New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. - அ.ம.மு.க. - நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

பதிவு: 15 Sep 2021, 10:57:33 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்,
அ.தி.மு.க.வைச் சேர்ந்த
அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளரும் - அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பெருந்தலைவருமான எஸ்.அழகேசன் தலைமையில் 
கன்னியாகுமரி கிழக்கு அ.ம.மு.க. மாவட்டச் செயலாளர் பி.செந்தில்முருகன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட
அ.தி.மு.க. - அ.ம.மு.க. - நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (14.9.2021) மாலை, கன்னியாகுமரி கிழக்கு  மாவட்டம், அ.தி.மு..வைச் சேர்ந்த அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளரும் - அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பெருந்தலைவருமான எஸ்.அழகேசன்  அவர்கள் தலைமையில் அ.ம.மு.க.வை சேர்ந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.செந்தில்முருகன்  அ.தி.மு.க.வைச் சேர்ந்த கூட்டுறவு சங்க இயக்குநர் சகாய ரோச், அ.ம.மு.க. பகுதிச் செயலாளர்கள் ஜோன்ஸ்கிரீன், அர்னால்டு ரஸ்கின், நாகர்கோவில் மாநகர தலைவர்கள் பரமசிவன், காளிதாஸ், மாநகர துணைச் செயலளார்கள் மகேஷ், வினோத், நாகர்கோவில் அம்மு ஆன்றோ, அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆன்றோ, கோபுராஜ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திமின்குமார், ராஜகுமார், இளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜேஷ், சதீஷ் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் செயலாளர் அரிகிருஷ்ணபெருமாள், இளைஞர் அணி செயலாளர் மோகன், முட்டம் ஸ்டாலின், கிளைச்செயலாளர் அன்பழகன் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நாகர்கோவில் தொகுதி தலைவர் வர்க்கீஸ், துணைத் தலைவர் டாக்டர் ஆனந்த், மாநகர செயலாளர்கள் அலெக்ஸ், விஷ்ணு, மெலிக்கன், ஒன்றிய கவுன்சிலர்  தி.மு..வில் இணைந்தனர்.
 
அதுபோது பொதுச்செயலாளர் மாண்புமிகு துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,      அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் என்.சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு த.மனோதங்கராஜ், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜன், ஒன்றியச் செயலாளர்கள் தாமரைபாரதி, மதியழகன், சற்குருகண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
***