

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவில் அண்ணல் அம்பேத்கர் முழு உருவச் சிலையினை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பதிவு: 27 Jan 2022, 10:30:57 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள்
ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவில்
அண்ணல் அம்பேத்கர் முழு உருவச் சிலையினை
காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில், ஈரோடு மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, புதியதாக நிறுவப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு உருவச் சிலையை காணொலிக் காட்சி மூலமாக இன்று (26.1.2022) பிற்பகல் திறந்து வைத்தார். கழக துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., உடனிருந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் - மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா., தமிழக கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவக்குமார், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் திருச்செங்கோடு எம்.கந்தசாமி மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர்க் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
***