தமிழகத்துக்கு வரும் மத்திய குழுவினர் மக்கள் பிரதிநிதிகளை கட்சி சார்பின்றி சந்தித்து கலந்தாலோசிக்க வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 27/12/2016


வர்தா புயல் சேதங்களை மத்திய குழு பார்வையிட வருவதன் மூலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக வந்த மத்திய குழுவினரின் கவனத்துக்கு பல செய்திகள் போய் சேரவில்லை. அப்படிப்பட்ட நிலை இம்முறை ஏற்படாமல், மத்திய குழுவினர் தமிழகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை கட்சி சார்பின்றி சந்தித்து கலந்தாலோசிக்க வேண்டும் என்று தளபதி வலியுறுத்தியுள்ளார். மேலும், வர்தா புயலால் ஏற்பட்ட முழு சேதத்தையும் சீரமைக்கும் வகையில் தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 


Share this News: