New - DetailPage - DMK
header_right
நிதியுதவி கிடைத்திட குரல் கொடுத்ததற்காக தலைவர் அவர்களை நேரில் சந்தித்து ஆரணி எழிலரசி நன்றி தெரிவித்தார். அதுபோது கழகத்தின் சார்பில் 1 இலட்ச ரூபாய் குடும்ப உதவிநிதியாக வழங்கினார் கழகத் தலைவர்.

பதிவு: 04 Feb 2021, 10:20:21 மணி

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் நிகழ்ச்சியை கடந்த ஜனவரி 29ஆம் நிகழ்ச்சியினை திருவண்ணாமலையில் தொடங்கி, அன்று மாலை ஆரணி நிகழ்ச்சியில் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டபோது எழிலரசி என்ற இளம் பெண்ணை பேச வைத்தார். அப்போது அவர் சிலிண்டர் வெடித்ததில் அவரது அம்மா இறந்து விட்டார் என்றும்,  அவரது குடும்பத்திற்கு  நிதி உதவியாக 2 லட்சம் கொடுக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவித்தார்கள். ஆனால் இதுவரையில் நிதி உதவி வந்து சேரவில்லை என்றும், பலமுறை மனு அளித்தும் பயனில்லை என்றும் கூறிய எழிலரசியிடம் கழகத் தலைவர் அவர்கள் “கவலைப்படாதீர்கள் - ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் குறைகள் தீர்க்கப்படும் என்பது நாம் வகுத்திருக்கும் திட்டம். ஆனால் உங்கள் பிரச்சினை அதில் அடங்காது, உடனடியாக உங்கள் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்’ என்று சொன்னார். இதனை அறிந்த தமிழக அரசு அவசர அவசரமாக பெண்மணியின் வங்கிக் கணக்கில் ரூ.2 இலட்சத்தை செலுத்தி விட்டனர்.
தனது கோரிக்கையை கழகத் தலைவர் அவர்களிடம் தெரிவித்த 24 மணிநேரத்திற்குள், தமிழக அரசின் உதவி கிடைத்ததற்காக, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை  இன்று (2.2.2021), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், எழிலரசி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அதுபோது, கழகத் தலைவர் அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பில் 1 இலட்ச ரூபாய் குடும்ப உதவிநிதியாக அளித்ததுடன், மத்திய அரசிடமிருந்து அவரது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய உதவிகளை, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் விரைந்து பெற்றுத் தருவேன் என்று உறுதி அளித்தார்.
  
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தரணிவேந்தன், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ., விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ., வந்தவாசி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், எம்.எல்.ஏ.,  ஆகியோர் உடனிருந்தனர்.