FAQ's

1. உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்
2. உங்களுக்கு OTP எண் அனுப்பப்படும்
3. அதனை உள்ளிடவும்
4. OTP-ஐ சமர்ப்பிக்கவும்
5. கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பவும்

2 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். அப்போதும் OTP கிடைக்காவிட்டால், மீண்டும் புதிய OTP-ஐ பெற முயலவும்.

இணையப்பக்கத்தைப் புதுப்பித்துவிட்டு அதே OTP-ஐ வைத்தி 2 நிமிடங்களுக்குள் மீண்டும் முயற்சி செய்யலாம். அப்போதும் பிழை நேர்ந்தால், நீங்கள் புதிய OTP-ஐ பெற்றுக்கொள்ளலாம்.

தேவையில்லை, ஆயினும் நீங்கள் உங்கள் விவரங்களைத் திருத்த விரும்பினால், பதிவுசெய்யலாம்.

இணையதள முகப்புப் பக்கத்தின் வலப்புறம் மேல் பக்கமாக தங்கள் மொழியை (தமிழ் அல்லது ஆங்கிலம்) தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
ஆம், உங்கள் தற்போதைய உறுப்பினர் எண் உங்களுக்கு நினைவில் இல்லாவிட்டாலும், நீங்கள் புதிய இணையவழி உறுப்பினராகப் பதிவுசெய்து கொள்ளலாம்.
சிவப்பு நிறத்தில் விண்மீன் குறியிட்ட களங்கள் மட்டுமே கட்டாயம் பதிவுசெய்யவேண்டியவை. மற்றவை கட்டாயமல்ல.
வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிடுவது கட்டாயமல்ல.
ஆம், பெற இயலும். புகைப்படத்தைப் பதிவேற்றுவது கட்டாயமல்ல. புகைப்படம் இல்லாமலும் உங்கள் அடையாள அட்டையினைப் பெறலாம்.
படிவத்தை முழுமையாக நிரப்பியதும், உங்கள் இணையவழி உறுப்பினர் அட்டை தயாராகிவிடும். அதன் கீழே உள்ள முதல் தேர்வில் “பதிவிறக்கு”வதற்கான பொத்தானை அழுத்தி அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் உங்கள் உறுப்பினர் அட்டை எண் மற்றும் பதிவிறக்கிக் கொள்வதற்கான இணைப்பும் உங்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பிவைக்கப்படும்.
இல்லை, இணையவழியில் உறுப்பினராகச் சேர நீங்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
இணையவழி உறுப்பினரான நீங்கள் உட்கட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமைபெற வேண்டுமாயின் முதலில் உங்களது தகவல்கள் உள்ளூர் கழகப் பிரதிநிதி ஒருவரால் சரிபார்க்கப்பட வேண்டும். மேலும் கழக உறுப்பினராக விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு ஓராண்டினை நிறைவுசெய்திருக்கவோ அல்லது தகுதியான புதிய உறுப்பினர்கள் 25 பேரைக் கழகத்தில் இணைத்திருக்கவோ வேண்டும்.
18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். விதிமுறைகள் & நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.
உறுப்பினரானதும் உங்கள் பரிந்துரைக் குறியீட்டைக் குறுஞ்செய்தி, வாட்சப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் வாயிலாகப் பகிர்ந்துகொள்ளலாம்.
OTP-ஐ சமர்ப்பித்தவுடனே அடுத்தகட்டமாக நீங்கள் பெற்ற பரிந்துரைக் குறியீட்டை அதற்கான களத்தில் உள்ளிடவும்.
உங்கள் உறுப்பினர் அடையாள அட்டை தயாரானதும், ‘திருத்து/சரிபார்’ என்னும் தேர்வுகள் அதன் கீழே இருக்கும். அதைப் பயன்படுத்தித் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.