New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் நீலகிரி மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

பதிவு: 15 Sep 2021, 10:56:15 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
நீலகிரி மாவட்டம்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் - உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர் மற்றும்
கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (14.9.2021) மாலை, நீலகிரி  மாவட்டம், அ.தி.மு..வைச் சேர்ந்த உதகை தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த உதகை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.மாயன் (எ) மாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி எஸ்.சசிகலா, ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.சிவசுப்பிரமணியம், உல்லத்தி ஊராட்சி மன்ற தலைவர் டி.டி.சந்தோஷ்குமார், துணைத் தலைவர் திருமதி எஸ்.ராஜவேணி சிவகுமார், முள்ளிகூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி ஆர்.பிரேமா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்கள் எஸ்.சக்கரவர்த்தி, பி.அருண், ஊராட்சி செயலாளர் கே.பெள்ளி, எப்பநாடு ஊராட்சி மன்ற உறுப்பினர் பி.முருகன் - நெல்லியாளம் நகரத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் பி.ராயின், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.கோயா, சாலினஸ் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை தலைவர் கே.அப்பாஸ், வர்த்தகர் அணி துணைச் செயலாளர் கே.சுனீர்பாபு, சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர் ஏ.செகீர்உசேன் - கோத்தகிரி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஜே.எம்.தேவராஜ், கொணவக்கரை ஊராட்சி தலைவர் எச்.ஜெயபிரியா, நெடுகுளா ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி எஸ்.சுகுணா, குஞ்சப்பனை ஊராட்சி மன்றத் தலைவர் பி.மணிகண்டன் - குன்னூர் நகரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. கட்சியின் மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ராஜேஷ்கண்ணன் - அ.ம.மு.க. தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் எல்.கிருஷ்ணமூர்த்தி - தே.மு.தி.க. குன்னூர் நகரச் செயலாளர் பி.சுரேஷ்குமார் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ராஜன், எஸ்.சந்தானகிருஷ்ணன், பி.புஷ்பகுமார், எம்.கே.உத்தமன், எஸ்.விஜயராஜ், ஆர்.கிஷோர், எஸ்.அனுசியா, பாலன், டாக்டர் ஆனந்த், தாமரைக்கண்ணன், சிவராஜ், சரண்குமார், விக்னேஷ், ஆர்.ஹரிஹன், ஆர்.பாபு, கே.சிவகுமார், டி.செல்வரத்தினம் ஆகியோர்  தி.மு..வில் இணைந்தனர்.
 
அதுபோது பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,   அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர் பா.மு.முபாரக், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் - நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
***