விவசாயிகளின் தொடர் போராட்டமும், அவர்களின் மரணமும் ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 27/12/2016


தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் மற்றும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் விவசாயப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், நேற்று (டிசம்பர் 26) திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில், காவல்துறையின் தடுப்புப் முயற்சிக்கிடையே முத்துப்பேட்டை ஒன்றியம் கோவிலூரைச் சேர்ந்த 45 வயது விவசாயி மகாலிங்கம் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு, அதிகாலை 3 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அவரது உடலைக் கிடத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
விவசாயி மகாலிங்கத்தின் குடும்பத்தாருக்கு தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட தமிழக எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், இத்தகைய இறப்புகளுக்கு மாநில அரசும், மத்திய அரசும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், விவசாயிகளின் தொடர் போராட்டமும், அவர்களின் மரணமும் ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார். 


Share this News: