்.
10. மயிலாடுதுறையில்
மூவலூர் ராமாமிர்தம்
அம்மையாருக்குச்
சிலை நிறுவப்படும்.
11. மயிலாடுதுறையில்
அரசு பொறியியல்
கல்லூரி தொடங்கப்படும்.
12. பூம்புகாரில்
மாபடுகை கல்லணை
சாலை மற்றும்
நீடூர் - மாபடுகை
இடையே ரயில்வே
மேம்பாலங்கள்
கட்டப்படும்.
13. மயிலாடுதுறையில்
புறவழிச் சாலை
அமைக்கப்படும்.
14.மயிலாடுதுறை, சீர்காழியில்
சிப்காட் தொழிற்பேட்டை
அமைக்கப்படும்.
15. தரங்கம்பாடியில்
சீகன்பால்க் அய்யர்
சிலை நிறுவப்படும்.
16. கொள்ளிடம், காவிரி, உப்பனாறு
குறுக்கே உப்புத்
தண்ணீர் ஏறாமல்
இருக்க தடுப்பணைகள்
அமைக்கப்படும்.
17. பூம்புகார்
தொகுதியில் அரசு
வேளாண்மைக் கல்லூரி
தொடங்கப்படும்.
18. மீனவர்
கிராமங்களுக்குக்
கடல் அரிப்பைத்
தடுப்பதற்குத்
தடுப்புச் சுவர்
கட்டப்படும்.
19. பூம்புகார், தரங்கம்பாடி
ஆகிய ஊர்கள் அனைத்து
வசதிகளுடன் கூடிய
சிறப்புச் சுற்றுலா
மையங்களாக மேம்படுத்தப்படும்.
20.சீர்காழி
அரசு மருத்துவமனை
பல்நோக்குச் சிறப்பு
மருத்துவமனையாக
உயர்த்தப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டம்
1.நாகப்பட்டினத்தில்
மீன் பதப்படுத்தும்
நிலையமும், வேளாங்கண்ணியில்
மீன் உலர்தளமும்
அமைக்கப்படும்.
2. நாகூரில்
உள்கட்டமைப்பு
வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுச்
சுற்றுலா மையமாக
மேம்படுத்தப்படும்.
3.வேதாரண்யத்தில்
காஸ்டிக் சோடா
தொழிற்சாலை அமைக்கப்படும்.
4.நாகப்பட்டினம்,
வேதாரண்யத்தில்
குளிர்பதனக் கிடங்குகள்
அமைக்கப்படும்.
5. நாகப்பட்டினத்தில்
ஒருங்கிணைந்த
நீதிமன்ற வளாகம்
கட்டப்படும்.
6.நாகப்பட்டினம்
- அக்கரபேட்டை
மற்றும் கீழ்வேளூரிலிருந்து
கச்சனம் சாலையில்
ரயில்வே மேம்பாலங்கள்
கட்ட நடவடிக்கை
எடுக்கப்படும்.
7.வேதாரண்யத்தில்
நறுமணத் தொழிற்சாலையும்,
காகிதம் தயாரிக்கும்
தொழிற்சாலையும்
அமைக்கப்படும்.
8. தோப்புத்துறை
நாலுவேதபதி
- கள்ளிமேடு
பகுதிகளில் தடுப்பணை
கட்டப்படும்.
9. தெற்குப்
பொய்கைநல்லூர்
மற்றும் கீழையூரில்
மாம்பழச் சாறு
தொழிற்சாலை தொடங்கப்படும்.
10. நாகூர்
அரசு மருத்துவமனையில்
வசதிகள் மேம்படுத்தப்படும்.
11 வேதாரண்யம்
- ஆயக்காரன்புலத்தில்
அரசு பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும்.
12. கீழ்வேளூர்
பேரூரில் வேளாண்மைக்
கல்லூரி தொடங்கப்படும்.
13. கீழ்வேளூர்
தொகுதியில் மீன்கள்
வைப்பதற்காகக்
குளிர்பதனக் கிடங்கு
அமைக்கப்படும்.
14. நாகப்பட்டினத்தில்
உரத் தொழிற்சாலை
அமைக்கப்படும்.
15. நாகப்பட்டினத்தில்
கடல் உணவு மண்டலம்
உருவாக்கப்படும்.
16. பழையாறு,
குழையாறு,
தொடுவாறு மற்றும்
திருமுல்லைவாசலில்
தூண்டில் வளைவு
அமைக்கப்படும்.
17. திருமருகலில்
தொழிற்பேட்டை
அமைக்கப்படும்.
18. உப்பனாற்றின்
குறுக்கே நாகப்பட்டினம்
மேலக்கோட்டைவாசலில்
மேம்பாலம் கட்டப்படும்.
19. நாகப்பட்டினம்
அக்கரைபேட்டை
மீன் இறங்குதளம்
நவீன தரத்துடன்
விரிவாக்கம் செய்யப்படும்.
20. நாகூர்
முதல் கோடியக்கரை
வரையிலான கடற்கரை
கிராமங்கள் பாறை
கற்கள் அமைத்துப்
பாதுகாக்கப்படும்.
21. திருமருகல்
- கீழ்வேளூர்
ஒன்றியங்களை இணைக்கும்
வகையில் ஒக்கூர்
பகுதியில் தடுப்பணையுடன்
கூடிய மேம்பாலம்
அமைக்கப்படும்.
22. திருமருகல்
தனி தாலுக்காவாக
அறிவிக்கப்படும்.
23. நாகப்பட்டினம்
நகரத்தில் அரசு
ஆண்கள் மேல்நிலைப்
பள்ளி தொடங்கப்படும்.
24. நாகப்பட்டினம்
நகரில் ரயில்வே
கீழ்பாலம், கேட் எண்.47 அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
25.திருமருகல்
ஒன்றியத்தில்
பருத்தி கொள்முதல்
நிலையம் அமைக்கப்படும்.
26.நாகப்பட்டினம்
சாமாந்தான்பேட்டை
கிராமத்தில் தூண்டில்
வளைவு அமைக்கப்படும்
27.நாகப்பட்டினம்
நகரத்தில் கடுவையாறு
மற்றும் உப்பனாறு
கரைகளில் இருபுறமும்
கரைகளை உயர்த்தி
நகரத்தில் நீர்
புகாமல் பாதுகாக்கப்படும்.
28. திட்டசேரி
அரசு மருத்துவமனை
நவீனப்படுத்தப்படும்.
நாமக்கல் மாவட்டம்
1. காவிரி - மணிமுத்தாறு
இணைப்புத் திட்டம்
நிறைவேற்றப்படும்.
2. திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரம்
ஆகிய ஊர்களில்
புறவழிச் சாலைகள்
அமைக்கப்படும்.
3. மோகனூர்
கால்வாய், குமாரபாளையம்
கால்வாய், ராஜா வாய்க்கால்
நீர்ப்பாசனத்
திட்டம் செயல்படுத்தப்படும்.
4. பரமத்திவேலூரில்
வெற்றிலை ஆராய்ச்சி
மையம் மீண்டும்
செயல்பட நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
5. குமாரபாளையம்
மற்றும் பள்ளிப்பாளையத்தில்
சாயக் கழிவுகளைச்
சுத்தப்படுத்த
பொதுவான சுத்திகரிப்பு
நிலையம் அமைக்கப்படும்.
6. நாமக்கல்லில்
முட்டைகள் சேமித்து
வைப்பதற்காக குளிர்பதனக்
கிடங்கு அமைக்கப்படும்.
7. நாமக்கல்லில்
இருந்து திருச்சிக்கு
நான்கு வழிச்சாலை
அமைக்க ஆவன செய்யப்படும்.
8. நாமக்கல்
மற்றும் மோகனூரில்
புதிய குடிநீர்
திட்டம் நிறைவேற்றப்படும்.
9. நாமக்கல், திருச்செங்கோட்டில்
சுற்றுச் சாலைகள்
அமைக்கப்படும்.
10. உயர் அழுத்த
மின்சார வழித்தடங்கள் (கேபிள்கள்) விவசாய
நிலங்களின் வழியாகப்
போகாமல் சாலை
ஓரத்தின் வழியாகச்
செல்ல நடவடிக்கை
எடுக்கப்படும்.
11. நாமக்கல்லில்
கால்நடை மருத்துவமனையும்
ஆராய்ச்சி மையமும்
அமைக்கப்படும்.
12. மோகனூர்
கூட்டுறவு சர்க்கரை
ஆலையில் மின்
உற்பத்தி செய்ய
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
13. கதிராநல்லூர், திருமலைப்பட்டி
மற்றும் கன்னூர்பட்டி
ஏரிகள் சரபங்கா
கால்வாய் திட்டத்துடன்
இணைக்கப்படும்.
14. சேந்தமங்கலத்தில்
விவசாயக் குளிர்பதனக்
கிடங்கு அமைக்கப்படும்.
15. காவிரி - பெண்ணையாறு - மணிமுத்தாறு
இணைப்புத் திட்டம்
நிறைவேற்றப்பட
நடவடிக்கை எடுக்கப்படும்.
16. திருச்செங்கோட்டில்
பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும். 17. நாமக்கல்
மற்றும் திருச்செங்கோட்டில்
தொழிற்பேட்டை
அமைக்கப்படும்.
18. திருமணிமுத்தாறு - ஒகேனக்கலில்
இருந்து காவிரி
உபரி நீர் சேலம்
மற்றும் நாமக்கல்
மாவட்டங்களுக்குத்
திருப்பி விடப்படும்.
19. கொல்லிமலைக்குப்
போக்குவரத்து
வசதிகள் அதிகப்படுத்தப்படும்.
20. நாமக்கல்
கவிஞர் இராமலிங்கம்
பிள்ளைக்கு நினைவு
மண்டபம் கட்டப்படும்.
21. நாமக்கல்லில்
ஜவ்வரிசி தொழிற்சாலை
அமைக்கப்படும்.
22. நாமக்கல்லில்
அரசு பொறியியல்
கல்லூரி தொடங்கப்படும். 23. திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரத்தில்
சுற்றுச் சாலைகள்
அமைக்கப்படும்.
24. கொல்லிமலை
தேசிய சுற்றுலா
மையமாகத் தரம்
உயர்த்தப்படும்.
25. திருச்செங்கோடு
அர்த்தநாரீசுவரர்
கோயிலுக்கு ரோப்கார்
வசதிகள் செய்து
தரப்படும்.
26. கோழிகளின்
தீவனமான சோயா, SF.Red
Seed.GN ஆகியவைகளுக்கு
GST -யிலிருந்து
வரிவிலக்கு பெற
தி.மு.க. முயற்சிகள்
எடுக்கும்.
27. புதுச்சத்திரம்
ஒன்றியம் நைனாமலை
பெருமாள் கோயில்
மலைப்பாதை முழுமையாக
அமைக்கப்படும்.
28. நாமக்கல்லில்
உள்ளாட்சி அமைப்புகள்
மூலமாக லாரி மற்றும்
கனரக வாகனங்கள்
நிறுத்தும் இடம் (PARKING YARD)
அமைத்துத்
தரப்படும்.
29. நாமக்கல்லில்
பிரதான தொழிலாக
உள்ள லாரி தொழில்
செய்து வருவோரைக்
காப்பாற்ற அனைத்து
முயற்சிகளும்
எடுக்கப்பட்டு
லாரித் தொழில்
நலவாரியம் அமைக்க
முயற்சி மேற்கொள்ளப்படும்.
நீலகிரி மாவட்டம்
1. நீலகிரியில்
தகவல் தொழிட்நுட்பப்
பூங்கா அமைக்கப்படும்.
2. சேரம்பாடி
தேயிலை தோட்டப்
பகுதியில் அரசு
மருத்துவமனை தொடங்கப்படும்.
3. தமிழ்நாடு
அரசுத் தோட்டக்
கழகத்தில் மூன்றாண்டுகளுக்கு
மேல் பணியாற்றியவர்களின்
பணி நிரந்தரப்படுத்தப்படும்.
4. கூடலூர்
அரசு மருத்துவமனை
நவீனப்படுத்தப்படும்.
5.மத்திய
அரசினால் குஜராத்
மாநிலத்தி#2993;்கு
மாற்றப்பட்ட உருளைக்கிழங்கு
ஆராய்ச்சி மையம்
மாநில அரசு மூலம்
புதிதாக நீலகிரியில்
அமைக்கப்படும்.
6. நீலகிரி
மாவட்டத்தில்
தேயிலைத் தோட்டத்
தொழிலாளர்களுக்குக்
குறைந்தபட்ச ஊதியம்
நிர்ணயிக்கப்படும்.
7. கூடலூரில்
பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும்
8. நீலகிரியில்
பொறியியல் கல்லூரி
தொடங்கப்படும்.
9. நீலகிரி
மாவட்டம் குன்னூரில்
அரசு கலை அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
10. நீலகிரி
மாவட்ட பிரதானத்
தொழிலான பச்சைத்
தேயிலை உற்பத்தி
செய்யும் விவசாயிகளைப்
பாதுகாத்திட,
அதற்கு நிரந்தர
ஆதார விலை நிர்ணயம்
செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும்.
11. நீலகிரி
மாவட்டத்தில்
அனுமதி பெறாமல்
கட்டி முடிக்கப்பட்டுள்ள
கட்டடங்களுக்கு,
அனுமதி பெறாமல்
கட்டிய மற்ற மாவட்டங்களுக்கு
அனுமதி வழங்கியது
போல் நீலகிரிக்கும்
அனுமதி வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
12. நீலகிரி
மாவட்டத்தில்
கட்டடம் கட்ட
மாஸ்டர் ப்ளானில்
உள்ள தடைச் சட்டத்தில்
தளர்வுகள் ஏற்படுத்திட
நடவடிக்கை எடுக்கப்படும்.
13. குன்னூர்,
கூடலூர், பந்தலூர் ஆகிய
இடங்களில் உள்ள
அரசு மருத்துவமனைகள்
நவீன சிகிச்சை
வசதிகளுடன் தரம்
உயர்த்தப்படும்.
14. உலக
சுற்றுலா தலமான
நீலகிரி மாவட்டத்தில்
உதகை, குன்னூர்
மற்றும் கூடலூர்
பகுதிகளில் தேவையான
இடங்களில் நவீன
வசதிகளுடன் கூடிய
ஹைட்ராலிக் கார்
பார்க்கிங் வசதி
ஏற்படுத்தப்படும்.
15.சுற்றுலா
முக்கியத்துவம்
வாய்ந்த உதகைப்
படகு இல்லம் மேம்படுத்தப்படும்.
16.நீலகிரி
மாவட்டத் தோட்டத்
தொழிலாளர்கள்,
தோட்டத் தொழிலாளர்கள்
நல வங்கிகளில்
(Plantation Bank) பெற்றுள்ள
கடன்களை ரத்து
செய்ய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
பெரம்பலூர் மாவட்டம்
1. கைகளத்தூரில்
நூலகம் அமைக்கப்படும்.
2. கொள்ளிடம்
கூட்டுக் குடிநீர்
திட்டம் பெரம்பலூருக்கு
நீட்டிக்கப்படும்.
3. எரையூரில்
உள்ள நேரு சர்க்கரை
ஆலை இரண்டாம்
அலகு மீண்டும்
செயல்படவும் மின்
உற்பத்தி தொடங்கவும்
நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
4. முந்தைய
தி.மு.க. ஆட்சிக்
காலத்தில் பெரம்பலூரில்
தொடங்கப்பட்ட
சிறப்புப் பொருளாதார
மண்டலம் மீண்டும்
செயல்பட நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
5. பெரம்பலூர்
அருகே தேசிய நெடுஞ்சாலையில்
விபத்து சிகிச்சை
மையம் தொடங்கப்படும்.
6. பெரம்பலூர்
மற்றும் லெப்பைக்குடிகாட்டில்
பாதாள சாக்கடை
திட்டம் நிறைவேற்றப்படும்.
7. லெப்பைக்குடிகாட்டில்
உள்ள அரசு மருத்துவமனை
தரம் உயர்த்தப்படும்.
8. பூலம்பாடியில்
கலிங்கா ஓடை நீர்த்தேக்கம்
அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
9. மலையாளப்பட்டி
சின்னமுட்டு நீர்த்தேக்கம்
அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
10. பெரம்பலூர், வேப்பூர்
மற்றும் ஏ.களத்தூரில்
குளிர்பதனக் கிடங்கு
அமைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.
11. குன்னத்தில்
மருத்துவக் கல்லூரி
தொடங்கப்படும்.
12. பெரம்பலூரில்
பொறியியல் கல்லூரி
தொடங்கப்படும்.
13. பருத்தியை
அடிப்படையாகக்
கொண்ட தொழிற்சாலைகள்
தொடங்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
14. பெரம்பலூர்
மற்றும் வாலிகண்டபுரத்தில்
உள்ள அரசு மருத்துவமனைகள் பல்நோக்கு
மருத்துவமனைகளாகத்
தரம் உயர்த்தப்பட்டு
அங்கு
24மணிநேரமும்
செயல்படக் கூடிய
விபத்து சிகிச்சைப்
பிரிவுகள் தொடங்கப்படும்.
15. திருவாலந்துறையில்
கால்நடை மருத்துவமனை
தொடங்கப்படும்.
16. மருதையாற்றின்
குறுக்கே நொச்சியம்
முதல் சிறுவாச்சூர்
வரையிலும், ஜமீன்
பேரையூரிலிருந்து
கூடலூர் வரையிலும்
மேம்பாலங்கள்
கட்டப்படும்.
17. ரஞ்சன்குடிகோட்டை
சுற்றுலா மையம்
ஆக்கப்படும்.
18. கல்லாற்றில்
பிம்பலூரில் இருந்து
புதூர் வரை மேம்பாலம்
கட்டப்படும்.
19.சின்னாறு
நீர்ப்பாசனத்
திட்டம் செயல்படுத்தப்படும்.
20. பூலம்பாடியில்
புதிய பேருந்து
நிலையம் கட்டப்படும்.
21. வல்லப்பாறை
அருவியின் கீழ்
அணை கட்டப்படும்.
22. பெரம்பலூர்
அருகே தேசிய நெடுஞ்சாலை
அருகில் பேருந்து
நிலையம் அமைக்கப்படும்.
23. பெரம்பலூரில்
வெங்காயம் பதப்படுத்தும்
தொழிற்சாலை அமைக்கப்படும்.
24. வேப்பந்தட்டையில்
அரசு வேளாண்மைக்
கல்லூரி தொடங்கப்படும்.
25. கொளத்தூரில்
தொழிற்பயிற்சி
நிலையம் அமைக்கப்படும்.
26. வெள்ளாற்றின்
குறுக்கே திருவாலந்துறை
கிராமத்தில் மேம்பாலம்
கட்டப்படும்.
27. காவிரி
கூட்டுக் குடிநீர்
திட்டம் வாலிகண்டபுரம்
வரையில் நீட்டிக்கப்படும்.
28. தேவையூரில்
உள்ள தம்பை கிராமத்தில்
நடுநிலைப் பள்ளி
தொடங்கப்படும்.
29. அன்னமங்கலம்
மற்றும் கொட்டரை
கிராமத்தில் கால்நடை
மருத்துவமனை தொடங்கப்படும்.
30. வேதா நதியின்
குறுக்கே வேப்பந்தட்டை
பிள்ளையார் கோவிலில்
இருந்து பழையூர்
வரையிலும் மற்றும்
பாக்குத்தோப்பான்
கோவிலிலும் மேம்பாலம்
கட்டப்படும்.
31. திருச்சி - சென்னை
தேசிய நெடுஞ்சாலையில்
செங்குனம் அருகே
மேம்பாலம் கட்ட
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
32. குன்னம்
ஆரம்ப சுகாதார
நிலையம் அரசு
மருத்துவமனையாக
உயர்த்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம்
1. குண்டாறு
- வெள்ளாறு இணைப்புத்
திட்டம் செயல்படுத்தப்படும்.
2. காவிரியில்
உபரிநீரை புதுக்கோட்டையில்
ஓடும் அக்னி ஆற்றுடன்
இணைக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.
3.அறந்தாங்கி,
கரம்பக்குடியில்
பாதாள சாக்கடை
திட்டம் செயல்படுத்தப்படும்.
புதுக்கோட்டையில்
முறைப்படுத்தப்படும்.
4.புதுக்கோட்டை
புறவழிச்சாலையில்
புதிய ஒருங்கிணைக்கப்பட்ட
பேருந்து நிலையம்
கட்டப்படும்.
5. திருவப்பூர்,
கருவேப்பிலையான்
கேட் பகுதிகளில்
ரயில்வே பாலம்
அமைக்கப்படும்.
6. கோட்டைப்பட்டினத்தில்
கடல் உணவு பதப்படுத்தும்
குளிர்சாதனக்
கிடங்கு அமைக்கப்படும்.
7. திருமயத்தில்
அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி
தொடங்கப்படும்.
8. புதுக்கோட்டை
திருமயம் / ஆலங்குடி / ஜெகதாப்பட்டினம்
/ கீரனூர் / மீமிசல் மணமேல்குடியில்
குளிர்பதனக் கிடங்குகள்
அமைக்கப்படும்.
9. புதுக்கோட்டையில்
கால்நடை மருத்துவக்
கல்லூரி தொடங்கப்படும்.
10. திருமயம்,
விராலிமலை சுற்றுலா
மையங்கள் ஆக்கப்படுவதோடு
சித்தன்னவாசல்
சுற்றுலா மையம்
மேம்படுத்தப்படும்.
11. மாயனூர்
தடுப்பணையிலிருந்து
காவிரி உபரி நீர்
மருங்காபுரி,
மரவாமதுரை வழியாக
கவிநாடு பெரிய
கண்மாய்க்கு நீர்
கொண்டு வர முயற்சிகள்
மேற்கொள்ளப்படும்.
12. விராலிமலை
/ பொன்னமராவதி
/ கீழத்தூர்
/ மாத்தூர் திருமயம்
/ ஆலங்குடியில்
தொழிற்பேட்டைகள்
அமைக்கப்படும்.
13. புதுக்கோட்டை,
கந்தர்வக்கோட்டை,
ஆதனகோட்டை,
ஆலங்குடியில்
முந்திரி பதப்படுத்தும்
தொழிற்சாலைகள்
அமைக்க ஆவன செய்யப்படும்.
14. திருமயம்,
கீரனூரில் அரசுப்
பேருந்து பணிமனை
அமைக்கப்படும்.
15. அம்புலி
ஆறு, அக்னி
ஆறு, வெள்ளாறு
ஆகியன காவிரி
- வைகை - குண்டாறு
இணைப்பு திட்டத்தில்
சேர்க்க முயற்சிகள்
மேற்கொள்ளப்படும்.
16. ஆலங்குடி
/ கீரமங்கலத்தில்
நறுமணத் தொழிற்சாலைகள்
அமைக்கப்படும்.
17. புதுக்கோட்டையில்
வேளாண்மைக் கல்லூரி
தொடங்கப்படும்.
18. புதுக்கோட்டை
பொன்னமராவதி,
அறந்தாங்கி,
கீரனூர், ஆலங்குடி, விராலிமலை,
திருமயம் அரசு
மருத்துவமனைகள்
நவீனப்படுத்தப்படும்.
19. விராலிமலை,
கீரனூர், கந்தர்வகோட்டையில்
உழவர் சந்தை அமைக்கப்படும்.
20. அறந்தாங்கியில்
பொறியியல் கல்லூரி
தொடங்கப்படும்.
21. அறந்தாங்கியில்
சுற்றுச் சாலை
அமைக்கப்படும்.
22. திருமயம்
ஒன்றியத்தில்
புலிவலம் ரயில்வே
பாதையில் மேம்பாலம்
கட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
23. கரம்பக்குடியில்
பாலிடெக்னிக்
கல்லூரி தொடங்கப்படும்.
24. புதுக்கோட்டை,
கீரனூர், கந்தர்வகோட்டையில்
நேரடி கொள்முதல்
நிலையம் அமைக்கப்படும்.
25.காவிரி
கூட்டுக் குடிநீர்
திட்டம் கீரனூருக்கு
விரிவுபடுத்த
ஆவன செய்யப்படும்.
26. திருச்சி
- மதுரை தேசிய
நெடுஞ்சாலையில்
விராலிமலை மற்றும்
கொடும்பாளூர்
அருகே மேம்பாலங்கள்
கட்டப்படும்.
27. அன்னவாசலில்
அரசு மகளிர் மேல்நிலைப்
பள்ளி தொடங்கப்படும்.
28.புதுக்கோட்டையில்
டாக்டர் முத்துலட்சுமி
ரெட்டிக்குச்
சிலை நிறுவப்படும்.
விராலிமலையில்
மயில்கள் சரணாலயம்
அமைக்கப்படும்.
30.கொள்ளிடம்
உபரிநீர் திட்டம்
குன்றாண்டார்
கோயில் வரை நீட்டிக்கப்படும்.
31. காவிரி
கூட்டுக் குடிநீர்
திட்டம் கரம்பகுடிக்கு
விரிவுபடுத்தப்படும்.
32. புதுக்கோட்டையில்
நூறாண்டுகள் பழைமை
வாய்ந்த நகராட்சிக்
கட்டடம் வரலாற்றுச்
சின்னமாகப் பாதுகாக்கப்படும்.
அதற்குப் பதிலாக
நகராட்சிக்குப்
புதிய கட்டடம்
கட்டப்படும்.
33.புதுக்கோட்டை
நகரத்தில் அரசு
மருத்துவமனை மீண்டும்
தொடங்கப்படும்.
34. கல்குவாரி
தொழிலாளர்களுக்கு
வேலை வாய்ப்பு
வழங்கப்படும்.
35.ஆலவயல்
கிராமத்தில் காய்கறி
குளிர்பதன நிலையம்
அமைக்கப்படும்.
36.பொன்னமராவதி,
ஆலங்குடி,
இலுப்பூர் பேரூராட்சிகள்
நகராட்சிகளாகத்
தரம் உயர்த்தப்படும்.
இராமநாதபுரம் மாவட்டம்
1. தனுஷ்கோடி
- புதிய சாலை
அருகில் தென்கடல்
பகுதியில் தூண்டில்
வளைவு அமைக்கப்படும்.
2. நடராஜபுரம்
- இராமகிருஷ்ணாபுரம்
புதிய சாலை மற்றும்
காரையூர் பகுதிகளில்
மீனவர்கள் பயன்பாட்டிற்கு
என்று சமுதாயக்
கூடங்கள் கட்டப்படும்.
3. வைகை
ஆற்றில் பார்த்திபனூர்
அணையிலிருந்து
இடது மற்றும்
வலது வாய்க்கால்களுக்குச்
சிமென்ட் தரை
போடப்படும்.
4. இராமநாதபுரம்,
பரமக்குடி மற்றும்
கீழக்கரை ஆகிய
ஊர்களில் பாதாள
சாக்கடை திட்டம்
செயல்படுத்தப்படும்.
5. இராமநாதபுரம்
- திருச்சி மற்றும்
இராமநாதபுரம்
- தூத்துக்குடி
நெடுஞ்சாலைகள்
நான்கு வழிச்சாலைகளாக
மாற்ற நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
6. கமுதியில்
மலட்டாற்றில்
தடுப்பணை கட்டப்படும்.
7. முதுகுளத்தூரில்
பொறியியல் கல்லூரியும்.
தொழிற்பயிற்சி
நிலையமும் தொடங்கப்படும்.
8. முதுகுளத்தூரில்
புறவழிச் சாலை
அமைக்கப்படும்.
9. சிக்கல்
மற்றும் பார்த்திபனூரில்
பேருந்து நிலையங்கள்
அமைக்கப்படும்.
10.ஏர்வாடியில்
மருத்துவ மற்றும்
மனநல சிகிச்சை
மையம் அமைக்கப்படும்.
11. தொண்டியில்
பேருந்து பணிமனை
அமைக்கப்படும்.
12. தேவிப்பட்டினம்
சுற்றுலா மையமாக
ஆக்கப்படும்.
13. திருவாடானை
ஊராட்சி பேரூராட்சியாகத்
தரம் உயர்த்தப்படும்.
14. புயல்
காலங்களில் மேலும்
படகுகளை நிறுத்துவதற்கு
வசதியாக நம்புத்தலையில்
ஓடும் ஆறு ஆழப்படுத்தப்படும்.
15. திருவாடானையில்
அரசு கலை அறிவியல்
கல்லூரி தொடங்கப்படும்.
16. திருவாடானை
தொகுதியில் பட்டணம்
காத்தான் கிராமத்தில்
உள்ள குப்பைக்
கிடங்கு வேறு
இடத்திற்கு மாற்ற
ஆவன செய்யப்படும்.
17. இராமநாதபுரம்
மற்றும் பரமக்குடியில்
குளிர்பதனக் கிடங்குகள்
அமைக்கப்படும்.
18. இராமேஸ்வரம்,
பரமக்குடி மற்றும்
R.S மங்கலத்தில்
உள்ள அரசு மருத்துவமனைகள்
நவீன மயமாக்கப்படும்.
19. இராமநாதபுரம்
தொகுதியில் மனங்குடி
ஊராட்சியில் தரவை
ஆற்றின் குறுக்கே
மேம்பாலம் கட்டப்படும்.
20. பரமக்குடி
மற்றும் R.S மங்கலத்தில்
மிளகாய் கொள்முதல்
செய்வதற்காக அரசு
கொள்முதல் நிலையங்கள்
திறக்கப்படும்.
21. முதுகுளத்தூர்
மேற்கு ஒன்றியம்
கீழகுளத்தில்
கால்நடை மருத்துவமனை
தொடங்கப்படும்.
22. பார்த்திபனூரில்
வெளிப்புறச் சுற்றுச்
சாலை அமைக்கப்படும்.
23. செவூர்
கிராமத்தில் வைகை
ஆற்றின் குறுக்கே
மேம்பாலம் கட்டப்படும்.
24. பார்த்திபனூரில்
நீர்ப்பாசன வசதிகளைப்
பெருக்குவதற்காக
இராஜகம்பீரம்
நாட்டார் கால்வாய்
திட்டம் நிறைவேற்றப்படும்.
25. சூடியூர்
வைகை ஆற்றின்
குறுக்கேயும்
பார்த்திபனூர்
கால்வாய் நெல்மதூர்
கால்வாய் ஆகியவற்றின்
குறுக்கேயும்
தடுப்பணைகள் கட்டப்படும்.
26. காவிரி
(திருச்சி)
- வைகை (முத்தனேந்தல்)
குழாய் இணைப்புத்
திட்டம் விரைந்து
செயல்படுத்தப்படும்.
27. நரிப்பையூரில்
பின்னலாடை பயிற்சி
மையம் தொடங்கப்படும்.
28. &