New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை மாநகராட்சியில் பணி நீக்கம் செய்திருக்கும் 12 ஆயிரம் தற்காலிக தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, பணி நிரந்தரம் செய்திட ஆணையருக்கு கடிதம்

பதிவு: 19 Jan 2021, 17:34:31 மணி

தி.மு.க. தலைவரும் - தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக NULM திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென்று 12.1.2021 அன்று பணிநீக்கம் செய்திருக்கும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, அவர்களை அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று, இன்று (19-1-2021) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தை,  சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., - சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., ஆகியோர் நேரில் அளித்தனர்.  சோழிங்கநல்லூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உடனிருந்தார்.