New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நல உதவிகள் வழங்கினார்.

பதிவு: 03 Jun 2021, 10:32:03 மணி

இன்று (02.06.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நல உதவிகள் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:
வார்டு 67 - ஜி.கே.எம் காலனியில், நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், கொரோனா நோய்த் தொற்று ஊரடங்குக் காலத்தில் வேலை வாய்ப்பின்றி இருந்த 100 ஓவியர்களுக்கு உதவிகளை வழங்கினார். ஸ்ரீவாரி மண்டபத்தில், கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு காலத்தில் வேலை வாய்ப்பின்றி இருக்கும் ஒளி - ஒலி அமைப்பாளர்கள் 100 நபர்களுக்கு உதவிகளை வழங்கினார். அரிச்சந்திரன் விளையாட்டு மைதானத்தில், மூத்த முன்னோடிகள் 250 நபர்களைப் பாராட்டிச் சிறப்புச் செய்தார்.