கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தி.மு.க. போராட்டத்தில் ஈடுபடும் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 28/12/2016


கரும்பு டன் ஒன்றுக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 2850 ரூபாய் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2011-ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான அதிமுக ஆட்சியில், கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உடனடியாக கொடுக்கப்படவில்லை என்பதோடு, 2000 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைக்கப்படுள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தியும் கூட இன்னமும் அங்குள்ள கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை சரிவர கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், கரும்பின் பரிந்துரை விலையை உயர்த்தாமல் சென்ற ஆண்டு வழங்கிய அதே விலையிலேயே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.  
பொங்கலுக்கு முன்பாகவே கரும்பு டன் ஒன்றுக்கு 3500 ரூபாய் கொள்முதல் விலை கொடுக்கவும், உடனடி உத்தரவாக தனியார் மற்றும் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நிலுவையில் உள்ள தொகையை வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் அதிமுக அரசை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் விரைவில் அனைத்து கரும்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து தி.மு.க. போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார். 


Share this News: