தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை குறித்து செய்தியாளர்கள் முதல்வரிடம் விளக்கங்கள் கேட்டு நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 27/12/2016


தலைமைச் செயலகத்தில் நடந்த வருமானவரித் துறை சோதனையின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை மத்தியில் இருக்கும் அரசு, பாரதீய ஜனதா கட்சி, வருமான வரித்துறை அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களை சந்தித்து கேள்வி கேட்காத செய்தியாளர்கள், இப்போதாவது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து, விளக்கங்களை கேட்டு, நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தளபதி கூறினார்.  


Share this News: