New - DetailPage - DMK
header_right
newimg
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ. 13.64 கோடி செலவில் பள்ளிகள், கல்லூரி விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

பதிவு: 02 Nov 2022, 17:15:55 மணி

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ. 13.64 கோடி செலவில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் மூன்று கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள உண்டு உறைவிடப் பள்ளிகள், மதுரை மாவட்டத்தில் 2 கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், நாகப்பட்டினம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 2 கல்லூரி விடுதிக் கட்டடங்கள் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.