New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் அரிசி மூட்டைகளை முன்கள பணியாளர்களுக்கு வழங்கினார்.

பதிவு: 30 May 2021, 10:45:52 மணி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கழக உடன்பிறப்புகளுக்கு அறிவுறுத்தியிருந்தபடி, இன்று (29.5.2021), ஈரோடு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு வீட்டுவசதித் துறை அமைச்சருமான திரு. சு.முத்துசாமி அவர்களது சார்பாக ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரம் அரிசி மூட்டைகளை வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அதனை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்கள பணியாளர்களுக்கு வழங்கினார்.
அதுபோது, மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.