New - DetailPage - DMK
header_right
திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல்.. திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை!

பதிவு: 16 Nov 2018, 07:51:19 மணி

சென்னை: கஜா தீவிரப் புயல் வலுவிழந்து புயலாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை மையத்தின் இயக்குநர், புவியரசன் தெரிவித்தார். சென்னையில் இன்று காலை 10.30 மணிக்கு, புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: கஜா அதி தீவிர புயல் இப்போது, தீவிர புயலாக வலு குறைந்து திண்டுக்கல் பகுதியில் நிலை கொண்டுள்ளது இது, அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக தலா 17 செமீ மழை பெய்துள்ளது. பேராவூரணி, பட்டுக்கோட்டையில் தலா 16 செமீ மழை பெய்துள்ளது. நெய்வேலி 14 செமீ, விருதாசாச்சலம், செங்கல்பட்டு தலா 12 செமீ மழை பெய்துள்ளது. காஞ்சிபுரம், தாம்பரத்தில் தலா 10 செமீ மழை பெய்துள்ளது. மரங்கள், மின் கம்பங்களை முறித்து போட்ட கஜா.. திருச்சியில் பெரும் சேதம்.. களத்தில் இறங்கிய கலெக்டர் கடலோரப் பகுதிகளில் காற்றின், வேகம் குறைந்துள்ளது. காலை 7 மணி நிலவரப்படி 23 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டுள்ளது. நாளை இந்த புயல் காற்றழுத்த மண்டலமாக வலு குறைந்து, அரபிக் கடலுக்கு சென்று சேர்ந்துவிடும். இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் பல பகுதிகளில், மழை இருக்கும். திண்டுக்கல், கரூர், தேனி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும். மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.